9 சர்வதேச விருதுகளை வென்ற ‘காகித பூக்கள்’

ஸ்ரீ சக்திவேல் சினி கிரியேஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காகித பூக்கள்’. S.முத்து மாணிக்கம் தயாரித்து, கதை எழுதி, இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகனாக லோகன் மாணிக் அறிமுகமாகிறார். கதாநாயகியாக பிரியதர்ஷினி அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரங்களில் அப்புச்சி கிராமம் புகழ் பிரவீன் குமார் மற்றும் சமீபத்தில் மறைந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் புகழ் நடிகர் தவசி ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு சிவபாஸ்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். தேசிய விருது பெற்ற ஒத்த செருப்பு படத்திற்கு படத்தொகுப்பு செய்த ஆர்.சுதர்சன் தான் இந்த படத்தின் படத்தொகுப்பை கவனிக்கிறார். ஓடு ராஜா ஓடு என்கிற படத்திற்கு இசை அமைத்த தோஸ் நந்தா இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார் குடியாலும் தனது பொறுப்பின்மையாலும் தனது அன்பான மனைவியை பிரிந்து வாடும் கணவன், மீண்டும் தனது உயிரை பணயம் வைத்து அவளை அடைகிறான். ஆனாலும் மனதில் ஏற்பட்ட வடுக்கள் மறையுமா..? ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது அதை தவறவிட்டு விட்டால் மீண்டும் அப்படி ஒரு வாய்ப்பை திரும்பவும் அடைய முடியாது என்பதை மையப்படுத்தி இந்த காகித பூக்கள் படம் உருவாகியுள்ளது.

இந்தப்படத்தின் இயக்குனர் முத்து மாணிக்கம் இந்தப்படத்தை இயக்கியுள்ளதை பார்க்கும்போது அறிமுக இயக்குனர் இயக்கிய படம் என்கிற உணர்வே ஏற்படாது. தாகூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த அறிமுக இயக்குனர் என இவருக்கு கொடுக்கப்பட்ட விருதே அவரது திறமைக்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது. இந்தக்கதைக்கு பொருத்தமான நடிகர், நடிகையர்களை தேர்வு செய்து நடிக்க வைத்துள்ளனர். தவிர இந்த படத்தின் சிறப்பம்சமாக இந்த படத்தின் இசையும் பாடல்களும் அமைந்துள்ளது. இந்த படத்தின் நான்கு பாடல்களை கேட்கும்போது எண்பதுகளில் இளையராஜாவின் இசையில் வெளியான பாடல்களை கேட்பது போன்ற உணர்வு ஏற்படும். இதுவரை பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு 9 விருதுகளை பெற்றுள்ள இந்தப்படம், குடும்பத்தினர் அனைவரும் பார்த்து ரசிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.. குறிப்பாக இந்தப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படம் பார்த்துவிட்டு வெளியே வருபவர்கள் மனதில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உறுதி. படத்தைப் பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் பார்த்து ரசித்து விட்டு செல்பவர்களுக்கு இது ஒரு பொழுதுபோக்கு சித்திரம்.. சிந்திப்பவர்களுக்கு இது ஒரு பாடம் என்கிறார் இயக்குனர் முத்து மாணிக்கம்.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் தயாரிப்பு – இயக்கம் ; S.முத்து மாணிக்கம்  ஒளிப்பதிவு ; சிவபாஸ்கர்
படத்தொகுப்பு ; ஆர்.சுதர்சன்  இசை ; ஜோஸ் நந்தா  கலை ; டி பாலசுப்பிரமணியம்  நடனம் ; சிவபாஸ்கர் – ஸ்ரீ செல்வி  ஸ்டன்ட் மாஸ்டர் ; ஆக்ஷன் பிரகாஷ்  பாடலாசிரியர்கள் ; கார்த்திக் நேத்தா, கவிபாஸ்கர், தமிழாங்கன், பாக்கியம் சங்கர்

மக்கள் தொடர்பு ; KSK செல்வா