இருமொழி திரைப்படமான ‘குபேரா’வின் முதல் பாடல் “போய்வா நண்பா” இப்போது வெளியாகி இணையத்தில் புயலாக சுழன்று கொண்டிருக்கிறது. இயக்குனர் சேகர் கம்முலா, தனுஷ் மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் உள்ளிட்ட திறமைமிக்க மூவரும் இணைந்து ‘போய்வா நண்பா’வை உண்மையிலேயே சிறப்பான பாடலாக மாற்றியுள்ளனர். விவேகாவின் பாடல் வரிகள் மற்றும் இசைக்கு தனுஷ் தனது வித்தியாசமான குரலை வழங்குவதன் மூலம், இந்த பாடல் இசை, நடனம் மற்றும் சினிமாவின் முழுமையான கொண்டாட்டமாக உருவாகியுள்ளது. நாகார்ஜுனா, ரஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் மற்றும் தலிப் தஹில் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு நட்சத்திரப் பட்டாளத்தைக் கொண்ட ‘குபேரா’ ஒரு பிரம்மிக்க வைக்கும் திரைப்படமாக உருவாகியுள்ளது. இத்திரைப்படம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ், ஏஷியன் சினிமாஸ் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் ஆகியோரால் படைக்கப்பட்ட இருமொழி தயாரிப்பு ஆகும்.*******
‘குபேரா’ ஜூன் 20,2025 அன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது.