ஶ்ரீநிகஸ் புரடெக்ஷன் சார்பில் தயாரிப்பாளர்கள் டி. பால சுப்பிரமணி மற்றும் சதீஷ் குமார் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் குமார் இயக்கத்தில், வி.மதி நடிகராக அறிமுகமாகும் திரைப்படம் பிதா. மாறுபட்ட களத்தில் ஹிகிலூட்டும் திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்நிகவில் இயக்குநர் கார்த்திக் குமார் பேசியதாவது: தயாரிப்பாளர் தந்த வாய்ப்புதான் இந்த மேடையில் நான் நிற்கக் காரணம், நடிகராக இந்த படத்தில் மதியழகன் அறிமுகமாகிறார். அவர் மனதளவில் மிக அழகானவர்,*******
அவர் எங்கேயும் பேச மாட்டார் இந்த மேடையில் தான் முதல் முறையாகப் பேசியுள்ளார். மிக அமைதியானவர் ஒரு சிறு தொழிலைப் பார்த்தாலே பலர் வேறு துறைக்குச் சென்று விடுவார்கள் ஆனால் மதியழகன் சார் பத்து பன்னிரண்டு படங்களைத் தாண்டி திரைத்துறை தான் வேண்டும் என்று நிமிர்ந்து நிற்கிறார் தொடர்ந்து படங்கள் செய்கிறார் இப்படத்தில் முழு நடிகராக வருகிறார். அவரிடம் பயங்கரமான திறமை இருக்கிறது, அது இந்த திரைப்படத்தில் முழுமையாக வெளிப்படும், இந்தப் படத்திற்காக மதி சார் ரொம்பவும் மெனக்கெட்டுள்ளார். இதுவரை சொல்லாத புதிய விஷயத்தைச் சொல்ல முயற்சித்துள்ளோம் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
தயாரிப்பாளர் நடிகர் V மதி பேசியதாவது…இது வித்தியாசமான தருணம், நான் நடிகனாக அறிமுகமாகும் முதல் மேடை , இந்த மாதத்திலேயே தயாரிப்பாளராக நான்கைந்து படங்களுக்கு இந்த மேடைக்கு வந்திருக்கிறேன் இப்பொழுது நடிகனாக உங்கள் முன்னால் வந்திருக்கிறேன். உங்கள் முழு ஆதரவினை தர வேண்டுகிறேன், நீங்கள் எப்போதும் எனக்கு நல்ல ஆதரவைத் தந்து வந்திருக்கிறீர்கள் ஆனாலும் கடைசி படம் பெரிய அளவில் செல்லவில்லை, இருந்தும் ராமராஜன் சார் அவர்களை நடிக்க வைத்த பெருமை கிடைத்தது சந்தோஷம். இப்படத்தில் ஈழம், மேதகு பிரபாகரன் போன்ற விஷயங்களைப் பரபரப்புக்காகப் பயன்படுத்தவில்லை அவர்களை எந்த விதத்திலும் அவமதிக்கவில்லை மிகவும் உண்மையாக ஒரு படைப்பை உருவாக்கி உள்ளோம். இதுவரை இல்லாத வகையில் மிக வித்தியாசமான படைப்பாக இந்த படம் இருக்கும், உங்கள் அனைவர் ஆதரவையும் தாருங்கள் நன்றி.
தொழில் நுட்ப குழு எழுத்து இயக்கம் : V கார்த்திக் குமார் தயாரிப்பாளர்: D பால சுப்ரமணி & C சதீஷ் குமார் பேனர்: ஸ்ரீனிக் தயாரிப்பு கிரியேட்டிவ் ஹெட்: ஸ்ரீதா ராவ் இசை: ரஷாந்த் அர்வின் ஒளிப்பதிவாளர்: பிராங்க்ளின் ரிச்சர்ட் எடிட்டர் & கலரிஸ்ட் : MS.பாரதி பாடல் வரிகள் – மதன் கார்க்கி, விவேக், விஜேபி ரகுபதி வணிக நிர்வாகி: உமாபதி ராஜா கலை இயக்குநர்: சரவணன் மாரியப்பன் ஸ்டண்ட் டைரக்டர்: கனல் கண்ணன், ஸ்டன்னர் சாம் ஆடை வடிவமைப்பாளர் – பவித்ரா சதீஷ் ஆடை: SP சுகுமார் ஒப்பனை: ரஷ்யா மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)