இளையராஜா யுவன்சங்கர் ராஜா இணைந்து இசையமைக்கும் படம் தொடக்கம்

முதன்முறையாக இளையராஜா தனது மகன் யுவன்சங்கர் ராஜாவுடன் இணைந்து இசையமைக்கும் படத்தின் படபிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது. இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாகசைதன்யா கீர்த்தி ஷெட்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தை வெங்கட்பிரபு இயக்குகிறார்.இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார்.********

இந்தப்
படம் நடிகர் நாகசைதன்யாவின் முதல் தமிழ்தெலுங்கு பைலிங்குவல். அதேபோல, இயக்குநர் வெங்கட்பிரபுவுக்கும் தெலுங்கில் இயக்குநராக இது முதல் படம் என்பது  குறிப்பிடத்தக்கதுஇயக்குநர் வெங்கட்பிரபுநடிகர் நாகசைதன்யா இருவரும் புதிய படத்திற்காக இணைய இருக்கிறார்கள் என்ற அறிவிப்பு வந்ததில் இருந்து இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

இது குறித்து படக்குழு தெரிவித்திருப்பதாவது, ‘அக்கினேனி நாகேஸ்வர ராவ் ஆசியுடன் எங்களின் முக்கிய படைப்பான நடிகர் நாகசைதன்யாஇயக்குநர் வெங்கட்பிரபு இணையும் படத்தின் படப்பிடிப்பு நாளையில் இருந்து தொடங்குகிறது என தெரிவித்து கொள்கிறோம்என படத்தின் புதிய பதாகையுடன்  இந்த மகிழ்ச்சியான செய்தியை அறிவித்து இருக்கிறார்கள்.

இந்த பதாகையில் நாகசைதன்யாவின் படம் தொடர்பான எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. நாகசைதன்யா நின்று கொண்டிருக்கும்படி அவரது நிழல் உருவம் இருக்க அவரை நோக்கி பல ரெட்டார்கெட்டுகள் இருக்கும்படி கருப்புசிவப்பு வண்ணத்தில் வைப்ரண்ட்டாக இந்த பதாகை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பவன்குமார் வழங்க உள்ளார். திறமையான, பிரபலமான பல நடிகர்கள் தொழில்நுட்பகலைஞர்கள் இந்தப் படத்தில் பணியாற்ற உள்ளனர். அபூரி ரவி இந்தப் படத்தின் வசன கர்த்தாவாக பணியாற்ற உள்ளார். மற்ற விவரங்கள் அடுத்தடுத்து விரைவில் வெளியிடப்படும்.

தொழில்நுட்ப குழு விவரம்:* கதை, திரைக்கதை, இயக்கம்  : வெங்கட்பிரபுதயாரிப்பாளர்                 : ஸ்ரீனிவாசா சித்தூரிபேனர்  ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன்வழங்குபவர்: பவன்குமார்இசை                        : ‘மாஸ்ட்ரோஇளையராஜா, ‘லிட்டில்                மாஸ்ட்ரோயுவன் ஷங்கர் ராஜா வசனம்                       : அபூரி ரவி