வெற்றிடத்தை வெற்றிகரமாக நிரப்புகிறார் சந்தானம்” – கே.எஸ்.ரவிக்குமார்

கல்யாண் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில், சந்தானம் நாயகனாக நடித்திருக்கும்திரைப்படம் “80’ஸ் பில்டப்”.  நாயகியாக ராதிகா ப்ரீத்தி நடிக்கிறார். இப்படத்தின் அறிமுக நிகழ்வில் கே.எஸ்.ரவிக்குமார் பேசியதாவது: சந்தானம் தமிழ்சினிமாவில் நகைச்சுவை கதைக்கான கதாநாயகர்கள் இல்லை என்கின்ற வெற்றிடத்தை மிகச் சிறப்பாக நிரப்பி இருக்கிறார்.  நான் பிறர் இயக்கத்தில் நடிக்க செல்லும் போது இவர்களிடம் இருந்து என்ன கற்றுக் கொள்ள முடியும் என்று பார்ப்பேன். அதைப் பார்க்கும் போது எனக்கு என்ன தோன்றும் என்றால், நாமும் இவர்களைப் போல் நிதானமாக10 பதினைந்து டேக் எடுக்க வேண்டும், மெதுவாக காட்சிப்படுத்த வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன்.  ஆனால் கல்யாண் என்னிடம் கதை சொல்லியவுடன் எப்படியும் இதை எடுக்க 30 நாள் ஆகும் என்று நான்நினைக்க, அவர் 5 நாள் போதும் என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. **********

படப்பிடிப்பு தளத்தில் மொத்தகாட்சியும் ஒரே டேக்கில் படமாக்கப்பட இருக்கிறது என்றார். நான் அது நாடகத்தனமாக இருக்குமே என்றுகேட்க, இல்லை சார் நான் கட்  செய்து கட் செய்து காட்டிவிடுவேன் என்றார்அங்கு போய் பார்த்தால் பல்வேறுகேமராக்களை வைத்துக் கொண்டு ஒரு ரியாலிட்டி ஷோ சூட் செய்வதைப் போல் படம் பிடித்துக் கொண்டு இருந்தார். ஒரு இயக்குநருக்கு எடிட்டிங் அறிவு இருக்க வேண்டும்அது இருந்தால் தான் அவர்கள் நீண்டகாலம் நிலைக்க முடியும்அவருக்கு மிக உறுதுணையாக இருந்தது ஒளிப்பதிவாளர் ஜேக்கப். எல்லா இடங்களிலும் கேமராவை வைத்துவிட்டால் லைட்டை எங்கு தான் வைப்பது. அந்த தலைவலியை எல்லாம் மிகச்சிறப்பாக கையாண்டது ஒளிப்பதிவாளர் ஜேக்கப் தான். அவருக்கு வாழ்த்துக்கள்.சில படங்கள் சரியாக போகவில்லை என்றாலும் கூட அதில் தான் என்ன தவறு செய்தேன், அதைஎப்படி திருத்திக் கொள்ள வேண்டும் என்கின்ற புரிதல் அவருக்கு சிறப்பாக இருக்கிறதுகவுண்டமணி, நாகேஷ்போன்றோர் கூட நாயகனாக நடித்துவிட்டு மீண்டும் காமெடி செய்ய போய்விட்டனர். ஆனால் சந்தானம் தான்என்னவாக இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார். மேலும் இயக்குநருடனான புரிதல் அவருக்குசிறப்பாக இருக்கிறது. அவர் மேலும் பல வெற்றிகளைப் பெற என் வாழ்த்துக்கள். எல்லோரும் பேசுவதைப் பார்த்தால் ஆனந்தராஜை அயிட்டமாகவே மாற்றி விடுவார்கள் போல. ஆனந்த்ராஜ் ஆஃப் ஸ்கிரீனில் தான்அதிகமாக கமெண்ட் அடிப்பார். அவர் வில்லனாக நடித்த காலகட்டத்தை விட வெரைட்டியான கதாபாத்திரங்கள் இப்பொழுது தான் கிடைக்கத் துவங்கியிருக்கிறது. சுவாமிநாதனைப் பற்றி சொல்லவேவேண்டாம். அவர் மேடை நாடக நடிகர். இப்படத்தில் எனக்கு மாடர்ன் லோக்கல் எமன் கதாபாத்திரம். ஒருகைலி மற்றும் டிசர்ட்டை மட்டும்  கொடுத்து அனுப்பிவிட்டனர். நான் வலுக்கட்டாயமாக கதாயுதம் வேண்டும்என்று கேட்டு வாங்கிக் கொண்டேன். விழாவின் நாயகன் ஜிப்ரான் மெலடி கிங். அவரின் மெலடி பாடல்கள்எனக்கு மிகவும் பிடிக்கும். அவருக்கும் படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். இ பிற முக்கிய கதாபாத்திரங்களில் ஆடுகளம்நரேன்,  இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், மொட்டை ராஜேந்திரன், ஆனந்த்ராஜ், இயக்குநர் சுந்தர்ராஜன்,  தங்கதுரை, சுவாமிநாதன், கும்கி அஷ்வின், சுபாஷினி கண்ணன், சங்கீதா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைக்க, ஜேக்கப் ரத்தினராஜ்  ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்தின் டிரைலர் மற்றும்இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது.

நடிகர் சந்தானம் பேசும் போது,  எல்லோருக்குமே வாழ்வில் ஒரு பயம் வரும். அப்படி ஒரு பயம் வரும்போதெல்லாம் என் பின்னால் இருந்து என்னை தாங்கிப் பிடிக்கும் என் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. இந்தடைட்டிலை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சார் தான் வைத்திருப்பாரோ என்று தோன்றுகிறது. நான் அவரைஅண்ணாஎன்று அழைப்பேன். அவரும் என்னை பதிலுக்கு அண்ணா என்று அழைப்பார். கோயமுத்தூர்ஸ்லாங்கில் பேசிக் கொள்வது போல் பேசிக் கொள்வோம். நான் நாள்கணக்கில் கொஞ்சம் அதிகம் சம்பளம்வாங்கிக் கொண்டு இருந்த காலத்தில் என்னை அணுகி, இடம் வாங்கி விட்டீர்களா..? என்று கேட்டார். இல்லைஎன்றதும் இந்த நாள் கணக்கில் சம்பளம் வாங்குவதை விட்டுவிட்டு மூன்று படங்களுக்கு மொத்தமாக சம்பளம்வாங்கிக் கொள்ளுங்கள். அதில் முதலில் ஒரு இடத்தை வாங்குங்கள்என்று வழிகாட்டி என்னை முதன்முதலாகஇடம் வாங்க வைத்த தயாரிப்பாளர் அவர் தான். தானும் வளர வேண்டும். தன்னுடன் சேர்ந்து மற்றவர்களும் வளரவேண்டும் என்கின்ற நல்லெண்ணம் அவருக்கு உண்டு.  ரொம்பவே ஞானம் உள்ள புரொடியூஷர்ஞானவேல்ராஜா. 2024ம் ஆண்டு ஞானவேல்ராஜாவுக்கான ஆண்டு என்று கூறினார்கள். இது எனக்கு முன்பேதெரியும். ஏனென்றால் அவர் எப்படி சிந்திப்பார் என்பதை நான் அறிவேன். என் படங்கள் சரியாக போகாதபோது, வீட்டிற்கு வந்து என்னுடன் கலந்தாலோசித்து எனக்கு ஆலோசனைகள் வழங்குவார்.  அது போல்தனஞ்ஜெயன் சார் தயாரிப்பில் கண்டேன் காதலை படத்தில் நடிக்கும் போது ஒரு கிராமத்து கெட்டப் கொடுத்துஒட்டு மீசையோடு நடிக்க வைத்தது தனஞ்ஜெயன் சாரின் முடிவு தான். தயாரிப்பாளராக மட்டுமின்றி  கதாபாத்திரவடிவமைப்பையும் யோசிக்கும் தனஞ்ஜெயன் உடன் இருக்கும் போது ஸ்டுடியோ க்ரீன் இன்னும் பலஉச்சங்களை தொடும் என்று நம்புகிறேன்.

இயக்குநர் கல்யாண் என்னிடம் எப்போதுமே கால்ஷீட் கேட்டுக் கொண்டே இருப்பார்.  நான் என்னிடம் தேதிஇல்லை என்று சொல்லிக் கொண்டே இருப்பேன். அப்படி ஒரு முறை கேட்கும் போது 15 நாள் மட்டுமே எனக்குப்ரேக் இருக்கிறது என்று சொன்னேன்.  உடனே அப்படி என்றால் வாருங்கள் சார் நாம் டாக்கி போர்ஷனைமுடித்துவிடுமோம் என்று கூறினார்.  எனக்கு அதிர்ச்சி ஆகிவிட்டது. எப்படி முடிப்பீர்கள், மீது உள்ளதைஎப்போது எடுப்பீர்கள் என்று கேட்டேன். ஒரு படப்பிடிப்புக்கு செல்வதற்கு 20 நாட்கள் முன்பே எப்படிபடப்பிடிப்பை நடத்துவது என்று திட்டம் இடுவார்கள். இவர் 20 நாளில் மொத்த படப்பிடிப்பையே எப்படிமுடிப்பது என்று திட்டமிடுகிறார். பிக் பாஸ் ஹவுஸை விட எங்கள் படப்பிடிப்பு தளத்தில் அதிக கேமராக்கள்இருக்கும். எல்லோரும் அனகோண்டா முட்டையில் ஆம்லேட் போடுவார்கள் என்றார், இயக்குநர் கல்யாண்அவிச்ச முட்டையில் ஆம்லேட் போட்டுவிடுவார்.  சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது போனில் ஒருகுளோஷப் ஷாட் எடுத்துக் கொண்டு போவார்.  சூட்டிங் ஸ்பாட்  டாஸ்மாக் கடையின் முன்புறம் போல்எப்பொழுதும் கூட்டமாகத் தான் இருக்கும்.  எல்லோரும் கிம்பலை வைத்து படப்பிடிப்பு நடத்துவார்கள். இவர்கும்பலை வைத்துக் கொண்டு தான் படப்பிடிப்பு நடத்துவார்.  எனக்கே எப்படி இவ்வளவு ஆர்ட்டிஸ்டுகளைவைத்துக் கொண்டு இவ்வளவு வேகமாக படப்பிடிப்பு நடத்துகிறார் என்று ஆச்சரியமாக இருக்கும். என்னநினைத்தாரோ அதை சிறப்பாக எடுத்து முடித்திருக்கிறார் இயக்குநர் கல்யாண். அவருக்கு மிக உறுதுணையாகஇருந்தது ஒளிப்பதிவாளர் ஜேக்கப், நான் வீட்டுக்கு கிளம்புகிறேன் என்றால் என் காரில் ஒரு ரிக்கை கட்டிஅனுப்பிவிடுவார்கள். எனக்கு மட்டும் இல்லை. எல்லா ஆர்டிஸ்டையும் ஒரு கேமரா துரத்திக் கொண்டு செல்லும்.  இசையமைப்பாளர் ஜிப்ரான் உடன்ஓடி ஓடி உழைக்கணும்என்கின்ற படத்தில் பணியாற்றினேன். அப்படம்வெளியாகவில்லை. அதில் மிகச்சிறப்பான ஒரு மெலடி பாடலை கொடுத்து  இருந்தார். இப்படத்தில் அவரோடுபணியாற்ற முடிந்தது சிறப்பான அனுபவம்.  படத்தில்  இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் சார், சுந்தர்ராஜன் சார், முனிஷ்காந்த், கிங்க்ஸ்லி இவர்கள் நால்வரும் ஒரு அணி,  ஒரு கிண்டலான வசனம் வரும். அதை சிறப்பாக  ரவிக்குமார் சார் செய்திருக்கிறார்.

இயக்குநர் சுந்தர்ராஜன் சார் இறந்த பிணமாக நடித்திருக்கிறார்.  இறந்த பின் காமெடி செய்யும் கதாபாத்திரம். மனோபாலா சார், மொட்டை ராஜேந்திரன் மற்றும் மன்சூரலிகான் சார் மூவரும் ஒரு கேங். பாட்ஷா படத்திலரஜினி சாரை கம்பத்துல கட்டி வைச்சி அடிச்ச ஆனந்தராஜ் சாரை காட்டன் புடவை கட்ட வைச்சி காமெடிபண்ணியிருக்காங்க…. ஆடுகளம் நரேன் சாரை வேற மாதிரி இந்தப் படத்துல மாத்தி வச்சிருக்காங்க,  அதைபார்க்கும் போதே இந்த காமெடி எல்லாம் வொர்கவுட் ஆகும்ங்குற நம்பிக்கை வருது.  படத்துல வேலை பார்த்ததொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.

சந்தானம் படம் என்றாலே ஹீரோயின் கிடைக்கவில்லை என்கின்ற நியூஸ் வைரல் ஆகும். ஆனா இந்த படத்துலதமிழ் பேசத் தெரிஞ்ச ராதிகா அழகான ஹீரோயினா கிடைச்சிருக்காங்கஇந்தக் கதைக்குள்ள லவ்வைரொம்ப அழகா இயக்குநர் கொண்டு வந்திருக்காரு  என் தங்கச்சி கதாபாத்திரத்துல சங்கீதாநடிச்சிருக்காங்கஅவுங்ககிட்ட நான் போடுற ஒரு சவால்ல தான் மொத்த கதையும் மூவ் ஆகும். 80 காலகட்டத்துல எடுக்க வேண்டிய படத்தை இப்ப எடுத்திருக்காங்கன்னு நினைக்காம, 80ஸ்ல நடக்குற ஒருகதையை 80ஸ் காலகட்டத்துக்கே போயி நாம பாக்குறோம்னு நினைச்சி நீங்க பாத்தீங்கன்னா இந்தப் படம்உங்களுக்கு ரொம்ப பிடிக்கும். குடும்பத்தோடு பாக்கலாம்.  லாஜிக் இதெல்லாம் தூக்கி ஓரமா வச்சிட்டுப்பாத்தீங்கன்னா இந்தப் படம் குடும் பத்தோட பாத்து குதூகலிக்கிற ஒரு படமா இருக்கும். பத்திரிக்கைநண்பர்கள் இந்தப் படத்திற்கு ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன். “ என்று பேசினார்.