பேயின் அரசாங்கத்தை திரையில் காட்டிய படம் விரூபாக்‌ஷா

ஶ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா மற்றும் ஸ்டுடியோ கிரீன் கே.இ.ஞானவேல்ராஜா வெளியிட்டுருக்கும் படம் விரூபாக்‌ஷா. கார்த்திக் வர்மா தண்டு இயக்கியிருக்கும் இப்படம் தெலுங்கில் வெற்றிபெற்றுள்ளது. தமிழில் மறுபதிப்பு செய்திருக்கும் இப்படம் “அருந்ததி” பேய் படத்தை நினைவுக்கு கொண்டு வருகிறது. ஒரு ஊரில் இறந்துபோன ஒரு குழந்தையின் உடலை வைத்து ஒரு கணவனும் மனைவியும் செய்வினை செய்கிறார்கள். இதை அறிந்த ஊர் மக்கள் அவர்கள் இருவரையும் மரத்தில் கட்டி வைத்து உயிருடன் எரித்து கொன்றுவிடுகிறார்கள். இதை நேரில் பார்த்த அவர்களது மகன் அந்த ஊர் மக்களை பழிவாங்க இறந்து பிரேத ஆத்மாவாக மாறி எப்படி பழிதீர்க்கிறான் என்பதுதான் கதை.  படத்தின் ஆரம்பம் முதல் உச்சக்கட்ட காட்சிவரை அஜனீஷ் லோக்நாத்தின் இசை பார்வையாளர்களை அதிர வைக்கிறது. பேய் ஆட்சி செய்தால் ஊர் எப்படி இருக்கும் என்பதை இயக்குநர் திரையில் காட்டியிருக்கிறார். தெலுங்கு நடிகர்களான சாய்தரம் தேஜ், சம்யுக்தா மேனன், சுனில், ராஜுவ் கனகலா ஆகியோர் தமிழில் வலம் வருவார்கள்**********