தயாரிப்பாளர் சுந்தரின் ஸ்கிரீன் சினி நிறுவனம் தயாரித்து, நடிகர் ஜெயம் ரவி நடிக்க, இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி வரும் படம் “பிரதர்”. இப்பபடத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நடிகர் ஜெயம்ரவி பேசும்போது, ““மக்காமிஷி” பாடல் உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். நீங்கள் இந்த பாடலை கேட்பதற்கு முன்பு, சாண்டி மாஸ்டர் என்னை நடன ஒத்திகைக்கு அழைத்தார். அப்போது என்னுடன் என் மகன் ஆரவும் வந்திருந்தார். அப்போது இந்த பாடலில் வரும் முட்டி போட்டு ஆடும் ஒரு ஸ்டேப் எனக்கு வரவில்லை, அப்போது என் மகன் என்னை பார்த்து “என்னப்பா வயசாயிடுச்சா” என்றான். என்னால் அது தாங்க முடியவில்லை. நான் எனக்கு இரண்டு நாள் அவகாசம் கொடு என்று கேட்டு நன்கு பயிற்சி செய்து ஆடினேன். அதை கண்டதும் எனக்கு கை கொடுத்து “you did இட்” என்றான்.*********
எப்போதுமே உங்கள் அனைவரையும் சந்தோஷப்படுத்த தான் என்னுடைய முதல் படத்திலிருந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். உங்கள் அனைவரின் ஆதரவுக்கு நன்றி. மீடியா எப்போதும் என்னை ஒரு குழந்தை போன்று நான் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி திருத்திக்கொள்ள சொல்வதும், நான் செய்யும் ஒவ்வொன்றையும் அவர்கள் கவனிப்பதும் தான் என்னுடைய வளர்ச்சிக்கு காரணம், வேறு எதுவும் கிடையாது. ராஜேஷ் சார் அவர் என்னுடைய “brother” தான். நான் தான் “brother” என்ற டைட்டில் கொடுத்தேன். நீங்கள் சொல்லுவீர்கள் என்று நினைத்தேன், ஆனால் நீங்கள் சொல்லவில்லை. உங்களின் அடுத்த படத்திற்கும் டைட்டிலை நான் தருகிறேன். இந்த படம் ஒரு குடும்பப்படம் என்பதால் நிறைய பெயர்கள் வைக்க முயற்சி செய்தோம். “பூங்காவனம்” அப்படி இப்படி என்று என்ன என்னமோ பெயர்கள் வைக்க நினைத்தோம். ஹீரோயிசமாக ஒரு டைட்டில் வைக்கலாம் என்று நினைத்தால், இப்படம் ஒரு பேமிலி என்டர்டெயினர் என்று பேசிக்கொண்டிருக்கும் போது, “என்னதான் வைக்கிறது பிரதர்” என்றார்.
சார் இந்த டைட்டில் நன்றாக உள்ளது என்றேன், “என்னதான் வைக்கிறது பிரதர்” என்பதை டைட்டிலாக எப்படி வைக்க முடியும் என்றார். நான் “BROTHER” தான் டைட்டில் என்றேன். ஏனென்றால் எங்கள் டீமில் சுந்தர் சார், ராஜேஷ் சார் என அனைவரும் ஒருவரை ஒருவர் “BROTHER” என்று தான் அழைத்துக் கொள்வோம். அதனால் இந்த டைட்டில் சரியாக இருக்கும் என்று அவர் டீமில் கேட்ட அனைவரும் ஓகே சொல்லிவிட்டார்கள். இது ஒரு அக்காவுக்கும் தம்பிக்குமான ஒரு அழகிய கதை தான் இப்படம்.அந்த கதையை விட அழகாக இருக்கும் அக்கா நம் பூமிகா அக்கா, பல வருடங்களாக நாம் அவரை பார்த்து வருகிறோம், ஒரு முறை கூட அலுக்காத ஒரு முகம் அவர்களின் முகம். நான் என் நண்பர்களிடம் பூமிகா மேடம் எனக்கு அக்காவாக நடிக்க போகிறார்கள் என்று சொன்னதும் அனைவரும் என்னுடன் சண்டை போட்டார்கள், யார் அக்கா? அவர்களை நீ எப்படி அக்காவாக நடிக்க வைக்க முடியும்? என்று கேட்டார்கள். அதே போல் தான் எம்.குமரன் படத்தில் நதியா மேடம் எனக்கு அம்மாவாக நடிக்கிறார்கள் என்றபோது பயங்கரமாக என்னை கத்தினார்கள். பூமிகா மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள், அவர்களுடன் நடித்த அனுபவம் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தது, நன்றி பூமிகா மேடம்.
ராஜேஷ் சார் என் குடும்பத்தில் ஒருவராக தான் இருக்கிறார், அவரை சந்தித்த போது என்னிடம் இரண்டு மூன்று லைன்களை சொல்லியிருந்தார். நான் அப்போது எனக்கு முழு காமெடி படமாக இல்லாமல், ஒரு பேமிலி என்டேர்டைனர் படமாக வேண்டும் என்று கேட்டேன் அப்போது தான் இந்த படத்தின் லைன் சொல்லியிருந்தார். அதன் பின் அதை முழுமை படுத்தி என்னிடம் எடுத்து வந்தார், அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நாம் அனைவரும் அவரை ஒரு காமெடி படம் எடுக்கும் இயக்குனர் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அவரின் “சிவா மனசுல சக்தி” படத்தின் கதையை பார்த்தல் அது ஒரு எமோஷனல் ட்ராமா மற்றும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட ஒரு படமாக இருக்கும். அதை அவ்வளவு நேர்த்தியான ஒரு படமாக எடுத்திருப்பார். அந்த படத்தில் “மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்” என்ற வசனம் பிரபலமானதால் நாம் இன்றும் அதை மீம்மாக உபயோகித்து வருகிறோம்.
அதே போல் “பாஸ் என்கிற பாஸ்கரன்” படத்தில் ஒரு மனிதன் படத்தின் முதல் காட்சியிலிருந்து கடைசி வரையிலும் ஒரே மாதிரி தான் இருப்பர், அவர் மாறவே மாட்டார். அது மிகவும் புதுமையாகவும் சிறப்பாகவும் இருந்தது எனக்கு பிடித்திருந்தது. இந்தப் படமும் அதே போல் தான் ஒரு கதாபாத்திரத்தை மையமாக கொண்டு கதையமைத்துள்ளார். அதனால் இப்படமும் சிறப்பாக வரும் என்று நம்பிக்கையில் இப்படத்தில் நடித்துள்ளேன், என்றார். ஹாரிஸ் சாருடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சி. “எங்கேயும் காதல்” படத்தின் பாடலை வைத்து தான் இப்போதும் சவுண்ட் செக் செய்கிறார்கள். அந்தப்படம் என்னுடைய படம் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. “மக்காமிஷி” பாடல் எனக்கும் ரசிகர்களுக்கும் மறக்கமுடியாத ஒரு பாடலாக இருக்கும் என்று நம்புகிறேன். நான் அனைவர்க்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன், ராஜேஷ் சார் இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. பிரியங்கா மோகன் அவர்களின் எஸ்பிரேஷன் அனைத்தையும் ப்ளூபராக மட்டுமில்லாமல் அனைத்தையும் யூட்யூப் ரீல்ஸ்களில் பயன்படுத்தலாம். கால்பந்து போட்டியின் இறுதியாட்டத்தை நாம் அனைவரும் ஊட்டியில் அமர்ந்து பார்த்து மகிழ்ந்தோம் அந்த தருணத்தை என்னால் எப்போதும் மறக்க முடியாது.
சரண்யா மேடம் எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன். ஒரு சிறிய ஷாட் என்றாலும், அதை ஜென் முறையில் தயார் செய்து நடிப்பார், எனக்கு சரண்யா மேடத்திடம் பிடித்தது அவர் மேக்-அப் பேக் பயன்படுத்த மாட்டார். மேக்-அப் டிரே தான் பயன்படுத்துவார். அது ஒரு ஹோட்டலில் வழங்கும் பஃபே உணவை போன்று தான் அவர்களின் மேக்-அப் கிட் இருக்கும். அவர்கள் அதை பார்த்து தான் என்ன வேண்டுமோ அதை எடுத்துக் கொள்வார். அதை அனைவரும் ஃபாலோ பண்ண வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சுந்தர் சாரும் நானும் 2 படங்கள் இணைந்து பணியாற்றிவிட்டோம். படப்பிடிப்பு தளத்தில் நிறைய பிரச்சனைகள் வந்தது. அப்போது அவர் ஒரு கப்பலை திருப்பி அழைத்து வந்தார். அதையெல்லாம் யாராலும் செய்ய முடியாது. அவரின் பிரதராக அவரின் வளர்ச்சிக்காக நான் எப்போதும் வேண்டுகிறேன். நாம் அடுத்த படத்திலும் இனணந்து பணியாற்றுவோம் நன்றி.
என் படத்தில் நட்டி சார் இருக்கிறார் என்று தெரிந்ததும் அனைவரும் யோசிப்பார்கள், அவர் வில்லனா, காமெடி செய்வாரா என்று யாராலும் யூகிக்க முடியாத வண்ணம் தான் அவரின் பாத்திரமும் நடிப்பும் இருக்கும். அது எப்படி என்று எனக்கும் நீங்கள் ஒரு நாள் கற்றுத்தர வேண்டும். ராவ் ரமேஷ் சார் ஆந்திராவில் பெரிய நடிகர் அவர். அவரை பார்த்ததும் தெலுங்கில் பேச வேண்டும் என்று பயிற்சி செய்து வைத்திருந்தேன். ஆனால் அவரை நான் பார்த்து பேசுவதற்கு முன்பாகவே, அவர் எண்ணிடம் வந்து “என்னப்பா எப்படி இருக்க நல்லாருக்கியா, எங்க இருந்து வர, அப்பா நல்லாருக்காரா” என்று பேச ஆரம்பித்து விட்டார். நான் வியந்து எப்படி சார் என்றதும் “நான் இங்கு வளர்ந்த பையன் தான் பா” என்றார். VTV கணேஷ் சார் என்னுடன் செஸ் விளையாட்டில் பல முறை தோல்வியடைந்துள்ளார். அதை சொன்னால் என்னை திட்டுவார். சில சமயம் ஜெயித்தும் இருக்கிறார். நன்றி அண்ணா. என்னுடைய குழு அனைவருக்கும் நன்றி, என்றார்.
Produced by : Screen Scene Media Entertainment Pvt Ltd Written & Directed by : Rajesh.M Music Director: Harris Jayaraj
Casting: Jayam Ravi Priyanka Arul Mohan Bhumika Chawla Vtv Ganesh Natraj subramanian Rao Ramesh Achyuth Kumar Saranya Ponvannan Seetha Sathish Krishnan Ms.Baskar Suresh Chakravarthy Vriddhi Vishal Master Ashwin Executive Producers : K.S.Senthil Kumar V.Guru Ramesh Head of Distribution : S.Kiran Kumar Cinematography : Vivekanand Santhosam Editor : Ashish Joseph Art Director : R.Kishore Choreography : Sandy , Sathish KrishnanLyricists :Thamarai , Parvathy meera , Vignesh Ramakrishna , Paal Dubba Production Controllers :S.Saravana Kumar Karthick Anandhakrishnan Costume Designers: Praveen Raja , Pallavi Singh Sound designer : T.UdayaKumar Df.Tech VFX : R.Harihara Sudhan DI : Ashwini – Promoworks Make Up : Prakash Stills : Murugudoss Designs : Raja (Design point) – johnson pro