‘சூர்யாவின் சனிக்கிழமை’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

நானி மற்றும்  விவேக் ஆத்ரேயாஇந்தக் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்து பணியாற்றுகின்றனர்.‌ இருவரும் இணைந்து உருவாக்கும்சூர்யாவின் சனிக்கிழமைதிரைப்படம் ஒருதனித்துவமான சாகசங்கள் நிறைந்த திரைப்படமாகும்.‌ இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவடைந்ததுஇரண்டாம் கட்டபடப்பிடிப்பினை ஹைதராபாத்தில் தொடங்கியிருக்கிறார்கள். இந்த படப்பிடிப்பு  நீண்ட நாட்களை கொண்டதாக இருக்கும் என்றும், இதில் முன்னணி நடிகர்கள் சிலர் கலந்து கொள்ளவிருப்பதாகவும், இதனை தவிர்த்து அதிரடியான சண்டைக் காட்சிகளையும், சாகச காட்சிகளையும் படமாக்கப்படவிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதில் நானி உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.*******

இந்தத் திரைப்படம் தொடர்பாக இதற்கு முன் வெளியிடப்பட்ட ‘Unchained’ எனும் வீடியோவில் இடம்பெற்றுள்ளதைப் போல் நானி முரட்டுத்தனமான தோற்றத்தில் தோன்றுகிறார். நடிகை பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடிக்க, எஸ். ஜே. சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.‌ முரளி. ஜி ஒளிப்பதிவு செய்யும்இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார்.‌ படத்தொகுப்பு பணிகளை கார்த்திகா ஸ்ரீனிவாஸ்மேற்கொள்ள, அதிரடியான சண்டை காட்சிகளை ராம்லக்ஷ்மன் அமைக்கின்றனர்.

நேச்சுரல் ஸ்டார்நானியின்சூர்யாவின் சனிக்கிழமைபான் இந்திய திரைப்படமாகும். இது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.‌