சூர்யதேவரா நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா தயாரிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி, மானசா சௌத்ரி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “லக்கி பாஸ்கர்”. துல்கர் சல்மான் ஒரு வங்கியில் காசாளராக வேலை பார்க்கிறார். கடன் தொல்லையால் உறவினர்களால் அவமானப்படுத்தப்படுகிறார். நோயாளியான தந்தை, திருமணமாகாத தங்கை, மனைவி, மகனுடன் வறுமையின் விளிம்பு நிலையில் வாழ்க்கையை நகர்த்த்ம் துல்கர் சல்மானின் வங்கி கணக்கில் ரூ.100 கோடி வரை படிப்படியாக வைப்புத் தொகை ஏறுகிறது. அப்பணத்தை எப்படி சம்பாதித்தார்? அப்பணத்தை என்ன செய்தார்? என்பதுதான் கதை. வறுமையின் சோகத்தையும், அவமானங்களை சகித்துக் கொள்வதிலும், கடன்காரர்களை சமாளிப்பதிலும் நடிப்பின் இலக்கணத்தை முத்திரைப் பதித்துவிட்டார் துல்கர் சல்மான். வறியவர்களுக்கு பணத்தை அள்ளிக் கொடுக்கும்போது அல்லி மலர்வதுபோல முகத்தை மலரச் செய்கிறார். மீனாட்சி சவுத்ரியின் ரோஷம் மிகுந்த நடிப்பு கைத்தட்ட வைக்கிறது. எவ்வளவு நேரம் சூதாடினோம் என்பதைவிட எந்த கட்டத்தில் ஆட்டத்தை நிறுத்தினோம் என்பதில்தான் வெற்றி இருக்கிறது என்ற வசனம் சூதாட்டக்காரர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய வசனமாகும். வங்கி மோசடிகளை வாடிக்கயாளர்களுக்கு படம் பிடித்து காட்டியிருக்கிறார் இயக்குநர் வெங்கி அட்லூரி.