வீர மங்கை வேலு நாச்சியார் வாழ்க்கையை படமாக்கும் இயக்குநர் சுசி கணேசன்!

வீர மங்கை வேலு நாச்சியாரின் பிறந்த நாளை இந்திய தேசமே கொண்டாடடும் வகையில்
வேலு நாச்சியாரை நினைவு கூர்ந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய இணை அமைச்சர் மாண்புமிகு L. முருகன் அவருடைய பிறந்த நாளில் அவரின் வீர சாகசங்களை நினைவு கூர்ந்தார்கள். இந்நிலையில் வீர மங்கை வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார் இயக்குநர் சுசி கணேசன்.

இதுகுறித்து சுசி கணேசன் “தமிழக பெண்களின் வீரத்தை இந்த உலகிற்கு எடுத்துக்காட்டிய வீர மகா ராணி வேலுநாச்சியரின் வீர வாழ்க்கை வரலாற்றை திரை வடிவமாக கொண்டுவரும் முயற்சியை இந்நாளில் பெருமையோடு அறிவிக்கிறேன். இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர் களும் மத்திய இணை அமைச்சர் L. முருகன் அவர்களும் வீரமங்கை வேலு நாச்சியார் அம்மையாரை நினைவுகூர்ந்து வாழ்த்தியதில் , படைப்பாளியான என் பேனா முனைக்கு மேலும் ஆக்கமும் ஊக்கமும் அளித்துள்ளது. இந்த திரைப்படத்தின் மூலம்  ஆங்கிலேயர்களோடுபோரிட்டு, வென்ற முதலும் கடைசியுமான வீர தமிழச்சியின் மாவீரம் எத்தகையது என்பதை இன்றைய தலைமுறைக்கும் கொண்டுபோய் சேர்ப்பதோடு , உலகமே கொண்டாட வைத்துவிடலாம் ” என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மக்கள் தொடர்பு: பிரியா