‘போர்’ திரைப்பட விமர்சனம்

டி சிரியஸ் கேட்வே பிக்சர்ஸ் தயாரிப்பில் பிஜாய் நம்பியார் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ்,காளிதாஸ் ஜெயராம், டி.ஜெ.பானு, சஞ்சனா நடராஜன், அம்ருதா சீனிவாசன், மெர்வின் ரோஜாரியோஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம்போர்‘. அர்ஜூன் தாசும் காளிதாசும் சிறுவயதிலேயேபகைவர்கள். அந்த பகை கல்லூரி காலம்வரை நீடிக்கிறது. இவர்களின் பகையால் விளையும் தீமைகளை விளக்குவதுதான் கதை. சுதந்திரம், சமயுரிமை, சாதிக் கொடுமை, எப்படியும் வாழலாம் என்ற மிருககுணம், அரசியல் என்று அனைத்தும் கலந்த ஒரு கலவையை தந்திருக்கிறார் இயக்குநர் பிஜாய் நம்பியார். மதுநடன விடுதிகளில் போதைப்புகையுடன் தள்ளாடும் இளசுகள். இந்த காட்சிகள்தான் திரைமுழுக்கதள்ளாடுகிறது. கல்லூரி கலாட்டக்கள் நிறந்த படமாக தந்திருக்கிறார் இயக்குநர். எங்கே செல்கிறதுதமிழர் பண்பாடு?