போர் திரைப்பட வெள்ளோட்டம் வெளியீட்டு விழா

பிஜோய் நம்பியார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் இருவரும் நாயகர்களாக நடித்திருக்கும் திரைப்படம்போர்”.  டி.ஜே.பானு, சஞ்சனா நடராஜன், மெர்வின் ரொஸாரியோ மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இத்திரைப்படம் தமிழ் ஹிந்தி என இரட்டை மொழிகளில் வரும் மார்ச் 1 முதல் வெளியாகவிருக்கிறது. “போர்திரைப்படத்தை டி சீரியஸ் மற்றும் ரோக்ஸ் மீடியா இணைந்து தயாரித்திருக்கின்றனர். இப்படத்தின் வெள்ளோட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், போன்றோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் நாயகி டி.ஜே.பானு பேசுகையில், “இரு மொழிகளில் உருவாகி இருக்கும் போர் திரைப்படத்தில் இரண்டு மொழிகளிலும் நான்நடித்திருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் கூறிக் கொள்கிறேன். முதலில் இரு மொழிகளிலும் எப்படிநடிப்பது என்கின்ற தயக்கம் சிறிது இருந்தது. இயக்குநர் பிஜோய் நம்பியார் தான் எனக்கு நம்பிக்கையும் ஆதரவும் கொடுத்தார்.*******

நன்றாக உழைத்து இரு மொழிகளிலும் படத்தை நாங்கள் உருவாக்கிவிட்டோம். நீங்கள் தான் படத்தைப் பார்த்துவிட்டு எப்படி இருக்கிறது என்று சொல்ல வேண்டும். படம் நன்றாகஇருக்கும் பட்சத்தில் இப்படத்திற்கு சிறப்பான ஆதரவை தருவீர்கள் என்று நம்புகிறேன்என்றார்.

நாயகி சஞ்சனா நடராஜன் பேசியதாவது,  ஆரம்பத்தில் இருந்தே நீங்கள் எங்களுக்கு மிகச் சிறந்தஒத்துழைப்பைக் கொடுத்து வருகிறீர்கள். அதற்காக பிரத்யேக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ”போர்திரைப்படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். எல்லோரும் இதைத்தான் சொல்வார்கள். இருப்பினும்நான் ஏன் சொல்கின்றேன் என்றால் அதற்கு தனிப்பட்ட சில காரணங்கள் இருக்கிறது. முதலில் படத்தின்இயக்குநர் பிஜோய் நம்பியார் எனக்கு மிகப்பெரிய ஆஃபர் கொடுத்தார். என்னுடைய கேரக்டரை மட்டும்சொல்லாமல், படத்தில் வரும் இரண்டு கேரக்டரையும் என்னிடம் டீட்டெயில் ஆக விளக்கினார். நான்கதை கேட்கும் போது, படத்தில் இப்பொழுது எந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேனோ அந்தக்கதாபாத்திரத்தைத் தான் பின் தொடர்ந்தேன். ஆனால் கதை கூறிவிட்டு அதற்கு நேர்எதிர்கதாபாத்திரத்தில் நான் நடிக்க வேண்டும் என்று இயக்குநர் கூறினார். நான் விடாப்பிடியாக சண்டைபோட்டு அந்தக் கதாபாத்திரத்தில் தான் நடிப்பேன் என்று பிடிவாதமாக இருந்து அந்தகேரக்டரில் நடித்துமுடித்துவிட்டேன். ஜகமே தந்திரம் மற்றும் சார்பட்டா பரம்பரையில் பார்க்காத சஞ்சனாவை நீங்கள்நிச்சயமாக இப்படத்தில் பார்ப்பீர்கள் என்று உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறேன்.

படத்தில் நாயகர்களாக நடித்திருக்கும் இருவரும் எதிர் எதிர் கேரக்டர். காளிதாஸ் பேசிக்கொண்டேஇருப்பார். அர்ஜூன் பேசவே மாட்டார். பானு எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார். எனக்குஇப்படத்தில் வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. பிஜோய் நம்பியார் இப்படத்தினை மிகச்சிறப்பாகஎடுத்திருக்கிறார். கதை, திரைக்கதை, காட்சி அமைப்புகள் எல்லாமே சிறப்பாக இருக்கிறது.

எல்லோரும் அர்ஜூன் தாஸின் குரலைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். அவரின் நடிப்பைப் பற்றி யாரும்பேசுவதில்லை. அவர் அவ்வளவு டெடிகேட்டிவ் ஆன ஆர்டிஸ்ட். அவரைப் பற்றி ஒரு நிகழ்வை நான்கண்டிப்பாக பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஏனென்றால் கண்டிப்பாக அதை அவர் சொல்லமாட்டார். படப்பிடிப்பில் ஒரு நாள் கோர்ட் செட்டப்பில் இரவு 2 மணிக்கு கொட்டும் மழையில் ஒரு சண்டைக்காட்சியை படம்பிடித்துக் கொண்டிருந்தோம். நாங்கள் அப்பொழுது தான் ஷாட் முடிந்து கேரவனுக்குவந்து கொஞ்சம் கண் மூடலாம் என்று படுத்தோம். அதற்குள் அர்ஜூன் தாஸுக்கு சண்டைக் காட்சியில்அடிபட்டு ரத்தம் வருகிறது என்ற தகவல் வந்தது. பதட்டத்துடன் ஓடிப் போய் பார்த்தால் படப்பிடிப்புபோய்க் கொண்டு இருக்கிறது, அவர் சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறார். நாங்கள்அங்குள்ளவர்களிடம் கேட்டதற்குஆமாம் ரத்தம் வந்ததுஅதைத் துடைத்துக் கொண்டு மீண்டும் சண்டைபோட போய்விட்டார் என்றார்கள். ப்ரேக்கின் போது கேட்டதற்கு தரையில் விழுந்து பல்உடைந்துவிட்டதுபல் தானே.. பரவாயில்லை என்று கேசுவலாக கூறினார். எங்களுக்கு ஆச்சரியமாகஇருந்தது.. சின்ன தலைவலி என்றாலே பேக்கஃப் சொல்லிவிட்டு செல்லும் இக்காலத்தில் இப்படி ஒருநடிகரா..? என்று வியந்தேன். இவ்வளவு டெடிக்கேட்டிவ் ஆன ஒரு ஆர்டிஸ்ட்டைப் பார்ப்பது கடினம்.

பானு திரையில் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறார். நேரிலும் சூப்பராக இருக்கிறார். அவர் திரையில்வந்து நின்றாலே காட்சிக்குத் தேவையான ஒன்று கிடைத்துவிடுகிறது. படம் சிறப்பாக வந்திருக்கிறது. எங்கள் படத்திற்கு ஆதரவைத் தாருங்கள். எல்லோருமே மிகவும் கடினமான உழைப்பைக் கொடுத்துஇப்படத்தை உருவாக்கி இருக்கிறோம். படத்தைப் பார்த்துவிட்டு எங்கள் உழைப்பிற்கான கிரிடிட்ஸ்கொடுங்கள். இந்த தருணத்தில் நான் இந்த இடத்தில் இருப்பதற்கு காரணமான, எனக்கு முழுச்சுதந்திரம் கொடுத்து வளர்த்த என் தாய் தந்தையருக்கு என் நன்றிகளைக் கூறிக் கொள்கிறேன்.” என்றுபேசினார்.

*இயக்குநர் பிஜோய் நம்பியார் பேசியதாவது,*

போர்திரைப்படம் ஒரு நேரிடையான தமிழ்ப்படம் எடுக்க வேண்டும் என்பதற்கான என்னுடையமூன்றாவது முயற்சி ஆகும். ஷோலோ திரைப்படத்தையும் அந்த எண்ணத்தில் தான் உருவாக்கினேன். ஆனால் அதை தியேட்டர்களில் வெளியிட முடியாமல் போயிற்று. பந்த் போன்ற எதிர்பாராத நிகழ்வுகள்வந்து அதை தடை செய்துவிட்டது. ”போர்திரைப்படம் ஒரு முழுமையான தமிழ்ப்படம். இதில்நடித்திருக்கும் முக்கிய நடிகர்கள் மற்றும் துணை நடிகர்கள் அனைவருமே தமிழ் தெரிந்தவர்கள். தமிழ்வெர்ஸனை மிகச் சிறப்பாக உருவாக்க எனக்கு ஸ்ரீகாந்த் உதவினார்.

இது ஒரு கலப்படமற்ற முழுத் தமிழ் திரைப்படம். கல்லூரி கால வாழ்க்கைத் தொடர்பானத் திரைப்படம். எனக்கு எப்போதுமே கல்லூரி தொடர்பான கதைகளை உருவாக்குவதில் ஆர்வம் உண்டு. இப்படம்முழுக்க முழுக்க குறிப்பாக கல்லூரி செல்லும் இளைஞர்களை குறி வைத்து எடுக்கப்பட்டிருக்கும்திரைப்படம். தமிழ்த் திரை உலகிற்குள் ஒரு தமிழ் திரைப்படத்தைக் கொண்டு நுழைய வேண்டும். தமிழ்பார்வையாளர்கள் என்னை ஒரு தமிழ் இயக்குநராகவே பார்க்க வேண்டும் என்பதற்காக எடுக்கப்படும்மூன்றாவது முயற்சி.

முதலில் இப்படத்தை மலையாளத்தில் எடுக்க வேண்டும் என்று தான் எண்ணினேன். பிறகு தமிழ் மற்றும்இந்தியில் எடுத்தால் சரியாக இருக்கும் என்று தோன்றியது. எனக்கு எப்போதும் தமிழ் வார்த்தைகளின்மீதும் அந்த ஒலி வடிவங்கள் மீதும், தமிழ் மொழியின் மீதும் ஒரு மயக்கம், காதல் உண்டு. இப்படத்தில்தமிழ் வடிவத்திற்கான வசனங்கள் மிகுந்த கவித்துவத்துவத்துடன் வந்திருப்பதாகத் தோன்றுகிறது. போர்திரைப்படத்திற்காக எனக்கு மிகுந்த ஒத்துழைப்பு நல்கிய நடிகர் நடிகைகள் அனைவருக்கும் நன்றி. ஏனென்றால் ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் ஒரு படத்தை உருவாக்கும் போது நடிகர்நடிகைகளுக்கான சிக்கல்கள் அதிகம். அதைப் பொருட்படுத்தாமல் நடித்துக் கொடுத்த நடிகர்நடிகைகளுக்கும் எங்கள் தயாரிப்பாளர்களுக்கும் என் நன்றிகள்.