வங்கியில் இருந்து பேசுவதாக அரசு அதிகாரியிடம் ரூ.1 லட்சம் மோசடி

பெரம்பூர் அரசு அதிகாரியிடம், வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, 1 லட்சம் ரூபாய் ஆட்டை போட்ட மர்மநபர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். பெரம்பூர், ஜவஹர் நகரைச் சேர்ந்தவர் சத்யநாராயணன், 55. இவர், தலைமை செயலகத்தில் இணை செயலராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் …

வங்கியில் இருந்து பேசுவதாக அரசு அதிகாரியிடம் ரூ.1 லட்சம் மோசடி Read More

ஜூன் 14 மதுக் கடைகள் திறக்கப் படுவதை எதிர்த்து போராட்டங்கள் அறிவித்திருப்பதால் ஆணையர் நேரில் சென்று பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தார்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழக அரசுமேற்கொண்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில்உள்ளது. நாளை (14.6.2021) முதல் தமிழகத்தில் சென்னை உட்பட27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கஉத்தரவிடப்பட்டுள்ளதால், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., உத்தரவின்பேரில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், கொரோனாதொற்று ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை பாதுகாப்புஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், காவல் ஆணையாளர்மற்றும் டாஸ்மாக் நிறுவன மேலாண்மை இயக்குநர்திரு.எல்.சுப்ரமணியன், இ.ஆ.ப., தலைமையில், காவல் அதிகாரிகள்மற்றும் டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகளுடன் இன்று (13.4.2021) மாலை காவல் ஆணையரகத்தில் ஒருங்கிணைப்பு கலந்தாய்புமேற்கொள்ளப்பட்டு, உரிய கட்டமைப்புகளுடன் கடைகள் திறந்துநடத்திட ஆலோசிக்கப்பட்டது. இக்கலந்தாய்வில் டாஸ்மாக் கடைகளில் காவல்துறையினர்மூலம் தகுந்த தடுப்புகள் கொண்டு, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யவும், பொதுமக்களை வரிசைபடுத்தவும், சமூக இடைவெளிகடைபிடிக்கவும், முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளிகடைபிடிக்காமல் வரும் நபர்களுக்கு, மதுபான வகைகள் வழங்கவேண்டாம் எனவும், ஒலி பெருக்கி வசதி, சில மீட்டர் தூரத்தில்பந்தல் அமைத்து மதுபானங்கள் வாங்க வருபவர்களைவரிசைபடுத்துதல் குறித்தும், நடவடிக்கை எடுக்கஆலோசிக்கப்பட்டது.  மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர்ஜிவால், இ.கா.ப., அவர்கள், டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர்மற்றும் காவல் அதிகாரிகளுடன் இன்று (13.6.2021) மாலைசென்னை, 1.பெரியமேடு, ஈ.வெ.ரா.சாலை (எவரெஸ்டு ஓட்டல்எதிரில்), 2.எழும்பூர், வான்னல்ஸ் சாலை, (ஆல்பட் திரையரங்கம்அருகில்), 3. ஐஸ் அவுஸ், திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில்அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளுக்கு நேரில் சென்றுகட்டமைப்புகளை அதிகாரிகளுடன் ஆய்வு செய்து, அங்குமேற்கொண்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டார். மேலும், அங்குள்ள டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்கள்மற்றும் விற்பனையாளர்களுக்கு தமிழக அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகள் படி விற்பனை செய்ய வேண்டும் எனஅறிவுரைகள் வழங்கினார். இந்நிகழ்வின்போது, டாஸ்மாக் பொது மேலாளர்திரு.சுகுமாறன், கூடுதல் காவல் ஆணையாளர் (தெற்கு) என்.கண்ணன், இ.கா.ப., கிழக்கு மண்டல இணைஆணையாளர் எஸ்.ரஜேந்திரன், இ.கா.ப., துணைஆணையாளர்கள், காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஜூன் 14 மதுக் கடைகள் திறக்கப் படுவதை எதிர்த்து போராட்டங்கள் அறிவித்திருப்பதால் ஆணையர் நேரில் சென்று பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தார் Read More

பாதுகாப்பு படை வீரர் என்று சொல்லி ஆன்லைனில் மோசடி

வடபழநி-மத்திய தொழில் பாதுகாப்பு படைவீரர் எனக் கூறி, வீட்டு உபயோக பொருள் விற்பனையாளரிடம் பண மோசடியில் ஈடுபட்ட நபர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். விருகம்பாக்கத்தில் உள்ள, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடையில், கிளை மேலாளராக பணிபுரிந்து வருபவர் மணிகண்டன், 35. இவரை …

பாதுகாப்பு படை வீரர் என்று சொல்லி ஆன்லைனில் மோசடி Read More

மாணவியருக்கு பாலியல் தொல்லை ஆசிரியர்களிடம் விசாரணை தொடங்கியது —————————

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக, கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியரிடம், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன் நிர்வாகிகள், ஆறு மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். சென்னை அடையாறு பகுதியில், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியின், இந்நாள் …

மாணவியருக்கு பாலியல் தொல்லை ஆசிரியர்களிடம் விசாரணை தொடங்கியது ————————— Read More

பிறந்த நாள் கேக்கை பட்டாக்கத்தியால் வெட்டி கொண்டாடியவர் கைது

கண்ணகி நகர் பகுதியில் பட்டாக்கத்தி கொண்டு பிறந்த நாள் கேக் வெட்டிக் கொண்டாடிய ஆறு நபர்கள் போலீசார் கைது செய்தார்கள். கடந்த 6.6‌ 2021 ஆம் தேதி கண்ணகி நகர் காவல் நிலைய சரகம் கண்ணகி நகர் இரண்டு அடுக்குமாடி குடியிருப்பு …

பிறந்த நாள் கேக்கை பட்டாக்கத்தியால் வெட்டி கொண்டாடியவர் கைது Read More

கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு அறிவித்த ஊரடங்கு காலத்தில், சென்னை பெருநகரில் காவல் துறை மேற்கொண்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வாகனத் தணிக்கை பணிகளை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கொரோனா தொற்று பரவாமல் தடுக்க …

Read More

போலீசாரை மிரட்டிய பெண் வழக்கறிஞர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பத்வு

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசுஆணைப்படி ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்துவருகிறது. அரசு வழிகாட்டுதல்களை மீறி வெளியேவருபவர்களின் வாகனங்களை சோதனை செய்து உரியஅனுமதி இல்லாமல் செல்பவர்கள் மீது சட்டபடிநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக 560 இடங்களில் வாகன தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டுகாவல் அதிகாரிகள் கொண்ட குழுவினர்கள் தணிக்கைசெய்து வருகின்றனர்.  2.​ இன்று (6.6.2021) காலை 7.45 மணியளவில்சேத்துப்பட்டு சிக்னல் சந்திப்பில் காவலர்கள் வாகனதணிக்கை செய்து கொண்டிருக்கும் பொழுது, காரில்உரிய அனுமதியின்றி பெண் ஒருவர் முகக் கவசம்அணியாமல் வந்தவரை, காவல்துறையினர் நிறுத்திவிசாரணை செய்தனர். மேலும் காரை ஓட்டி வந்த பெண்முககவசம் அணியாமல் வந்தமைக்காக ரூ.500  அபராதம்விதித்து ரசீதை மேற்படி பெண்ணிடம் கொடுத்துள்ளனர். உடனே மேற்படி பெண் தனது தாய்க்கு செல்போன் மூலம்தகவல் கொடுத்து சம்பவயிடத்திற்கு வர கூறியுள்ளார். 3.​சம்பவயிடத்திற்கு வந்த பெண், போலிசார் வழங்கியரசீதை வாங்கி கீழே ஏறிந்து விட்டு, முகக் கவசம்அணியாமல் தான் ஒரு பெண் வழக்கறிஞர் என்று உரக்கசப்தமிட்டு காவல்துறையினரை பணி செய்யவிடாமல்தடுத்து மிரட்டியுள்ளார். மிரட்டிய பெண் வழக்குறைஞர்தனுஜா கத்துலா, க/பெ.பழனிவேல் ராஜன், கீழ்பாக்கத்தைசேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இது குறித்துசம்மந்தப்பட்ட போக்குவரத்து காவலர், சேத்துப்பட்டுகாவல் ஆய்வாளரிடம் கொடுத்த புகாரின் பேரில்மேற்படி தனுஜா கத்துலா மீது 269, 270, 290, 353, 294 (b)506 (i) இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் படிவழக்குப்பதிவு செய்து விசாரணை நடை பெற்று வருகிறது. 4.​தமிழக அரசின் வழிகாட்டுதலின் படி முன் களபணியில் இருந்து வரும்  அனைத்து அரசுதுறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு பொதுமக்கள்ஒத்துழைப்புடன் கொரோனா நோய் தொற்றுகுறைக்கப்பட்டுள்ளது. காவல் துறையின்நடவடிக்கைகளில் பொதுமக்களிடம் கனிவுடனும், மனிதநேயத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் எனகாவல்ஆணையர் உத்தரவு பிறபித்துள்ளார். காவல் துறையினர் 24 மணி நேரமும் 3 பிரிவுகளாக தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் பணி செய்துவருகின்றனர். 5.​மேற்கண்ட வாகன தணிக்கையில் நடைபெற்றசம்பவம் விரும்பதகாத வகையில் நடைபெற்று உள்ளது. எனவே பொதுமக்கள் அரசாங்கத்தினுடையவழிகாட்டுதல்களை முழுமையாக கடைபிடித்துகாவல்துறையினருக்கு ஊரடங்கை அமல்படுத்துவதற்க்குமுழு ஒத்துழைப்பு வழங்குமாறுகேட்டுக்கொள்ளப்படுகிறது.

போலீசாரை மிரட்டிய பெண் வழக்கறிஞர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பத்வு Read More

போலீசாரை மிரட்டிய பெண் வழக்கறிஞர் மீது வழக்கு

போலீசாரை மிரட்டிய பெண் வழக்கறிஞர் மீது வழக்கு Read More

போக்குவரத்து கூடுதல் ஆணையர் பதவி ஏற்றார்

பிரதிப்குமார், இ.கா.ப., அவர்கள்சென்னை பெருநகர காவல், போக்குவரத்துகூடுதல் ஆணையாளராக இன்று (05.6.2021)பொறுப்பேற்றுக் கொண்டார்

போக்குவரத்து கூடுதல் ஆணையர் பதவி ஏற்றார் Read More

காவலர் கோவிட் கேர் சென்டரில் தாயுடன்சிகிச்சையிலிருந்த 10 வயது சிறுமி முன்களபணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து வரைந்தஓவியத்தை காவல் ஆணையரிடம் வழங்கி நன்றிகூறினார். 

அண்ணா பல்கலைக்கழக  விடுதி  வளாகத்தில்காவல் துறையினருக்கான  கோவிட்-19 கேர்சென்டரில்  கொரோனா தொற்றால்  பாதிப்படைந்துசிகிச்சை பெற்று வரும்  காவல் ஆளிநர்கள், அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரை நேற்று (04.06.2021) சென்னைபெருநகர காவல் ஆணையர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் கவச  உடை அணிந்து  நேரில்   நலம் விசாரித்து, ஆறுதல் கூறியும்பழத்தொகுப்புகளையும் வழங்கினார். அப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுசிகிச்சையில் இருந்த தலைமைக்காவலர் K.சிகாமணிஎன்பவரது 10 வயது மகளான ஸ்ருதி என்ற பெண்அவரது தாய் தேவியுடன் கொரோனா நோய் தொற்றுசிகிச்சை பெற்று வந்த சிறுமி ஸ்ருதி தான்தனிமைபடுத்தப்பட்ட நாட்களில் பாதிக்கப்பட்டநிலையிலும் முன்களப்பணியாளர்களாக அரிப்பணிப்புஉணர்வுடன் பணி செய்து மக்களை காத்துவரும்மருத்துவ துறையினர், காவல் துறையினர் மற்றும்சுகாதார அலுவலர்களுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக தான் வரைந்த “THANK YOU WARRIORSSAVING –  OUR LIVES” என்ற வாசகம் கொண்டஓவியத்தை கவச உடையில் ஆறுதல் கூற வந்த காவல் ஆணையரிடம் நேரில் வழங்கி தனது நன்றியைநெகிழ்வுடன் தெரிவித்தார். இந்த ஓவியம் சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

காவலர் கோவிட் கேர் சென்டரில் தாயுடன்சிகிச்சையிலிருந்த 10 வயது சிறுமி முன்களபணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து வரைந்தஓவியத்தை காவல் ஆணையரிடம் வழங்கி நன்றிகூறினார்.  Read More