வங்கியிலிருந்து பேசுவதாக கூறி OTP எண்ணை பெற்று ரூ.53 லட்சம் மோசடி பணத்தை மீட்டுக் கொடுத்த காவலரை ஆணையர் பாராட்டினார்

​​சென்னை பெருநகரில் 12 காவல் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் சைபர்கிரைம்குற்றப்பிரிவில் அளிக்கப்படும் புகாரின் மீது உடனேவிசாரணை செய்து நடவடிக்கை எடுக்க சென்னைபெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதின் பேரில் பெறப்படும்பணபரிவர்த்தனை ஏமாற்றம் அடைந்த புகார்களில்உடனடியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.   இதன் தொடர்ச்சியாக வில்லிவாக்கம், சிட்கோ நகர், 18வது தெருவில் வசித்து வரும் அன்பரசு, வ/62, த/பெ.பிச்சையப்பன் என்பவர் ONGC நிறுவனத்தில் வேலைசெய்து பணி ஓய்வு பெற்றவர் ஆவார். கடந்த 25.05.2021 அன்று மதியம் சுமார் 03.30 மணியளவில் அன்பரசுவின்செல்போனுக்கு Pan Card Update செய்ய வேண்டும் என்றுவங்கியில் இருந்து அனுப்புவது போல குறுஞ்செய்திவந்துள்ளது. சிறிது நேரத்தில் அவரது செல்போன்எண்ணில் அழைத்து பேசிய நபர் தான் SBI வங்கியின்துணை மேலாளர் பேசுவதாகவும் தங்களின் Pan Card Update செய்ய வேண்டும் என்றும் அதற்காக தங்களின்செல்போன் எண்ணிற்கு வந்துள்ள குறுஞ்செய்திஅனுப்பியுள்ளதாகவும், தற்போது அனுப்பிய OTPஎண்ணை தெரிவிக்குமாறு கேட்டுள்ளார். இதனைஉண்மையென நம்பிய அன்பரசு OTP எண்ணைஅனுப்பிய சில நிமிடங்களில் அன்பரசுவின் வங்கிகணக்கிலிருந்து சிறிது சிறிதாக என ரூ.53,25,000/- பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து, அன்பரசு 26.05.2021 அன்று V-1 வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டபுகாரை அண்ணாநகர் காவல் மாவட்ட துணைஆணையர் திரு.G.ஜவஹர், இ.கா.ப., அவர்கள்கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் சைபர்குற்றப்பிரிவிற்கு மாற்றம் செய்து உடனே, அண்ணாநகர்காவல் மாவட்ட சைபர் கிரைம் உதவி ஆய்வாளர்திரு.ராஜாசிங், காவலர்கள் மணிகண்ட ஐயப்பன்(கா.46781) மற்றும் ராம்சங்கர் (கா.46193 ) ஆகியோர்துரிதமாக செயல்பட்டு அன்பரசுவின் பாரத ஸ்டேட் வங்கிநிர்வாகத்தில் விசாரணை செய்தபோது, எதிரிகள்அன்பரசுவின் வங்கி கணக்கிலிருந்து ரூ.25,000/- ஆன்லைன் பண பரிவர்த்தனை மூலம் மற்றொரு வங்கிகணக்கிற்கு மாற்றியுள்ளதும், ரூ.53,00,000/- அவரதுவங்கி கணக்கில் Fixed Deposit ஆக பண பரிவர்த்தனைசெய்து பின்னர் OTP எண்ணை பெற்று ரூ.53 லட்சத்தைஅபகரிக்க திட்டமிட்டதும் தெரியவந்தது. உடனே சைபர்குழுவினர் பரிந்துரையின்பேரில் வங்கி நிர்வாகம்அன்பரசுவின் Net banking அக்கவுண்டை நீக்கம் செய்து,பணபரிவர்த்தனை மூலம் மாற்றம் செய்யப்பட இருந்தரூ.53 லட்சத்தை திரும்ப அவரது சேமிப்பு வங்கிகணக்கிற்கு மாற்றப்பட்டது. மேலும், ஆன்லைன்பரிவர்த்தனையில் மோசடியான பணம் ரூ.25,000/- பணத்தையும் மீட்டு தருவதாக வங்கி நிர்வாகம்உறுதியளித்தது. வங்கி அதிகாரி போல செல்போனில் பேசி, ஆன்லைன் மூலம் இழந்த தனது பணத்தை பெற்று தந்தஅண்ணாநகர் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு உதவிஆய்வாளர் ராஜாசிங் மற்றும் காவல் குழுவினருக்குநெகிழ்ந்து நன்றி கூறினார். அன்பரசு பாராட்டினார். மேலும், மேற்படி சம்பவத்தில் விரைந்து செயல்பட்டு, புகார் மீது உடனடி நடவடிக்கை எடுத்து இழந்தபணத்தை மீள பெற்றுத் தந்த அண்ணாநகர் காவல் மாவட்ட சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் திரு.ராஜாசிங், காவலர்கள் மணிகண்ட ஐயப்பன் (கா.46781) மற்றும்ராம்சங்கர் (கா.46193) ஆகியோரை சென்னை பெருநகரகாவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் நேற்று (27.5.2021) நேரில் அழைத்துப் பாராட்டிவெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

வங்கியிலிருந்து பேசுவதாக கூறி OTP எண்ணை பெற்று ரூ.53 லட்சம் மோசடி பணத்தை மீட்டுக் கொடுத்த காவலரை ஆணையர் பாராட்டினார் Read More

கொரோனா தொற்றில் சிகிச்சை பெறும் காவலர்களின் வீட்டுக்குச் சென்று ஆணையர் ஆறுதல் கூறினார்

​​சென்னை பெருநகரில் கொரோனா ஊரடங்குகாரணமாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர்திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில், அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வோர் மீதுபல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும்காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் வாகனத் தணிக்கைமற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மூலம் மக்களைநேரடியாக சந்தித்து வருவதால், காவல்துறையினர்கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகரஆயுதப்படை தலைமைக் காவலர் திரு.சதிஷ்பாபு, வ/49, (த.கா.17752) என்பவருக்கு கடந்த 14.5.2021ம் தேதிகொரோனா தொற்று ஏற்பட்டு, கிண்டி Kings மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவரை, சென்னைபெருநர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால்,இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரஆயுதப்படை துணை ஆணையாளர் திரு.கே.சௌந்தரராஜன்அவர்கள் நேரில் சென்று உடல்நிலை குறித்து விவரம் அறிந்துகாவல் ஆணையாளர் அவர்களிடம் தெரிவித்ததன் பேரில், மேல் சிகிச்சைக்காக 19.05.2021 தேதி கிரீம்ஸ் ரோடுஅப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுவெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.  மேற்படி தலைமைக்காவலர் திரு.சதீஷ்பாபுவின்குடும்பத்தினர் வசித்து வரும் கீழ்ப்பாக்கம், லூத்தரல் கார்டன்காவலர் குடியிருப்பிற்கு இன்று (28.05.2021) காலை 11.30 மணியளவில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர்திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் நேரில் சென்றுசதீஷ்பாபுவின் குடும்பத்தினர்களை சந்தித்து,  அவசரசிகிச்சை பிரிவில் இருந்து வரும் சதீஷ்பாபுவிற்கு தேவையானஅனைத்து உதவிகளையும் செய்திட நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ஆறுதல் கூறினார். இந்நிகழ்வில் சென்னை பெருநகர ஆயுதப்படை துணைஆணையர் திரு.கே.சௌந்தரராஜன் மற்றும் காவல் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

கொரோனா தொற்றில் சிகிச்சை பெறும் காவலர்களின் வீட்டுக்குச் சென்று ஆணையர் ஆறுதல் கூறினார் Read More

ஆர்.கே.நகர் பகுதியில் ரோட்டில் தவறவிட்ட பணம் ரூ.20,000/-ஐ  சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து காவல் ஆய்வாளரால் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சென்னை, தண்டையார்பேட்டை, சஞ்சய்காந்தி 3வது தெரு, எண்.38 என்ற முகவரியில்வசித்து வரும் கரிமுல்லா, வ/43, த/பெ.சையது உசைன் என்பவர் கடந்த (23.05.2021) மாலைசுமார் 07.00 மணியளவில் நேரு நகர் 3 வது தெருவில் மளிகை பொருட்கள் வாங்க நடந்து சென்றுகொண்டிருந்தபோது ரோட்டில் …

ஆர்.கே.நகர் பகுதியில் ரோட்டில் தவறவிட்ட பணம் ரூ.20,000/-ஐ  சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து காவல் ஆய்வாளரால் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. Read More

சிறந்த இந்திய குடிமகனுக்கு காவல்த்துறை பாராட்டு

​சென்னை, தண்டையார்பேட்டை, சஞ்சய்காந்தி 3வது தெரு, எண்.38 என்றமுகவரியில் வசித்து வரும் கரிமுல்லா, வ/43, த/பெ.சையது உசைன் என்பவர் ஏசிமெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று (23.05.2021) மாலை சுமார் 07.00 மணியளவில் நேரு நகர் 3 வது தெருவில் …

சிறந்த இந்திய குடிமகனுக்கு காவல்த்துறை பாராட்டு Read More

பத்திரிகையாளர்களுக்கு அடையாள அட்டை ஒன்றே போதுமானதென்று காவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் ஆணையர் சங்கர் ஜியால்

சென்னையில் ஊரடங்கை அமுல்படுத்த காவல்த்துறையினர் மிகவும் கண்டிப்புடன் நடந்து கொண்டார்கள். 18.05.2021 அன்று பத்திரிக்கையாளர்களிடம் இ-பாஸ் கேட்டு காவல்த்துறையினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பத்திரிக்கையாளர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள். இதை சென்னை பத்திரிகயாளர் சங்கம் கண்டித்து அறிக்கை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை நகர காவல்த்துறை …

பத்திரிகையாளர்களுக்கு அடையாள அட்டை ஒன்றே போதுமானதென்று காவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் ஆணையர் சங்கர் ஜியால் Read More

பத்திரிகையாளர்கள், மருத்துவனை ஊழியர்களிடம் இ பதிவு கேட்டு வாகனத்தை பறிமுதல் செய்யும் காவல்துறையினர்!

முன்களப்பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர்கள் மற்றும் தனியார், அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் நர்சுகள், ஊழியர்கள் பணி செய்ய தடை இல்லை என்ற அரசு உத்தரவு இருந்தும் அவர்களிடம் காவல்துறை தரப்பில் ‘இ’பதிவு சான்றிதழ் கேட்டு வாகனத்தை பறிமுதல் செய்கின்றனர். பத்திரிகையாளர்கள் மற்றும் ஆஸ்பத்திரி …

பத்திரிகையாளர்கள், மருத்துவனை ஊழியர்களிடம் இ பதிவு கேட்டு வாகனத்தை பறிமுதல் செய்யும் காவல்துறையினர்! Read More

சென்னையில் கொரோனா ஊரடங்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறியதாக 3,028 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3,252 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன

முகக்கவசம் அணியாத 2,485 நபர்கள், சமூக இடைவெளி கடைபிடிக்காத 278நபர்கள், அரசு அறிவித்த நேரத்தை மீறி செயல்பட்ட கடையின் உரிமையாளர்கள் 55 நபர்கள் மீதும் வழக்குகள் பதிவு கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு, தமிழக அரசால் 14.5.2021 …

சென்னையில் கொரோனா ஊரடங்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறியதாக 3,028 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3,252 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன Read More

கொரோனா தடுப்பு விதிமுறை மீறுபவர்களை கண்காணிக்க வீடியோ பதிவுகள்

தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சில வழிகாட்டுதல்களுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் மூலம் வாகனத் தணிக்கைகள், ரோந்து வாகனத் தணிக்கைகள் மேற்கொண்டு விதிமுறைகளை மீறி …

கொரோனா தடுப்பு விதிமுறை மீறுபவர்களை கண்காணிக்க வீடியோ பதிவுகள் Read More

கொரோனா தொற்று ஆளிநர்களுக்கு ஆணையர் அறிவுரை

25.3.2021 காலை சென்னை எழும்பூரில் உள்ள காவலர் மருத்துவமனையில் முன்கள பணியாளர்களான சென்னை பெருநகர காவல் துறை ஆயுதப்படை பெண் காவலர்கள், காவல் கட்டுப்பாட்டறை அதிகாரிகள் ஆளிநர்களுக்கு கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னை பெருநகர காவல் ஆணையர் …

கொரோனா தொற்று ஆளிநர்களுக்கு ஆணையர் அறிவுரை Read More

சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

1.சைதாப்பேட்டை பகுதியில் கொள்ளை மற்றும் கிண்டி பகுதியில் இரட்டை கொலையில் ஈடுபட்ட 6 குற்றவாளிகள் கைது. 21 சவரன் தங்க நகைகள், கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 1 கார் பறிமுதல்: கடந்த 13.03.2021 அன்று இரவு சுமார் 10.20 மணிக்கு …

சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். Read More