தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 16.9.2021 அன்று தலைமைச்செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக,இந்து சமய அறநிலையத் துறை சார்பில்திருச்செந்தூர்– அருள்மிகு சுப்பிரமணிய சுவாமிதிருக்கோயில், சமயபுரம் – அருள்மிகு மாரியம்மன்திருக்கோயில், திருத்தணி – அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில்நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தைதுவக்கி வைத்தார். இறையருள் பெற திருக்கோயில்களுக்குவருகைதரும் பக்தர்களுக்கு உணவளிப்பதேஅன்னதானத் திட்டமாகும். தற்போது இத்திட்டத்தில்754 திருக்கோயில்களில் மதியவேளை அன்னதானம்வழங்கப்பட்டு வருகிறது. முந்தையகாலகட்டங்களிலும் திருக்கோயில்கள் மூலம்ஏழைகளுக்கு உணவளிக்கும் நடைமுறை இருந்துவந்துள்ளது. இதனைப் பின்பற்றி கொரோனாபெருந்தொற்று காலத்தில், ஏழை எளிய மக்களின்பசியினை போக்கும் விதமாக திருக்கோயில்கள்சார்பாக 44 இலட்சம் பேருக்கு உணவுப்பொட்டலங்கள் வழங்கப்பட்டன. திருக்கோயில்களில் தயாரிக்கப்படும் பிரசாதம்மற்றும் அன்னதானம் தரத்துடனும், சுகாதாரமானமுறையிலும் தயாரிக்கப்படுவதை உறுதி செய்திட,இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல்ஆணையத்தால் வழங்கப்படும் தரச்சான்று அனைத்துமுதுநிலை திருக்கோயில்களிலும் பெறப்பட்டுள்ளது. தற்போது, பழநி – அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில், திருவரங்கம் – அருள்மிகுஅரங்கநாதசுவாமி திருக்கோயில் ஆகிய இரண்டுதிருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானதிட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டமானது விரிவுபடுத்தப்பட்டு, திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் பயன்பெறவேண்டும் என்ற நோக்கில் 4.9.2021 அன்று இந்து சமயஅறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில்திருச்செந்தூர் – அருள்மிகு சுப்பிரமணிய சுவாமிதிருக்கோயில், சமயபுரம் – அருள்மிகு மாரியம்மன்திருக்கோயில், திருத்தணி – அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ஆகிய மூன்றுதிருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சரால் துவக்கி வைக்கப்பட்ட அன்னதானத்திட்டத்தின் வாயிலாக இம்மூன்று திருக்கோயில்களிலும் நாள்தோறும் சுமார் 7,500 பக்தர்கள் பயனடைவார்கள். இந்த அன்னதானத்திட்டத்தின் கீழ் பக்தர்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரை உணவு பரிமாறப்படும். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், பி.கே. சேகர்பாபு, சா.மு. நாசர், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர்முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச்செயலாளர் டாக்டர் பி. சந்தர மோகன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., திருச்சிராப்பள்ளிமாவட்ட ஆட்சித் தலைவர் சு. சிவராசு, இ.ஆ.ப., தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் கே. செந்தில்ராஜ், இ.ஆ.ப., திருவள்ளூர்மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.
திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி ஆகியதிருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் Read More