இந்தியா-பாகிஸ்தான் போரின் 50வது ஆண்டு பொன்விழா-2021 ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை

அனைவருக்கும் வணக்கம்.  நாட்டுப் பற்றும் உணர்ச்சியும் கலந்த இந்த வரலாற்று நினைவு நாளில் கலந்து கொண்டிருக்கும் போர் வீரர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும், வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.  இராணுவத்தில் பணியாற்றுவது என்பதை பணியாற்றுவது என்று சொல்ல முடியாது.  மக்களைக் காப்பதும் …

இந்தியா-பாகிஸ்தான் போரின் 50வது ஆண்டு பொன்விழா-2021 ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை Read More

வட இந்திய பெருங்கடலில் சூறாவளி புயல் அதிகரிக்கிறது

கடந்த 40 ஆண்டு காலமாக, வடஇந்திய பெருங்கடல்பகுதியில் சூறாவளிப் புயல்களின் தீவிரம் அதிகரித்துவருவதாக, இந்திய விஞ்ஞானிகளின் சமீபத்திய ஆய்வுகூறுகிறது. சமூக பொருளாதார பாதிப்புகளுடன் கூடியஇந்த அதிகரிப்புக்கு, அதிக ஈரப்பதம், குறிப்பாகவளிமண்டலத்தில்,  பலவீனமான செங்குத்து காற்று, மற்றும்சூடான கடல் மேற்பரப்பு வெப்பநிலை போன்ற வளிமண்டல அளவுருக்கள்தான் காரணம். இது,  சூறாவளியைஅதிகரிக்கும் போக்கை கொண்டு வருவதில் புவிவெப்பமயமாக்கலின் பங்கை குறிக்கிறது. புவிவெப்பமயமாவதன் காரணமாக, உலக கடற்பரப்புகளில், சூறாவளியின் தீவிரம் அடிக்கடி அதிகரிப்பதுகவலையளிக்கும் விஷயமாக உள்ளது. வடஇந்தியபெருங்கடல்பகுதியில், அதி தீவிர புயல்கள் அடிக்கடிஉருவாவது, கடலோர பகுதிகளில் குறிப்பிடத்தக்க ஆபத்துமற்றும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பருவநிலை மாற்ற திட்டத்தின் கீழ், வட இந்தியப்பெருங்கடலில் வெப்பமண்டல சூறாவளி செயல்பாட்டில்பெரிய அளவிலான சுற்றுச்சூழல் ஓட்டம் மற்றும் எல் நினோ–தெற்கு அலைவு (ENSO) ஆகியவற்றில் முக்கியமானவளிமண்டல அளவுருக்களின் பங்கு மற்றும் செல்வாக்குகுறித்து  காரக்பூர் ஐஐடி கடல் பொறியில் துறை மற்றும்கடற்படை கட்டிடக்கலை விஞ்ஞானிகள் ஜியா ஆல்பர்ட், அதிரா கிருஷ்ணன் மற்றும் பிரசாத் கே.பாஸ்கரன் ஆகியோர்வேலூர் விஐடி பல்கலைக்கழக பேரிடர் மேலாண்மைமையத்தின் கே.எஸ்.சிங் மற்றும் மத்திய அரசின் அறிவியல்மற்றும் தொழில்நுட்ப துறையுடன் இணைந்து ஆய்வுமேற்கொண்டனர்.  ஆற்றல் சிதைத்தல் குறியீடு (Power Dissipation Index ) என்றழைக்கப்படும் வெப்பமண்டலசூறாவளிகளின் அழிவு ஆற்றலுக்கான அளவுகோலுடன்,  கணிசமான தொடர்பை நிரூபித்த இந்த ஆராய்ச்சிசமீபத்தில் ‘கிளைமேட் டைனமிக்ஸ்’ என்ற தலைப்பில் ஸ்பிரிங்கர்  என்ற இதழில் வெளியிடப்பட்டது.  குறிப்பாக, இந்த வெப்ப மண்டல சூறாவளிகள், பருவமழைக்குமுந்தைய காலத்தில் ஏற்படும் போக்கு அதிகரித்துள்ளது. 2000ம் ஆண்டுக்கு பின்பு வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிகள் அதிகரிக்கும் போக்குகாணப்பட்டது. வலுவான நடுத்தர அளவிலான  ஈரப்பதம் , நேர்மறையானகுறைந்த அளவிலான  சுழல்நிலை , பலவீனமான செங்குத்துகாற்று , சூடான கடல் மேற்பரப்பு வெப்பநிலை  மற்றும்அடக்கப்பட்ட வெளிச்செல்லும் நீண்ட அலை கதிர்வீச்சு ஆகியவை வட இந்தியப் பெருங்கடலில் அதிகரித்தவெப்பமண்டல சூறாவளி அதிகரித்ததற்கு காரணம் எனஇந்த ஆய்வில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் புதிய கண்டுபிடிப்புகள், வட இந்தியபெருங்கடல் பகுதியில் வெப்பமண்டல சூறாவளிகளின்செயல்பாட்டில் மேம்பட்ட ஆராய்ச்சியை அதிகரிக்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

வட இந்திய பெருங்கடலில் சூறாவளி புயல் அதிகரிக்கிறது Read More

பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளும் ரத்து செய்யப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்

 2012ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டுபிப்ரவரி மாதம் வரை அவதூறுப் பேச்சுக்கள் மற்றும்செய்தி வெளியீடுகளுக்காகத் தினசரி மற்றும் வாரப்பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர், அச்சிட்டவர், வெளியிட்டவர் மற்றும் தொலைக்காட்சிஊடகங்களின் செய்தி ஆசிரியர், பேட்டியளித்தவர்ஆகியோர் மீது சுமார் 90 அவதூறு வழக்குகள்போடப்பட்டிருந்தன. அவற்றுள் ‘தி …

பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளும் ரத்து செய்யப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார் Read More

தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து வகை முன்னெடுப்புகளையும் மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 27.7.2021 அன்று தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தஞ்சை – தமிழ்ப் பல்கலைக்கழகம்,  மதுரை-உலகத் தமிழ்ச் சங்கம்,  உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், …

தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து வகை முன்னெடுப்புகளையும் மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார் Read More

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர்களை உற்சாகப்படுத்துகின்ற வகையில் “வென்று வா வீரர்களே” என்ற பாடலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக விளையாட்டு வீரர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் 16.7.2021 அன்று காணொலிக் காட்சி மூலமாக பேசும் போது, “இந்த அரசு விளையாட்டுத் துறைக்கு ஊக்கமளிக்கும் அரசாக இருக்கும். இந்த அரசுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் நீங்கள் அனைவரும் பதக்கத்துடன் வரவேண்டும். அனைவரும் பதக்கம் …

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர்களை உற்சாகப்படுத்துகின்ற வகையில் “வென்று வா வீரர்களே” என்ற பாடலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். Read More

தமிழக சட்டபேரவையில் கலைஞர் கருணாநிதியின் படத்தை திறந்து வைக்கிறார் இந்திய குடியரசு தலைவர்

கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்க ஆகஸ்ட் முதல் வாரத்தில் குடியரசு தலைவர் தமிழகம் வருகை தரவுள்ளார். சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்க ஆகஸ்ட் முதல் வாரத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழகம் வர உள்ளதாக தகவல் …

தமிழக சட்டபேரவையில் கலைஞர் கருணாநிதியின் படத்தை திறந்து வைக்கிறார் இந்திய குடியரசு தலைவர் Read More

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் புதுப்பித்தல் தொடர்பான ஆய்வுக் கூட்டம்.

சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறையின் கூட்டரங்கில் திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலினைப் பழமைமாறாமல் புதுப்பித்தல் தொடர்பான பெருந்திட்ட ஆய்வுக்கூட்டம் 17.07.2021 அன்று மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர் பாபு,மாண்புமிகு மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும்கால்நடைப் பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதாஆர்.இராதாகிருஷ்ணன், தூத்துக்குடி நாடாளுமன்றஉறுப்பினர் திருமதி.கனிமொழி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எச்.சி.எல் நிறுவனத்தினால் நியமனம்செய்யப்பட்ட கட்டிடக்கலை வல்லுனர்களால்திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமிதிருக்கோயிலினைப் பழமை மாறாமல் புதுப்பித்தல் மற்றும்பெருந்திட்டம் தொடர்பான ஆய்வுப் பணிகள்மேற்கொள்ளப்பட்டது. அப்பணிகள் தொடர்பான முதல்கட்டவிளக்கக் காட்சியில் திருக்கோயிலின் கட்டுமானம், பக்தர்களின் அடிப்படை வசதிகள், முக்கிய திருவிழாக்காலங்களில் அதிகப்படியான பக்தர்களைஈர்க்கும் வகையில் மேலாண்மை செய்தல், காற்றோட்டவசதிகள் உள்ளிட்ட பல்வேறு கருத்துரைகள் கலந்தாய்வுசெய்யப்பட்டன. இத்திருக்கோயில் சுமார் 63 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளதால் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள்பல்வேறு பகுதிகளாகப் பிரித்து செயல்பட வேண்டியுள்ளது.குறிப்பாகத் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களின்பயன்பாட்டிற்காக அடிப்படை வசதியான குடிநீர் வசதி, கழிவுநீர் மேலாண்மை, மின்னாளுமை, வாகனம் நிறுத்தும்இடங்கள், ஒளியமைப்பு இவைகளை அதிக செலவின்றிதரமானதாக அமைத்தல் மற்றும் மின் சிக்கனத்தையும்கருத்தில் கொள்ளுதல், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டபின்னர் பணியாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தல், பக்தர்கள் வரிசையில் ஓய்வெடுப்பதற்கான இடங்களில்கழிப்பறை, குடிநீர் மற்றும் பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்டஅனைத்து வசதிகள் இப்பெருந்திட்டத்தில் இடம்பெறவேண்டும் என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கோயில் வளாகத்தில் அதிகளவிலான திருமணங்கள்ஒரே நாளில் திருக்கோயிலில் நடைபெறும் போது அவற்றைமேலாண்மை செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படவேண்டும் எனவும், திருக்கோயில் சுற்றுப்புறத்தில்இயக்கப்படும் பொதுப் போக்குவரத்து மற்றும் தனியார்வாகனங்கள் ஓர் இடத்தில் முறைப்படுத்தப்பட்டு அங்குஇருந்து திருக்கோயிலுக்கு மினி வாகனம் இயக்கப்படவேண்டும் எனவும், திருக்கோயில் சுற்றுப்புறத்தில் வசிக்கும்மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு மேற்படிதிட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் எனவும் அறிவுரைகள்வழங்கப்பட்டது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள்துறை முதன்மைச் செயலாளர், முனைவர்பி.சந்திர மோகன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை, ஆணையர், ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., கூடுதல்ஆணையர், திரு.கண்ணன், இ.ஆ.ப., திருச்செந்தூர்,அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், தக்கார், திரு.கண்ணன், விளாத்திகுளம், சட்டமன்ற உறுப்பினர வி.மார்க்கண்டேயன், எச்.சி.எல் நிறுவன கட்டிடக்கலைவல்லுனர் திருமதி.ஸ்ரீமதி உட்பட பல அரசு உயர்அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் புதுப்பித்தல் தொடர்பான ஆய்வுக் கூட்டம். Read More

மறைமலை அடிகளாரின் பிறந்த நாளில் அரசு மரியாதை

மறைமலை அடிகளாரின் இயற்பெயர் வேதாச்சலம். இவர் வடமொழியில் இருந்த தனது பெயரைத் தனித்தமிழில் மறைமலையடிகள் என மாற்றிக்கொண்டார்.  மறைமலையடிகள் 1876ஆம் ஆண்டு சூலை 15ஆம் நாள் நாகப்பட்டினத்தில் பிறந்தார். இவர் சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பொறுப்பேற்று மாணவர்களுக்கு எளிய முறையில் பாடம் கற்பித்தவர். …

மறைமலை அடிகளாரின் பிறந்த நாளில் அரசு மரியாதை Read More

கர்நாடக மேகதாது அணைக்கட்டு தொடபாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மூன்று தீர்மானம் நிறைவேற்றம்

கர்நாடக அரசு, மேகதாதுவில் அணையைக்கட்ட உத்தேசித்துள்ள நிலையில், காவிரி நதிநீரில்தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டவும்,காவிரி நதிநீரைக் கொண்டு விவசாயம் செய்துவரும் தமிழ்நாடு வேளாண் பெருங்குடி மக்களின்நலனைப் பேணிக்காக்கவும், தமிழ்நாடு அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  இந்நிலையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல், எவ்வித அனுமதியும் பெறாமல் மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட முயற்சித்து வருகிறது.  இதுகுறித்து அனைத்துச் சட்டமன்றக்கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்துமுடிவெடுப்பதற்கு ஏதுவாக, இன்று (12–7–2021) தலைமைச் செயலகத்தில், மாண்புமிகுமுதலமைச்சர் அவர்கள் தலைமையில் அனைத்துச்சட்டமன்றக் கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர்           திரு. துரைமுருகன்கலந்துகொண்டார்.  அனைத்துச் சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் …

கர்நாடக மேகதாது அணைக்கட்டு தொடபாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மூன்று தீர்மானம் நிறைவேற்றம் Read More