மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானைக்கு அளிக்கப்படும் சிகிச்சையை அமைச்சர் சேகர் பாபு கேட்டறிந்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில்   ரூ.18 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வீரவசந்தராயர் மண்டபம் திருப்பணிகள் மற்றும் கோயில் யானைக்குத் தேவையான மேல் சிகிக்சைகள் குறித்து இன்று (18.06.2021) மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு  மேற்கொண்டார். மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் …

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானைக்கு அளிக்கப்படும் சிகிச்சையை அமைச்சர் சேகர் பாபு கேட்டறிந்தார் Read More

கொரோனா காலத்தில் களப்பணியாற்றிவரும் காவலர்களுக்கு ரூ.58 கோடி ஊக்கத் தொகை அறிவித்தார் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், களப்பணியாற்றி வரும் காவல் துறையினர் தங்களது இன்னுயிரையும் பொருட்படுத்தாது கடமையாற்றி வருகின்றனர். அவர்களது தன்னலமற்ற பணியினை அங்கீகரிக்கும் விதமாகவும், ஊக்கப்படுத்தும் விதமாகவும், தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றி வரும் இரண்டாம் நிலைக் காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான  1 இலட்சத்து 17 ஆயிரத்து 184 காவல் துறையினருக்கு,ரூபாய் …

கொரோனா காலத்தில் களப்பணியாற்றிவரும் காவலர்களுக்கு ரூ.58 கோடி ஊக்கத் தொகை அறிவித்தார் மு.க.ஸ்டாலின் Read More

பிரதமர் மோடியை சந்தித்தது மன நிறைவான சந்திப்பாக இருந்தது – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் நடந்து  முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்திருக்கிறது, புதிய அமைச்சரவை என்னுடைய தலைமையில் அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக பொறுப்பேற்றதற்குப் பிறகு, முதன்முதலில் டெல்லி தலைநகருக்கு நான் வந்திருக்கிறேன். இந்த மாலை நேரத்தில் இங்கு …

பிரதமர் மோடியை சந்தித்தது மன நிறைவான சந்திப்பாக இருந்தது – முதல்வர் மு.க.ஸ்டாலின் Read More

டெல்டா பிளஸ்’ என்ற புதிய மாறுபட்டகொரோனா, கவலையளிக்க கூடியதாக இன்னும்வகைப்படுத்தப்படவில்லை

இந்தியாவுக்கு வெளியே புதிதாக கண்டறியப்பட்டுள்ள‘டெல்டா பிளஸ்’ என்ற மாறுபட்ட கொரோனா, கவலையளிக்கக் கூடியதாக இன்னும் வகைப்படுத்தவில்லைஎன  நிதி ஆயோக் உறுப்பினர்(சுகாதாரம்) டாக்டர் வி.கே. பால் கூறியுள்ளார். இது குறித்து தில்லியில் உள்ள பத்திரிகை தகவல்அலுவகத்தின் தேசிய ஊடக மையத்தில் இந்த வாரதொடக்கத்தில் அளித்த பேட்டியில் டாக்டர் வி.கே.பால்கூறியதாவது: ‘டெல்டா பிளஸ்’ என்ற புதிய மாறுபட்ட கொரோன வகைகண்டறிப்பட்டுள்ளது. இதன் தற்போதைய நிலவரம், புதிதாககண்டறியப்பட்ட வைரஸ் (Variant of Interest (VoI)).   இதுகவலையளிக்க கூடியதாக Variant of Concern (VoC).  இன்னும் வகைப்படுத்தப்படவில்லை. கவலையளிக்கக்கூடிய வகை என்றால், பரவும் வேகம் தீவிரமாக இருக்கும். இப்போதைக்கு ‘டெல்டா பிளஸ்’ கொரோனாவின் தன்மைபற்றி எங்களுக்கு தெரியாது. இந்த மாறுபட்ட கொரோனா நம் நாட்டில் இருக்கிறதாஎன்பதை கண்காணித்து, அதற்கேற்ப சுகாதாரநடவடிக்கைகளை எடுப்பதுதான் நாம் மேற்கொள்ளவேண்டிய வழி. இந்த மாற்றத்தின் விளைவை நாம் அறிவியல்பூர்வமாக கண்காணிக்க வேண்டும். இந்த மாறுபட்ட வகைகொரோனா நம் நாட்டுக்கு வெளியே கண்டறிப்பட்டுள்ளது.  இதன் மரபியல் குறித்து ஆராயும் இந்திய கொவிட்கூட்டமைப்பு(இன்சாகாக்) மூலம் கண்காணிக்க வேண்டும்.  இதுதான், இந்த அமைப்பில் உள்ள 28 ஆய்வு மையங்களின்எதிர்காலப் பணி.  இந்த அமைப்பு இதை தொடர்ச்சியாககண்காணித்து ஆய்வு செய்யும். இந்த மாறுபட்ட கொரோனா, கட்டுப்பாடு நடவடிக்கைகள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தைநமக்கு நினைவுபடுத்துகிறது. இந்த மாறுபட்ட கொரோனாவை, எந்த ஆயுதம் கொண்டும்அழிக்க முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதை கண்காணித்து, அதன் தன்மையை புரிந்து கொண்டு, அதற்கேற்ற தடுப்பு நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளவேண்டும். இதில் கொவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், கொவிட் தடுப்பு நடவடிக்கைகளின் அதே விதிமுறைகளும்அடங்கியுள்ளன. கொவிட் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலம், எந்த வகை மாறுபட்ட கொரேனாவையும் சமாளிக்க முடியும். தொற்றுக்கு அடிப்படை காரணம், பரவல் சங்கிலிதான். இந்த பரவல் சங்கிலியை நாம் முறித்துவிட்டால், எந்த வகைமாறுபட்ட கொரோனா பரவலையும், நம்மால் கட்டுப்படுத்தமுடியும். இவ்வாறு டாக்டர் வி.கே.பால் கூறினார்.

டெல்டா பிளஸ்’ என்ற புதிய மாறுபட்டகொரோனா, கவலையளிக்க கூடியதாக இன்னும்வகைப்படுத்தப்படவில்லை Read More

டில்லிக்கான தமிழகரசின் சிறப்பு பிரதிநியாக விஜயன் பொறுப்பேற்றார்

தமிழ்நாடு அரசின் புது டில்லிக்காண சிறப்பு பிரதிநிதி ஏ.கே எஸ். விஜயன் அமைச்சர் துரை முருகன்  முன்னிலையில் புதுடில்லி வைகை தமிழ்நாடு இல்லத்தில் அமைந்துள்ள சிறப்பு சிறப்பு பிரதிநிதியின் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். அவ்வமயம் மாண்புமிகு பாராளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் தயாநிதி மாறன், செந்தில்குமார், சுமதி என்ற தமிழச்சி தங்கபாண்டியன்  T.R.V.S.ரமேஷ், பொன் …

டில்லிக்கான தமிழகரசின் சிறப்பு பிரதிநியாக விஜயன் பொறுப்பேற்றார் Read More

கொரோனா தொற்று அதிகமுள்ள11 மாவட்டங்களில் 21ஆம் தேதி வரை இலவச உணவு பொட்டலங்கள் வழங்கப்படுமென அமைச்சர் பி கே சேகர்பாபு அறிவித்தார்

தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்றுகாரணமாக பெரும்பாலான ஏழை எளிய மக்கள் தங்களது வாழ்வாதாரத்தினை இழந்து அன்றாடவாழ்க்கைக்கு போராடி வரும் நிலையில் அவர்களதுபசியினை போக்கும் விதமாகவும், அரசுமருத்துவமனைகளில் கொரோனா பெருந்தொற்றுகாரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள், அவர்களின் உதவியாளர்கள் மற்றும் உணவு தேவைப்படும்நபர்களுக்கு 12.05.2021 அன்று முதல் 14.06.21 வரைநாள்தோறும் ஒரு இலட்சம் உணவுப் பொட்டலங்கள்திருக்கோயில்கள் மூலம் வழங்கிடுமாறு மாண்புமிகுமுதலமைச்சர் வழிகாட்டுதல் படி, ஆணையிடப்பட்டுஉணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வந்தன. ​ இதற்கான போதிய நிதி வசதி இல்லாததிருக்கோயில்களுக்கு இந்து சமய அறநிலையத்துறைஆணையர் அலுவலகத்தில் பேணப்பட்டு வரும்அன்னதான மைய நிதியில் இருந்து வழங்கப்படுகிறது.தற்போது கொரோனா நோய் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களுக்கு மட்டும் 14.06.2021 முதல் 21.06.2021 வரை சில கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்குநீட்டிக்கப்பட்டுள்ளது.  இக்கால கட்டத்திலும் திருக்கோயில்கள் வாயிலாக 11 மாவட்டங்களின்மருத்துவ மனைகளில் உள்ள நோயாளிகள் உள்ளிட்டஉணவு தேவைப்படும் நபர்களுக்கு 21.06.2021 வரைதொடர்ந்து வழங்கிட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுஎன்பதனையும், இதற்கான கூடுதல் நிதி தேவைப்படும்திருக்கோயில்களுக்கு அன்னதான திட்ட மையநிதியிலிருந்து வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளதையும்நிறைந்த மனதுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கொரோனா தொற்று அதிகமுள்ள11 மாவட்டங்களில் 21ஆம் தேதி வரை இலவச உணவு பொட்டலங்கள் வழங்கப்படுமென அமைச்சர் பி கே சேகர்பாபு அறிவித்தார் Read More

“நூற்றாண்டு காணும் தி.ஜானகிராமனின்படைப்புகள் காலத்தை வென்று வாழும்திறனுடையவை” – முதல்வர் மு.க.ஸ்டாலின்புகழாரம்

15.06.2021, செவ்வாய்க்கிழமை, மாலை 6 மணிக்கு, ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையிலுள்ளமுதலமைச்சரின் இல்லத்தில், முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், எழுத்தாளர் தி.ஜானகிராமனின் நூற்றாண்டுநிறைவைக் (1921-2021)கொண்டாடும் ‘ஜானகிராமம்‘ என்ற நூலைவெளியிட்டார். அப்போது முதல்வர், “தமிழின்தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் தி.ஜானகிராமன். அவரது படைப்புகள் காலத்தை வென்று வாழும்திறனுடையவை. அவரது படைப்புகள்குறித்துப் பல்வேறுதுறையைச் சேர்ந்தவர்களால் எழுதப்பட்ட இந்நூலைவெளியிடுவதில் பெருமையடைகிறேன். தி.ஜானகிராமன்நூற்றாண்டு விழாவை முன்னெடுக்கும் அனைவர்க்கும்எனது நன்றிகள்“ என்று குறிப்பிட்டார். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில், மன்னார்குடிக்குஅருகிலுள்ள ‘தேவங்குடி’ என்ற ஒரு சிறிய கிராமத்தில், தியாகராஜ சாஸ்திரி – நாகலட்சுமி ஆகியோரின்இரண்டாம் மகனாக, 28.06.1921இல்பிறந்த தி.ஜானகிராமன், தமிழின் மகத்தானகலைஞர்களுள் ஒருவர். தி.ஜானகிராமன் மறைந்து(18.11.1982) முப்பத்தொன்பது ஆண்டுகளாகிவிட்டபிறகும், நவீனத் தமிழிலக்கியத்தில் அவர் புகழ்இன்றும் ஓங்கியே இருக்கிறது. அவருடையபுனைகதைகள், தமிழ் வாசகர்களால் இன்றும் விரும்பிவாசிக்கப்படுகின்றன. அகில இந்திய வானொலியின்கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகப் பணியாற்றிஓய்வுபெற்ற தி.ஜானகிராமன், தஞ்சாவூர் மாவட்டமக்களின் வாழ்வியலைக் கலைத்திறத்துடன் தம்படைப்புகளில் பதிவுசெய்த ஒரு முன்னோடிஎழுத்தாளராவார். அவர் எழுத்தில் காவிரியும் இசையும்தஞ்சை மண்ணின் இயற்கை வளமும் டெல்டாமனிதர்களின் வாழ்வியல் கோலங்களும் நுட்பமாகப்பதிவுபெற்றுள்ளன. சாகித்திய அகாதமிவிருது (1979) பெற்ற அமரர் தி.ஜானகிராமனின்(28.06.2021) நூற்றாண்டு நிறைவைச் சிறப்பிக்கும்நோக்கில், தி.ஜா. ஆய்வாளர் கல்யாணராமன், பல்வேறுஎழுத்தாளர்களிடமிருந்து தி.ஜானகிராமனின்படைப்புகளைப் பற்றிய (102) கட்டுரைகளைப்பெற்று, ‘ஜானகிராமம்‘ என்றதலைப்பில், 1032 பக்கங்களில் ஒரு பெருநூலைத்தொகுத்துள்ளார். இந்நூலைக் ‘காலச்சுவடு‘ பதிப்பகம் வெளியிட்டுள்ளது.15.06.2021 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்குமுதலமைச்சரின் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வில், மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்வெளியிட, ‘ஜானகிராமம்‘ நூலின் முதல் பிரதியைத்தி.ஜானகிராமனின் மகள் உமாசங்கரியின் சார்பாக, ‘விப்ராஸ் ஆட்ஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்திருமதி கெஜலக்ஷ்மி ரகு பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில், இந்நூலின்தொகுப்பாசிரியர் கல்யாணராமன், நந்தனம் கல்லூரித்தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் சீதாபதி ரகு, கிண்டி செல்லம்மாள் மகளிர் கல்லூரித் தமிழ்த்துறைப்பேராசிரியர் முனைவர் தா.அ.சிரிஷாராமன், பத்திரிகையாளர் சுந்தரபுத்தன் ஆகியோர் பங்கேற்றனர்.

“நூற்றாண்டு காணும் தி.ஜானகிராமனின்படைப்புகள் காலத்தை வென்று வாழும்திறனுடையவை” – முதல்வர் மு.க.ஸ்டாலின்புகழாரம் Read More

தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வந்துவிட்டதே தவிர முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்கிறார் முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது அன்பானவணக்கம். உங்கள் நலன் காக்கும் இந்த அரசு தொடர்ச்சியாகமேற்கொண்ட நடவடிக்கைகளால் கொரோனா என்றபெருந்தொற்று ஒரளவு கட்டுக்குள் வந்திருக்கிறதுஎன்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் அதிகபட்சமாக ஒரு நாளைக்குதொற்றால் பாதிக்கப்படுபவர்கள் 36,000 ஆகஇருந்தார்கள். இது 50,000 ஆகும் என்றுமருத்துவர்கள் சொன்னார்கள். ஆனால் அரசு எடுத்தபல்வேறு நடவடிக்கைகளால் பாதிப்பு எண்ணிக்கை15,000-க்கும் கீழ் குறைந்துகொண்டு வருகிறது.ஒவ்வொரு நாளும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின்எண்ணிக்கை மிக விரைவாக குறைந்துகொண்டேவருகிறது. மருத்துவமனைகளில் படுக்கைகள்இல்லை,  ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள்காலியாக இல்லை என்பது மாதிரியான நிலைமைஇப்போது இல்லை. கட்டளை மையம் என்ற வார்ரூமுக்கு உதவிகள் கேட்டு வருகின்ற தொலைபேசிஅழைப்புகளும் குறைந்துவிட்டது.தேவைப்படுபவர்களுக்கு உடனடியாக சிகிச்சைகிடைக்கக்கூடிய நிலைமையை உங்களுக்கான இந்தஅரசு உருவாக்கி இருக்கிறது. தமிழ்நாடு அரசுபல்வேறு முனைகளில் எடுத்த முயற்சிகளின்காரணமாகத்தான் இரண்டு வாரக் காலத்தில்அனைத்தும் கட்டுக்குள் வந்திருக்கிறது. ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குப் பரவுகிறசங்கிலியை முதலில் உடைத்தாக வேண்டும்.அதற்காகத்தான் மக்கள் நடமாட்டத்தைக்கட்டுப்படுத்த முழு ஊரடங்கை அறிவித்தோம்.ஊரடங்கு கட்டுப்பாட்டை மக்கள் முறையாகவும், முழுமையாகவும் கடைபிடித்ததால்தான், இந்தஅளவிற்குக் கொரோனா பரவல் கட்டுக்குள்வந்திருக்கிறது. எனவே, விதிமுறைகளைப் பின்பற்றிநடந்துகொண்ட நாட்டு மக்கள் அனைவருக்கும் எனதுநெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஊரடங்கை இன்னும் ஒருவாரக் காலத்திற்குநீட்டித்து அறிவியுங்கள் என்று பொதுமக்களிடமிருந்தே கோரிக்கை வந்தது. அரசும் மக்களும் ஒரே மாதிரியாக சிந்திப்பதுமட்டுமல்ல, மக்களுடைய எண்ணங்களைத்தான் அரசுசெயல்படுத்தி வருகிறது என்பதற்கு இதைவிட வேறுஆதாரம் தேவையில்லை. என்னதான் அரசாங்கம்கட்டுப்பாடுகளை விதித்தாலும், அதை மக்கள்பின்பற்றினால்தான் முழு வெற்றி சாத்தியம் ஆகும்.விதிகளை மக்கள் பின்பற்றுவதால்தான் தொற்றுபரவல் குறைந்தது. அதேபோன்ற எச்சரிக்கைஉணர்வோடு மக்கள் தொடர்ந்து இருக்கவேண்டும்என்று கேட்டுக் கொள்கிறேன். கொரோனா கட்டுக்குள் வந்துவிட்டது என்று தான்சொன்னேனே தவிர, முழுமையாக அதற்குமுற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது என்றுசொல்லவில்லை. மக்கள் மிகமிக எச்சரிக்கையாகஇருக்க வேண்டும். அரசாங்கம் எடுக்கின்றநடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். அரசும், மக்களுடைய நெருக்கடியைஉணர்ந்திருக்கின்ற காரணத்தினால்தான் கொரோனாதொற்று குறைந்து வரும் மாவட்டங்களில் சிலதளர்வுகளை கொடுத்திருக்கிறோம். சிலகட்டுப்பாடுகளை விதித்திருக்கிறோம்.

தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வந்துவிட்டதே தவிர முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்கிறார் முதல்வர் ஸ்டாலின் Read More

கொரோனா தொற்றால் பல மாதங்கள் மூடிக்கிடந்த டீ கடைகள் மீண்டும் திறப்பு

தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்றின்பரவலைக் கட்டுப்படுத்த கடந்த  31-5-2021 முதல்நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் முழு ஊரடங்கு நல்லபலனை அளித்துள்ளது. இந்நிலையில், மக்களின்வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்றநோக்கத்தில், நோய்ப் பரவல் முழுமையாக கட்டுக்குள்வராத கோவை உள்ளிட்ட ஏழு மேற்கு மாவட்டங்கள்மற்றும் தஞ்சை உள்ளிட்ட நான்கு டெல்டாமாவட்டங்கள் தவிர்த்த பிற மாவட்டங்களில்தளர்வுகள் சற்று விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக பல்வேறுதரப்பினரிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கைகள்பரிசீலிக்கப்பட்டு, மேற்படி 11 மாவட்டங்கள் தவிர்த்து, தமிழ்நாட்டின்  இதர 27 மாவட்டங்களில் 14-6-2021 முதல், தேநீர்க் கடைகள் காலை 6 மணி முதல், மாலை 5 மணி வரை பார்சல் முறையில் மட்டும்வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது. பார்சல்முறையில்  தேநீர் வாங்க வரும் பொது மக்கள்பாத்திரங்களைக் கொண்டு வந்து பெற்றுச்செல்லுமாறும், நெகிழி பைகளில் தேநீர் பெறுவதைத்தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  கடைகளின் அருகே நின்று தேநீர் அருந்த அனுமதிஇல்லை.  மேலும், பேக்கரிகள், உணவகங்களுக்கு அனுமதிஅளிக்கப்பட்டது போல, இனிப்பு கார வகைகள்விற்கும் கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. இவை காலை 8 முதல் மதியம் 2 மணி வரை இவைஇயங்கலாம். இங்கும் பார்சல் முறை விற்பனை மட்டும்அனுமதிக்கப்படுகிறது. பொது மக்களின் நலன் கருதி, அரசுஅலுவலகங்களிலிருந்து சான்றிதழ்கள் மற்றும்சேவைகளைப் பெற இ-சேவை மையங்கள் 14-6-2021 முதல் இயங்க அனுமதி வழங்கப்படுகிறது.  கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள ஏற்கனவேஅனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால்,அப்பணிகளுக்கான அலுவலகங்கள் இயங்காதநிலையில் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கவும், வாங்கும் கட்டுமானப் பொருட்களுக்கு பணம்செலுத்தவும் உள்ள பணித் தேவைகளை கருத்தில்கொண்டு, கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்கள்50 சதவிகிதப் பணியாளர்களுடன் இயங்க அனுமதிஅளிக்கப்படுகிறது.

கொரோனா தொற்றால் பல மாதங்கள் மூடிக்கிடந்த டீ கடைகள் மீண்டும் திறப்பு Read More

பெண்களும் அர்ச்சகராகலாமென அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதைப்போல, பெண்களும் அர்ச்சகர் ஆவதற்கு விருப்பப்பட்டால் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். அர்ச்சகராக விரும்பும் பெண்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

பெண்களும் அர்ச்சகராகலாமென அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார் Read More