கொரோனா தொற்றால் பல மாதங்கள் மூடிக்கிடந்த டீ கடைகள் மீண்டும் திறப்பு

தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்றின்பரவலைக் கட்டுப்படுத்த கடந்த  31-5-2021 முதல்நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் முழு ஊரடங்கு நல்லபலனை அளித்துள்ளது. இந்நிலையில், மக்களின்வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்றநோக்கத்தில், நோய்ப் பரவல் முழுமையாக கட்டுக்குள்வராத கோவை உள்ளிட்ட ஏழு மேற்கு மாவட்டங்கள்மற்றும் தஞ்சை உள்ளிட்ட நான்கு டெல்டாமாவட்டங்கள் தவிர்த்த பிற மாவட்டங்களில்தளர்வுகள் சற்று விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக பல்வேறுதரப்பினரிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கைகள்பரிசீலிக்கப்பட்டு, மேற்படி 11 மாவட்டங்கள் தவிர்த்து, தமிழ்நாட்டின்  இதர 27 மாவட்டங்களில் 14-6-2021 முதல், தேநீர்க் கடைகள் காலை 6 மணி முதல், மாலை 5 மணி வரை பார்சல் முறையில் மட்டும்வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது. பார்சல்முறையில்  தேநீர் வாங்க வரும் பொது மக்கள்பாத்திரங்களைக் கொண்டு வந்து பெற்றுச்செல்லுமாறும், நெகிழி பைகளில் தேநீர் பெறுவதைத்தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  கடைகளின் அருகே நின்று தேநீர் அருந்த அனுமதிஇல்லை.  மேலும், பேக்கரிகள், உணவகங்களுக்கு அனுமதிஅளிக்கப்பட்டது போல, இனிப்பு கார வகைகள்விற்கும் கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. இவை காலை 8 முதல் மதியம் 2 மணி வரை இவைஇயங்கலாம். இங்கும் பார்சல் முறை விற்பனை மட்டும்அனுமதிக்கப்படுகிறது. பொது மக்களின் நலன் கருதி, அரசுஅலுவலகங்களிலிருந்து சான்றிதழ்கள் மற்றும்சேவைகளைப் பெற இ-சேவை மையங்கள் 14-6-2021 முதல் இயங்க அனுமதி வழங்கப்படுகிறது.  கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள ஏற்கனவேஅனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால்,அப்பணிகளுக்கான அலுவலகங்கள் இயங்காதநிலையில் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கவும், வாங்கும் கட்டுமானப் பொருட்களுக்கு பணம்செலுத்தவும் உள்ள பணித் தேவைகளை கருத்தில்கொண்டு, கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்கள்50 சதவிகிதப் பணியாளர்களுடன் இயங்க அனுமதிஅளிக்கப்படுகிறது.

கொரோனா தொற்றால் பல மாதங்கள் மூடிக்கிடந்த டீ கடைகள் மீண்டும் திறப்பு Read More

பெண்களும் அர்ச்சகராகலாமென அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதைப்போல, பெண்களும் அர்ச்சகர் ஆவதற்கு விருப்பப்பட்டால் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். அர்ச்சகராக விரும்பும் பெண்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

பெண்களும் அர்ச்சகராகலாமென அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார் Read More

ரூ.426 கோடி மதிப்பீட்டில் 3260 குடியிருப்பிற்கான கட்டுமானப் பணிகளைஅமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்தார்

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் சென்னை-மைலாப்பூர் தொகுதிக்குட்பட்ட நான்கு திட்டப்பகுதிகளில் ரூபாய் 426.19 கோடி  மதிப்பீட்டில் 3260 குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார் ​தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் சென்னை-மைலாப்பூர் தொகுதிக்குட்பட்ட சீனிவாசபுரம், பட்டினப்பாக்கம், டொம்மிங்குப்பம், ஏகாம்பரம்பிள்ளை மற்றும் முனுசாமிபிள்ளை …

ரூ.426 கோடி மதிப்பீட்டில் 3260 குடியிருப்பிற்கான கட்டுமானப் பணிகளைஅமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்தார் Read More

வடலூர் வள்ளலார் நிலையத்தை உலகத்தரத்தில் உயர்த்த அமைச்சர் பி.கே. சேகர் பாபு ஆய்வு

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு 11.06.2021 அன்று இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் திருக்கோயிலில்ரூ.8.76 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கேபிள்கார் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு செய்து பணி முன்னேற்றம்குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம்விவரங்களை கேட்டறிந்தார். கேபிள்கார் பணியினை இந்தஆண்டு இறுதிக்குள் முடிக்கும் வகையில் விரைந்துசெயல்படுத்துமாறு அறிவுரை வழங்கினார். இது மட்டுமின்றிவாகன நிறுத்துமிடத்திலிருந்து கேபிள்கார் இயக்கப்படும்இடம் வரை வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள்ஆகியோரது நலனைக் கருத்தில் கொண்டு பேட்டரிவாயிலாக இயங்கும் வாகனங்களை பயன்படுத்துமாறுஅதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் அப்பகுதியில்நடைபெற்று வரும் சாலைப்பணியினை விரைந்துமுடிக்கவும், திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்குசுத்தமான குடிநீர் வசதியை ஏற்படுத்தித் தரவும் மற்றும்அப்பகுதியில் உள்ள திருக்குளங்களை புனரமைக்கவும்அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இந்த ஆய்வின்போதுஇந்து சமய அறநிலையத்துறை ஆணையர், இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர், சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் இதர அரசுஅலுவலர்கள் உடனிருந்தனர்.  அதன்பின்னர் மயிலாடுதுறை மாவட்டம்திருவெண்காட்டில் உள்ள இந்து சமயஅறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளஉயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றைநேரில் ஆய்வு செய்து அப்பள்ளிகளுக்குத் தேவையானஉட்கட்டமைப்பு வசதிகளை புனரமைக்கவும் புதிதாககழிப்பிடங்களை கட்டுவதற்கும் தேவையானகருத்துருக்களை இந்து சமய அறநிலையத்துறைஆணையருக்கு அனுப்பி வைக்குமாறு அதிகாரிகளுக்குஉத்தரவிட்டார். மேலும் ஆங்கில வழிக்கல்விஅறிமுகப்படுத்தவும் சுயநிதித் திட்டத்திலிருந்து அரசுஉதவிபெறும் திட்டமாக மாற்றுவதற்கு தேவையானகருத்துருக்களை அனுப்பி வைக்குமாறுமாறும்மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரை கேட்டுக்கொண்டார்.  இந்த ஆய்வின்போது இந்து சமய அறநிலையத்துறைஆணையர், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர், மயிலாடுதுறை மற்றும் சீர்காழி சட்ட மன்ற உறுப்பினர்கள்உடனிருந்தனர்.  இறுதியாக கடலூர் மாவட்டம் வடலூரில் அமைந்துள்ளதிரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தைமாண்புமிகு வேளாண்துறை அமைச்சர் அவர்களுடன்சேர்ந்து கூட்டாக ஆய்வு செய்தார்.  அவ்விடத்தில், 2021–ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் அறக்கையில்அறிவிக்கப்பட்டிருந்த உலகத்தரத்திலான வள்ளலார்சர்வதேச மையத்தினை உருவாக்குவதற்குத் தேவையானதிட்ட மதிப்பீட்டு அறிக்கை தயாரிப்பதற்கு ஏதுவாகவிரிவான கள ஆய்வை மேற்கொண்டார்.இவ்வாய்வின்போது இந்து சமய அறநிலையத்துறைஆணையர், கடலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் இந்து சமயஅறநிலையத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.  

வடலூர் வள்ளலார் நிலையத்தை உலகத்தரத்தில் உயர்த்த அமைச்சர் பி.கே. சேகர் பாபு ஆய்வு Read More

36 மாவட்டங்களில் தடுப்பூசிகள் இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில்   தற்போது சென்னையில் மட்டும் 1,060 தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாகவும், மற்ற 36 மாவட்டங்களில் தடுப்பூசிகள் இல்லை எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கோவிட் பேரிடர் காலங்களில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தரக்கூடிய உணவுகள், …

36 மாவட்டங்களில் தடுப்பூசிகள் இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் Read More

கருப்பு பூஞ்சை நோய் மருந்துக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு

தமிழக மக்கள் அனைவரும் தமிழக அரசின் கொரோனா தடுப்பு முயற்சிகளுக்கு கை கொடுக்கின்ற வகையில் நிதி வழங்க வேண்டுமென்று மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் விடுத்ததற்கிணங்க, இன்று (7–6-2021)வரை 280.20 கோடி ரூபாய் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது.  மாண்புமிகு முதலமைச்சர் பொது …

கருப்பு பூஞ்சை நோய் மருந்துக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு Read More

வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனா தொற்றடைந்த சிங்கங்களை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள ஆசிய சிங்கங்களுக்கு கோவிட்-19 தொற்று இருப்பது 3.6.2021 அன்றுஆய்வின் மூலம் அறியப்பட்டது. அவற்றில் 9 வயதுள்ள நீலா என்ற பெண் சிங்கம் 3.6.2021 அன்று இந்நோயால் இறந்தது. சிங்கங்களுக்கு கோவிட்-19 நோய் தொற்று ஹைதராபாத் உயிரியல் …

வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனா தொற்றடைந்த சிங்கங்களை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார் Read More

யாருடைய பணம் அது? ஊடக விவாதத்தில் பிடிஆரின் கேள்வி – கூகுளில் வேக வேகமாக தேடிய வடஇந்தியர்கள்

தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஊடக விவாதம் ஒன்று, இணையம் முழுக்க வைரலாகிக் கொண்டு இருக்கிறது. இதையடுத்து வடஇந்தியர்கள் பலர் பிடிஆர் குறித்து இணையத்தில் தேடி உள்ளனர். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பிடிஆர் வைத்த வாதங்கள் தேசிய அளவில் வைரலானது. …

யாருடைய பணம் அது? ஊடக விவாதத்தில் பிடிஆரின் கேள்வி – கூகுளில் வேக வேகமாக தேடிய வடஇந்தியர்கள் Read More

மாணவர் நலன் கருதி இந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படமாட்டாது  என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்

நாடு முழுவதும் பெருந்தொற்று இரண்டாம் அலையின்  பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் இப்பெருந்தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் செவ்வனே செய்து, அதில் வெற்றியும் பெற்று வருகிறது. இந்நிலையில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதவிருக்கும் …

மாணவர் நலன் கருதி இந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படமாட்டாது  என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார் Read More

கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே இருக்க முடியாதென மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்

மக்களை அச்சுறுத்தும் வகையில் பரவி வரும் கரோனாவிற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ள விடியோவில் தெரிவித்துள்ளதாவது,* ஊரடங்கை நீட்டிக்கொண்டே செல்ல முடியாது. கரோனா பரவலுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும். மக்கள் கட்டுப்பாடுகளை முறையாகக் …

கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே இருக்க முடியாதென மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார் Read More