கோயம்புத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான சேலம், சங்ககிரி, நாமக்கல், திருசெங்கோடு, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில்கலப்பட டீசல் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறைகாவல்துறை கூடுதல் இயக்குநர், திரு.ஆபாஸ்குமார், இ.கா.ப.,அவர்களின் உத்தரவுப்படி, காவல் கண்காணிப்பாளர்கள்திரு.ஸ்டாலின், திரு.பாஸ்கர் அவர்களின் நேரடி மேற்பார்வையில்காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள்தலைமையில் பல குழுக்களாகப் பிரிந்து மேற்படி பகுதிகளில்கலப்பட டீசல் வாகன சோதனை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் கலப்பட டீசல் சம்பந்தமாகமொத்தம் 07 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 26400 லிட்டர்கலப்பட டீசல் பறிமுதல் செய்யப்பட்டு அந்த டீசல் ஏற்றி வந்த 05 டேங்கர் லாரிகள் மற்றும் 03-Tata Ace வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன. மேலும் கடத்தல் செயலில் ஈடுபட்ட 10 நபர்கள்கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அதில் தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபடும் நபர்கள் மீது கள்ளசந்தை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் வைக்கநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் 13.08.21ஆம் தேதி சேலம் மாவட்டம் சங்ககிரி குப்பனூர்பிரிவு சாலையில் வாகன தணிக்கையின் போது அதிகாலை சுமார்03.00 மணியளவில் கோவையிலிருந்து சேலம் நோக்கி வந்த TN-49-AM 9978 என்ற எண்ணுள்ள டேங்கர் லாரியில் சுமார் 4000 லிட்டர்அளவுள்ள கலப்பட டீசல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, ஓட்டுநர்மதியழகன் (47) த.பெ. ராஜு மற்றும் க்ளினர் செல்வம் (26) த.பெ.சமுத்திரம் மற்றும் உரிமையாளர் இன்பராஜ் திருப்பூர் ஆகியோர்கள்கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதேபோல் பொள்ளாச்சி கே.ஜி. சாவடி எட்டிமடை கே.பி.எஸ்குடோன் அருகில் 12.08.21 ம் தேதி வாகனத் தணிக்கையில் 4000 லிட்டர் ஏற்றி வந்த லாரி TN 88 F 8767 மற்றும் TN 38 U 3594 என்றTATA ACE வாகனங்களை ஓட்டி வந்த ஓட்டுனர்கள் சபாபதி மற்றும்செல்வ கருப்பையா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும்சேலம் கேது நாயக்கபன்பட்டியில் கடந்த 05.08.21 ம் தேதி வாகனத்தணிக்கையில் 1350 லிட்டர் ஏற்றி வந்த லாரி TN 39 CD 2323 மற்றும்Steel barrel பறிமுதல் செய்யப்பட்டு வெங்கடேசன் கைதுசெய்யப்பட்டுள்ளார். அதேபோல் சேலம் சங்ககிரி முதல் எடப்பாடி ரோடு வாரிபேக்கரி முன்பு 06.08.21 ம் தேதி வாகனத் தணிக்கையில் 17050 லிட்டர் ஏற்றி வந்த லாரிகள் TN 34 L 0378, KA 01 AE 7577 மற்றும்TN 29 BD 1393 என்ற TATA ACE வாகன ஓட்டுனர்கள் கலப்பட டீசல்உரிமையாளர்களான ஆரோக்கியராஜ், கவுதம், சங்கர் மற்றும்பழனிசாமி ஆகியோர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் நாமக்கல்தொட்டிப்பட்டியில் 25.06.21 ம் தேதி 7000 லிட்டர் கலப்பட டீசலைஏற்றி வந்த லாரி TN 18 S …
கோவையில் கலப்பட டீசல் லாரி பறிமுதல் Read More