சுதந்திர போராட்டத்தில் அதிகம் அறியப்படாத தமிழகவீரர்களின் தியாகம், வீரம் குறித்த தகவல்களைஅனைத்து மக்களுக்கும் கொண்டு செல்லும் பணியைபொதிகை தொலைக்காட்சி மேற்கொள்ள வேண்டும் எனமத்திய தகவல் ஒலிபரப்பு இணையமைச்சர் திரு. எல். முருகன் கேட்டுக் கொண்டுள்ளார். மத்திய தகவல் ஒலிபரப்பு இணையமைச்சர் திரு. எல். முருகன் சென்னையில் உள்ள பொதிகைதொலைக்காட்சி செயல்பாடுகள் குறித்து இன்று ஆய்வுமேற்கொண்டார். இன்று காலை தொலைக்காட்சிநிலையம் வந்திருந்த அவரை பொதிகை தொலைக்காட்சிதுணை தலைமை இயக்குனர் திரு. கிருஷ்ணதாஸ், நிகழ்ச்சி பிரிவு தலைவர் திரு. சையது ரபீக் பாஷாஉள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து நடந்த ஆய்வுக்கூட்டத்தில் பேசிய மத்திய இணையமைச்சர், சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டை கொண்டாடிவருகிறோம். தமிழகத்தில் இருந்து எண்ணற்ற வீரர்கள்இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு தங்கள்இன்னுயிரை ஈந்தனர். இந்த சுதந்திர போரில் அதிகம்அறியப்படாத தமிழக வீரர்களின் தியாகம், வீரம்ஆகியவற்றை அனைத்து மக்களும் அறிந்து கொள்ளும்வகையில் பொதிகை தொலைக்காட்சி தங்களதுசெய்திகள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றை தயாரிக்கவேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும், கொரோனா பெருந்தொற்று காரணமாகபல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மத்தியதகவல் ஒலிபரப்புத் துறை ஊடக அதிகாரிகள்தொலைக்காட்சி, வானொலி மற்றும் சமூக ஊடகங்கள்மூலம் அரசின் திட்டங்களின் பயன்கள் குறித்தசெய்தியினை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும். குறிப்பாக 5 கிலோ இலவச அரிசி/ கோதுமை திட்டத்தின்பயன்கள், பிரதமரின் ஜன் தன் யோஜானா, மக்கள்மருந்தகம், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்ஆகியவற்றின் நோக்கம் குறித்து தொலைக்காட்சி மூலம்மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும் என்று கூறினார். நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மக்கள்விரும்பும் வகையில் நிகழ்ச்சிகளை தயாரிக்க வேண்டும்என்றும் ஓரளவுக்காவது சுயமாக வருவாயை ஈட்டும்வகையில், பொதிகை தொலைக்காட்சி தங்களதுதரத்தினை உயர்த்த வேண்டும் என அறிவுறுத்தினார். தொடர்ந்து, தொலைக்காட்சியின் பல்வேறுசெயல்பாடுகள் குறித்து இணையமைச்சரிடம்விளக்கப்பட்டது. மேலும், அதுகுறித்த காணொலியும்ஒளிபரப்பப்பட்டது. அடுத்து அகில இந்திய வானொலி & சென்னை தொலைக்காட்சி கூடுதல் தலைமை இயக்குனர் (பொறியியல்) அலுவலக வளாகத்தில் மரக்கன்றினை நட்டார்.இந்த கூட்டத்தில் பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல்தலைமை இயக்குனர் திரு. மா. அண்ணாதுரை, பொதிகை தொலைக்காட்சியின் செய்திப் பிரிவு, நிகழ்ச்சி பிரிவு, பொறியியல் பிரிவு அதிகாரிகள், சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம், அகில இந்தியவானொலியை சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அதிகம் அறியப்படாத தமிழக சுதந்திரபோராட்ட வீரர்களை தொலைக்காட்சிவாயிலாக வெளிக்கொண்டு வர மத்தியஇணையமைச்சர் வேண்டுகோள் Read More