குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட சாத்தியமில்லை: கொரோனா 3-வது அலை குறித்து மருத்துவர் தகவல்

கொரோனா மூன்றாவது அலையில் குழந்தைகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் சாத்தியமில்லை என்று டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையின் குழந்தை நுரையீரல் நிபுணர் டாக்டர் திரேன் குப்தா தெரிவித்திருக்கிறார். இது குறித்து பேசிய டாக்டர் திரேன் குப்தா, “எதிர்பார்க்கப்படும் மூன்றாவது அலையில் குழந்தைகளுக்கு …

குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட சாத்தியமில்லை: கொரோனா 3-வது அலை குறித்து மருத்துவர் தகவல் Read More

உள்ளுறுப்பு லீஸ்மேனியாசிஸ் சிகிச்சை திறனை அதிகரிக்க எளிதான, வாய்வழி உயிரி மருந்தை இந்திய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பிடித்தனர்

உள்ளுறுப்பு லீஸ்மேனியாசிஸ் என்ற வெப்ப மண்டல ஒட்டுண்ணி நோய்க்கு 90 சதவீதம் சிறப்பான சிகிச்சையளிக்கும்,  எளிதான, விலை குறைவான, வைட்டமின் பி12, பூசப்பட்ட மிகச் சிறிய ரக வாய்வழி உயிரி மருந்தை  இந்திய ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறையின், தன்னாட்சி அமைப்பான நானோ அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் (INST) டாக்டர் …

உள்ளுறுப்பு லீஸ்மேனியாசிஸ் சிகிச்சை திறனை அதிகரிக்க எளிதான, வாய்வழி உயிரி மருந்தை இந்திய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பிடித்தனர் Read More

இந்திய தேசியக் கொடியை தயாரிக்கும் ஒரே இடம்

இந்திய நாடே கோலாகலமாக கொண்டாடும் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடெங்கும் மக்கள் நம் தேசியக் கோடியை ஏற்றுவதும், சிறிய வடிவ கொடியை சட்டையில் குத்திக்கொண்டும் வலம் வருவார்கள். வீதியெங்கும் இந்திய கொடி விற்கப்படும் இந்நேரத்தில், மூவர்ண இந்திய கொடியை தயாரிக்கும் …

இந்திய தேசியக் கொடியை தயாரிக்கும் ஒரே இடம் Read More

7வது தேசிய கைத்தறி தினம்: காஞ்சிபுரத்தில் வடிவமைப்பு வள மையத்தை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்

ஏழாவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, காஞ்சிபுரத்தில் வடிவமைப்பு வள மையத்தை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார். தேசிய கைத்தறி தினம் கடந்த 7ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. புதுதில்லியில் நடந்த தொடக்க நிகழ்ச்சியில், மத்திய …

7வது தேசிய கைத்தறி தினம்: காஞ்சிபுரத்தில் வடிவமைப்பு வள மையத்தை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார் Read More

வெள்ளையனே வெளியேறு இயக்க தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வாழ்த்து

வெள்ளையனே வெளியேறு இயக்க தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  அவரது வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: ‘‘வெள்ளையனே வெளியேறு இயக்க ஆண்டுவிழா நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை …

வெள்ளையனே வெளியேறு இயக்க தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வாழ்த்து Read More

கைத்தறி தின கொண்டாட்டம்- உள்ளூர் தயாரிப்புகளைஊக்குவிப்பதற்கான நினைவூட்டல்: நிபுணர்கள்

உள்ளூர் கலைப்பொருட்களை வளர்க்கவும் அவற்றைபிரபலப்படுத்தவும் ஓர் சிறந்த நினைவூட்டியாக கைத்தறி தினம்கொண்டாடப்படுகிறது. பல்வேறு சந்ததியினரிடையேவரவேற்பைப் பெறுவதற்காக தரத்தை மேலும் வலுப்படுத்துவதில்கைத்தறித் துறையும் அது சம்பந்தமான ஊரக கலைப் பொருட்கள்துறையும் கவனம் செலுத்த வேண்டும். தரமான பொருட்களுக்குநுகர்வோர் கூடுதல் ஆர்வம் காட்டுவதால், தர மேம்பாடு, காலத்தின்கட்டாயமாகியுள்ளது.” ‘தேசிய கைத்தறி தினம்’ என்ற தலைப்பில்மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மண்டல மக்கள்தொடர்பு அலுவலகம் மற்றும் பத்திரிகை தகவல் அலுவலகம், சென்னை ஆகியவை இணைந்து இன்று ஏற்பாடு செய்திருந்தஇணையதள கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசுகையில்காந்திகிராம கிராமிய நிறுவனத்தின் மேலாண்மைப் பிரிவுபேராசிரியரும் தலைவருமான டாக்டர் ஆர் சீரங்கராஜன் கூறினார். நெசவுக்கு முந்தைய செயல்முறைகள் மற்றும் தறிஉபகரணங்களின் பராமரிப்பிலும் கவனம் செலுத்துமாறு அவர்வலியுறுத்தினார். இந்தத் துறையில் தொழில்நுட்பத்தின் பயன்பாடுஅதிகரிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். உதாரணத்திற்குஉணரி போன்ற தொழில்நுட்பங்களால், ஏதேனும் இடர்பாடுகள்எழும்போது, தானியங்கியாக நெசவாளர்களுக்கு தகவல்அளிக்கப்படுவதன் மூலம் அது போன்ற பிரச்சினைகளை சுலபமாகஎதிர்கொள்ளலாம். சாயத்தின் செயல்முறைகளில் நிலையானவழிகாட்டுதல்கள் வெளியிடப்பட வேண்டும் என்றும் அவர்வலியுறுத்தினார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி  தேசிய கைத்தறி மேம்பாட்டுக்கழகத்தின் மூத்த அதிகாரி திரு விஜய் பிரதாப் கௌதம்பேசுகையில், இதே தினத்தன்று தொடங்கப்பட்ட சுதேசிஇயக்கத்தைக் குறிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட்7-ஆம் தேதி தேசிய கைத்தறி தினம் கடைபிடிக்கப்படுவதாகக்கூறினார். கைத்தறி பொருட்கள் பற்றி மக்களிடையேவிழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த தினம்கடைப்பிடிக்கப்படுகிறது. உள்ளூர் பொருட்களின் பயன்பாடுமற்றும் உற்பத்தியை ஊக்குவிப்பது தான் சுதேசி இயக்கத்தின்முக்கிய நோக்கம். அடிமட்ட அளவில் கைத்தறி துறையில்சேவைகளை அளிப்பதற்காக கைத்தறி அலுவலகங்களும் அதன்கிளைகளும் சென்னை உட்பட நாடு முழுவதும் பல்வேறுஇடங்களில் இயங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். நெசவுத் தொழிலில் தமது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதிருவண்ணாமலை தேவிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த நெசவாளிதிரு பி. தனசேகரன், தமது குடும்பம் மூன்று தலைமுறைகளாகஇந்தத் தொழிலில் ஈடுபட்டு வருவதாகக் கூறினார். பெருந்தொற்றுகாலகட்டத்தில் பிற துறைகளைப் போல நெசவுத் தொழிலிலும்கொவிட் தொற்றின் தாக்கம் பெரிதும் காணப்பட்டதாக அவர்தெரிவித்தார். மூலப்பொருட்களின் விலை உயர்வு, வேலை இழப்புஉள்ளிட்ட பிரச்சினைகளை நெசவாளிகள் சந்தித்தனர். ஆரணியில் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளஒருங்கிணைந்த ஜவுளி பூங்காவின் பணிகளை விரைவுபடுத்தவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். ஆரணியில் சுமார்ஒரு லட்சம் நெசவாளிகள் வசிப்பதால் இந்த முன்முயற்சி சந்தைஉள்ளிட்ட துறைகளில் பேருதவியாக இருக்கும். கோரா, ஜரிபோன்ற பொருட்களை அரசே கொள்முதல் செய்து நியாயமானவிலைகளில் நெசவாளர்களுக்கு அளிக்கவேண்டும் என்றும் அவர்கேட்டுக்கொண்டார். இந்த வலைதள கருத்தரங்கில் தலைமை உரை நிகழ்த்தியசென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலக இயக்குநர் திருஜே. காமராஜ், மகாத்மா காந்தி, கைத்தறியை ஏழ்மையை ஒழிக்கும்முக்கிய கருவியாக மட்டும் பயன்படுத்தாமல், ஆங்கிலேயர்களுக்குஎதிரான மாபெரும் ஆயுதமாகவும் பயன்படுத்தி, அதில் வெற்றியும்கண்டார் என்று தெரிவித்தார். கைத்தறி உள்ளிட்ட உள்ளூர் கலைப்பொருட்கள் மற்றும் தயாரிப்புகளை ஊக்குவிக்கும்கொள்கையின் அடிப்படையில் தற்சார்பு இந்தியா திட்டம்உருவாக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் நல்வாழ்விற்காக பிரதமர்திரு நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு அனைத்துநடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. தேசிய கைத்தறிதினத்தன்று காதி மற்றும் இதர ஊரகத் தொழில்துறைகளின்பொருட்களை வாங்கி இந்தத் தொழிலில் ஈடுபடுபவர்களின்வாழ்வாதாரத்திற்கு ஆதரவளிப்போம் என்று அனைவரும் உறுதிஏற்போம் என்று அவர் தெரிவித்தார். முன்னதாக, புதுச்சேரி கள மக்கள் தொடர்பு அலுவலகத்தின்துணை இயக்குநர் டாக்டர் சிவகுமார் வரவேற்புரை நிகழ்த்தினார். சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலக அதிகாரி திருமிகுவித்யா ஏ.ஆர் நன்றி தெரிவித்தார்.

கைத்தறி தின கொண்டாட்டம்- உள்ளூர் தயாரிப்புகளைஊக்குவிப்பதற்கான நினைவூட்டல்: நிபுணர்கள் Read More

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண்மணியாக பேட்மின்டன் வீராங்கனை பி வி சிந்து உருவெடுத்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய பேட்மின்டன் வீராங்கனை பி வி சிந்து இன்று வெண்கலப் பதக்கத்தை வென்றார். சீனாவை சேர்ந்த ஹீ பிங் ஜியாவோவை 21-13 மற்றும் 21-15 என்ற கணக்கில் வென்ற சிந்து, இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண்மணியாக …

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண்மணியாக பேட்மின்டன் வீராங்கனை பி வி சிந்து உருவெடுத்துள்ளார். Read More

இயந்திர பாதிப்புகளை தானே சரிசெய்து கொள்ளும் பொருட்களை இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்

விண்கலங்கள் போன்றவற்றில் உள்ள பழுதடைந்த மின்னணு உபகரணங்கள் தங்களை தாங்களே சரிசெய்து கொள்ள வைக்கும் புதிய பொருட்களை இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நமது தினசரி வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் உபகரணங்கள் இயந்திர பாதிப்பின் காரணமாக அவ்வப்போது செயலிழந்து, அவற்றை நாம் செப்பனிடவோ, மாற்றவோ வைக்கின்றன. …

இயந்திர பாதிப்புகளை தானே சரிசெய்து கொள்ளும் பொருட்களை இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர் Read More

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்: பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார் மீராபாய் சானு

பளுதூக்குதல் போட்டியில் பெண்களுக்கான 49 கிலோ எடைப் பிரிவில் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்று டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளார். ஸ்னாட்ச் பிரிவில் 87கிலோ, கிளீன் அண்டு ஜெர்க் பிரிவில் 115 கிலோ என மொத்தம் 202 கிலோ எடையை அவர் தூக்கினார். மணிப்பூரைச் சேர்ந்த 26 வயதான …

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்: பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார் மீராபாய் சானு Read More

தரையில் இருந்து வான் இலக்குகளைதாக்கக்கூடிய ஆகாஷ்-என்ஜி ஏவுகணையைடிஆர்டிஓ வெற்றிகரமாக சோதனை செய்தது

தரையில் இருந்து வான் இலக்குகளை தாக்கக்கூடிய புதியதலைமுறை ஆகாஷ்–என்ஜி ஏவுகணையை ஒடிசாகடற்கரைக்கு அருகில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைதளத்தில் இருந்து 2021 ஜூலை 21 அன்று பாதுகாப்புஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) வெற்றிகரமாக சோதனை செய்தது. பன்நோக்கு ரேடார், உத்தரவு, கட்டுப்பாடு மற்றும் தகவல்தொடர்பு அமைப்பு உள்ளிட்ட ஆயுத அமைப்புரீதியானஅனைத்து உபகரணங்களுடன் தரைதளத்தில் இருந்துபிற்பகல் 12.45 மணியளவில் சோதனை நடத்தப்பட்டது. ஹைதராபாத்தில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும்மேம்பாட்டு ஆயவகம், டிஆர்டிஓ–வின் இதரஆய்வகங்களோடு இணைந்து இந்த ஏவுகணையைதயாரித்துள்ளது. இந்திய விமானப்படையின் பிரதிநிதிகள்இன்றைய சோதனையை நேரில் கண்டனர். சோதனை தரவுகளை சேகரிப்பதற்காக பல்வேறு முறைகள்கையாளப்பட்டன. ஏவுகணையின் சிறப்பான செயல்பாடுஇவை அனைத்திலும் பதிவு செய்யப்பட்டு, உறுதிசெய்யப்பட்டது. வான் ரீதியான அச்சுறுத்தல்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் திறனை ஏவுகணைவெளிப்படுத்தியது. இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டவுடன், அதன்வலிமையை அதிகரிக்கும் விதத்தில் ஆகாஷ்–என்ஜி–யின்செயல்பாடுகள் இருக்கும். பாரத் எலெக்ட்ரானிக்ஸ்லிமிடெட் மற்றும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் போன்றஉற்பத்தி முகமைகளும் சோதனையில் பங்கேற்றன. டிஆர்டிஓ, பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் மற்றும் பாரத்டைனமிக்ஸ் லிமிடெட், இந்திய விமானப்படை மற்றும்தொழில்துறையை வெற்றிகரமான சோதனைக்காகபாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாராட்டினார்.  குழுவின் முயற்சிகளை பாராட்டிய பாதுகாப்பு ஆராய்ச்சிமற்றும் மேம்பாட்டு துறை செயலாளர் மற்றும் டிஆர்டிஓதலைவர், இந்திய விமானப்படைக்கு இந்த ஏவுகணைவலுவூட்டும் என்றார்.

தரையில் இருந்து வான் இலக்குகளைதாக்கக்கூடிய ஆகாஷ்-என்ஜி ஏவுகணையைடிஆர்டிஓ வெற்றிகரமாக சோதனை செய்தது Read More