டில்லியிலிருந்து டோக்கியோ ஒலிம்பிக்போட்டிக்கு செல்லும் இந்திய விளையாட்டுவீரர்களின் முதல் அணி

டோக்கியா ஒலிம்பிக் போட்டிகள் ஒரு வாரத்தில்தொடங்கவுள்ளதால், இந்தியாவில் இருந்து டோக்கியோசெல்லும், முதல் விளையாட்டு வீரர்கள் அணியை முறைப்படிவழியனுப்பும் நிகழ்ச்சி புதுதில்லி, இந்திராகாந்தி சர்வதேசவிமான நிலையத்தில் இன்று நடைப்பெறவுள்ளது.  54 விளையாட்டு வீரர்கள், உதவிப் பணியாளர்கள் மற்றும்இந்திய ஒலிம்பிக் சங்க பிரதிநிதிகள்  உட்பட 88 பேர்கொண்ட அணியினரை, மத்திய இளைஞர் விவகாரம் மற்றும்விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் தாகூர், இணையமைச்சர்  திரு நிசித் பிரமணிக் ஆகியோர்முறைப்படி வழியனுப்புகின்றனர்.  இந்த வழியனுப்புவிழாவில்,  இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் திரு நரேந்தர்துருவ் பத்ரா, பொதுச் செயலாளர்  திரு ராஜீவ் மேத்தாமற்றும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் தலைமைஇயக்குனர் திரு சந்தீப் பிரதான்   ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். வில் அம்பு, ஈட்டி எறிதல், ஹாக்கி, பாட்மின்டன், டேபிள்டென்னிஸ், ஜூடோ, ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் பளுதூக்குதல்ஆகிய 8 போட்டிகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் உதவி ஊழியர்கள் புதுதில்லியிலிருந்து இன்றுபுறப்படுகின்றனர். இதில் மிகப் பெரிய அணி ஹாக்கி. விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைத்துபிரமுகர்களுக்கும் கொவிட் பரிசோதனை செய்து கொள்வர். சமூக இடைவெளி முறைகளும் இந்நிகழ்ச்சியில்பின்பற்றப்படும்.  டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு, 127 இந்தியவிளையாட்டு வீரர்கள், தகுதி பெற்றுள்ளனர்.  ரியோஒலிம்பிக்ஸ் போட்டிக்கு தகுதி பெற்றவர்களை விட இவர்கள்அதிகம் என்பதால், இந்த எண்ணிக்கை  சாதனையாகஉள்ளது.

டில்லியிலிருந்து டோக்கியோ ஒலிம்பிக்போட்டிக்கு செல்லும் இந்திய விளையாட்டுவீரர்களின் முதல் அணி Read More

மூன்றாம் அலையின் தொடக்க காலத்தில் உள்ளோம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

*மக்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பதால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.கொரோனா மூன்றாம் அலை குறித்த அச்சம் உலக நாடுகளிடையே நிலவிவரும் நிலையில், மூன்றாம் அலையின் தொடக்க காலத்தில் உள்ளோம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை …

மூன்றாம் அலையின் தொடக்க காலத்தில் உள்ளோம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை! Read More

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு செல்லும் இந்திய அணியை ஊக்கப்படுத்துவதற்காக ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்த அதிகாரப்பூர்வ பாடலை அமைச்சர் அனுராக்தாக்கூர் வெளியிட்டார்

டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளவிருக்கும் இந்திய அணியை உற்சாகப் படுத்துவதற்கான அதிகாரப்பூர்வ பாடலை காணொலி மூலம் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் வெளியிட்டார். மத்திய இளைஞர் …

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு செல்லும் இந்திய அணியை ஊக்கப்படுத்துவதற்காக ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்த அதிகாரப்பூர்வ பாடலை அமைச்சர் அனுராக்தாக்கூர் வெளியிட்டார் Read More

இந்திய சுற்றுலாத் தலங்களில் கொவிட்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கானநடவடிக்கைகள் குறித்து உள்துறைச் செயலாளர்ஆய்வு

மலைப் பிரதேசங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக மாநிலஅரசுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்துமத்திய உள்துறைச் செயலாளர் தலைமையில் இன்றுஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தமிழகம், கேரளா, கோவா, இமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரகாண்ட் மற்றும் மேற்குவங்கத்தில்  கொவிட்-19 மேலாண்மை மற்றும் தடுப்பூசி நிலவரத்தின் ஒட்டுமொத்த நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. மலைப் பிரதேசங்கள் மற்றும் இதரசுற்றுலாப் பகுதிகளில் கொவிட் சரியான நடத்தைவிதிமுறை பின்பற்றப்படவில்லை என்று ஊடக செய்திகள்தெரிவித்திருப்பது தொடர்பாக மத்திய உள்துறைச்செயலாளர் எச்சரிக்கை விடுத்தார். தொற்றின் இரண்டாவது அலை இன்னும் நீங்கவில்லை; முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைப்பின்பற்றுவது மற்றும் இதர பாதுகாப்பு முன்னெச்சரிக்கைநடவடிக்கைகள் கடைபிடிக்கப்படுவதை மாநிலங்கள்கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இரண்டாவது அலையின் சரிவு வெவ்வேறு மாநிலங்கள்மற்றும் யூனியன் பிரதேசங்களில் மாறுபட்டுள்ளது, ஒட்டுமொத்த தொற்று உறுதி வீதம் குறைந்து வரும்நிலையிலும், தமிழகம், கேரளா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் குறிப்பிட்ட மாவட்டங்களில் தொற்று உறுதிவீதம் 10 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதுகவனிக்கப்படவேண்டிய விஷயம் என்று கூட்டத்தில்தெரிவிக்கப்பட்டது. கடந்த ஜூன் 29-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம்அறிவித்தவாறு பரிசோதனை, தடம் அறிதல், சிகிச்சை, தடுப்பூசி, கொவிட் சரியான நடத்தை விதிமுறையை பின்பற்றுதல் ஆகிய 5 உத்திகளைக் கடை பிடிக்குமாறு மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன. எதிர்வரும்காலத்தில் தொற்று பரவல் அதிகரித்தால் அதனைக்கட்டுப்படுத்தும் வகையில் போதிய மருத்துவஉள்கட்டமைப்பு வசதிகள் தயாராக இருக்க வேண்டும்(குறிப்பாக ஊரக, பழங்குடி பகுதிகளில்) என்றும்அறிவுறுத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி கே பால், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலஅமைச்சக செயலாளர், இந்திய மருத்துவ ஆராய்ச்சிகவுன்சிலின் தலைமை இயக்குநர், எட்டு மாநிலங்களின்தலைமைச் செயலாளர்கள், காவல்துறைத் தலைமை இயக்குநர்கள், முதன்மை செயலாளர்கள் (சுகாதாரம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்திய சுற்றுலாத் தலங்களில் கொவிட்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கானநடவடிக்கைகள் குறித்து உள்துறைச் செயலாளர்ஆய்வு Read More

இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறைஇணையமைச்சராக டாக்டர். எல். முருகன்பொறுப்பேற்பு

  தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை யமைச்சராக டாக்டர் எல்.முருகன், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அனுராக் தாகூர் முன்னிலையில் இன்றுபொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பின் பேட்டியளித்த டாக்டர். முருகன், தகவல் மற்றும்ஒலிபரப்புத்துறை இணையமைச்சராக பணியாற்றவாய்ப்பளித்த பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு நன்றிதெரிவித்தார். தனது கடமைகளை உண்மையுடன்மேற்கொள்வேன் என அவர் மேலும் கூறினார். மத்தியஅமைச்சரவையில், தமிழக மக்களுக்கு போதியபிரதிநிதித்துவம் வழங்கியதற்காக பிரதமருக்கு மத்தியஇணையமைச்சர் நன்றி தெரிவித்தார்.

இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறைஇணையமைச்சராக டாக்டர். எல். முருகன்பொறுப்பேற்பு Read More

வன வளங்களை நிர்வகிப்பதில் பழங்குடியின மக்களுக்கு கூடுதல் அதிகாரமளித்த ஒன்றிய அரசு

வன வளங்களை நிர்வகிப்பதில், பழங்குடியினருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகம் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் கூட்டாக முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஒரு கூட்டறிக்கை தில்லியில்  நாளை காலை 11 மணிக்கு கையெழுத்திடப்படவுள்ளது.   இந்நிகழ்ச்சி நேரடியாகவும், காணொலி மூலமும் நடைபெறவுள்ளது. …

வன வளங்களை நிர்வகிப்பதில் பழங்குடியின மக்களுக்கு கூடுதல் அதிகாரமளித்த ஒன்றிய அரசு Read More

52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா 2021 நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறும் – பிரகாஷ் ஜவடேகர்

2021 நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறவுள்ள 52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கான விதிமுறைகள் மற்றும் போஸ்டரை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் இன்று வெளியிட்டார். ஆசியாவின் பழமையான திரைப்பட விழாக்களில் ஒன்றும், இந்தியாவின் மிகப்பெரிய சர்வதேச திரைப்பட விழாவுமான இந்திய சர்வதேச …

52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா 2021 நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறும் – பிரகாஷ் ஜவடேகர் Read More

கர்ப்பப்பை வாய் புற்றுநோய், பெண்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது – டாக்டர் ஹர்ஷ் வர்தன்

கர்ப்பப்பை வாய் புற்றுநோய், பெண்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என கர்ப்பப்பை வாய் நோயியல் மற்றும் கோல்போஸ்கோபிக்கான 17வது உலகளாவிய கூட்டத்தில் டாக்டர் ஹர்ஷ் வர்தன் பேசினார். கோல்போஸ்கோபி மற்றும் கர்ப்பப்பை வாய் நோயியல் இந்திய அமைப்பு (ஐஎஸ்சிசிபி) ஏற்பாடு செய்த இந்த கூட்டத்தை …

கர்ப்பப்பை வாய் புற்றுநோய், பெண்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது – டாக்டர் ஹர்ஷ் வர்தன் Read More

இந்திய குடியரசுதினவிழாவில் அயல் நாட்டு இளைஞர்கள் பங்கேற்கவுள்ளனர்

அடுத்தாண்டு நடைபெறும் குடியரசு தினவிழா என்சிசி முகாமில் பங்கேற்க, 25 நட்பு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் குழு அழைக்கப்படவுள்ளனர். குடியரசு தினவிழாவை முன்னிட்டு, தலைநகர் தில்லி தேசிய மாணவர் படையினரின் (என்சிசி) சிறப்பு முகாம் நடைபெறும். இதில் நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த என்சிசி மாணவர்கள் …

இந்திய குடியரசுதினவிழாவில் அயல் நாட்டு இளைஞர்கள் பங்கேற்கவுள்ளனர் Read More

ஸ்மார்ட் போன் இல்லாத மாணவர்கள் கல்வி கற்க உதவிய நாசிக் சமுதாய வானொலி தேசிய விருதை வென்றது

தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால் நிறுவப்பட்ட தேசிய சமுதாய வானொலி விருதுகளின் எட்டாவது பதிப்பில் நாசிக்கை சேர்ந்த சமுதாய வானொலி நிலையமான ரேடியோ விஷ்வாஸ் இரண்டு விருதுகளை வென்றது. நிலைத்தன்மை மாதிரி விருதுகள் பிரிவில் முதல் பரிசையும், மையக்கரு சார்ந்த விருதுகள் பிரிவில் இரண்டாவது …

ஸ்மார்ட் போன் இல்லாத மாணவர்கள் கல்வி கற்க உதவிய நாசிக் சமுதாய வானொலி தேசிய விருதை வென்றது Read More