இந்திய சுற்றுலாவை மேம்படுத்த அமைச்சர் ஆய்வு

மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா இணை அமைச்சர் திருபிரகலாத் சிங் மற்றும் ஹரியானா முதல்வர் திரு மனோகர்லால் கட்டார் சுற்றுலா தொடர்பான திட்டங்களின் மேம்பாடுகுறித்த கூட்டத்தை நடத்தினர். புது தில்லியில் இன்று நடைபெற்ற இக்கூட்டத்தில்ஹரியானாவில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் சுற்றுலாதொடர்பான திட்டங்களை விரைவுபடுத்துவது குறித்தும், புதிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும்விவாதிக்கப்பட்டது. இந்திய அரசின் சுற்றுலா செயலாளர் திரு அரவிந்த் சிங், சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சகத்தின் இணைச்செயலாளர்கள், மத்திய மற்றும் மாநில அதிகாரிகள்கூட்டத்தில் கலந்துகொண்டனர். கிருஷ்ணா சர்க்யூட் திட்டம்-2 குறித்த தகவல்களைகூட்டத்தின் போது மாநில அரசு வழங்கியது. ஸ்ரீமத் பகவத்கீதை, மகாபாரதம் (குருச்சேத்திரம்) உள்ளிட்ட முக்கியசுற்றுலா மற்றும் ஆன்மீக தலங்கள் தொடர்பானஉள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்திய சுற்றுலாவை மேம்படுத்த அமைச்சர் ஆய்வு Read More

தீவிரவாதிகளின் வஞ்சக திட்டங்களுக்கு எதிராக புத்திசாலித்தனமான தீர்வுகளை மேற்கொள்ள வெங்கையா நாயுடு அறியுறுத்தினார்

நாட்டின் நலன்களைக் காயப்படுத்துவதற்காக தீவிரவாதிகள் மேற்கொள்ளும் வஞ்சக திட்டங்களுக்கு எதிராக புத்திசாலித்தனமான தீர்வுகளைக் கண்டறியுமாறு ஆராய்ச்சி சமூகம் மற்றும் இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் போன்ற நிறுவனங்களை குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு இன்று கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை இந்திய தொழில்நுட்பக் …

தீவிரவாதிகளின் வஞ்சக திட்டங்களுக்கு எதிராக புத்திசாலித்தனமான தீர்வுகளை மேற்கொள்ள வெங்கையா நாயுடு அறியுறுத்தினார் Read More

மலட்டுத் தன்மைக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை என ஆய்வில் தகவல்

குழந்தை பெறும் வயதில் உள்ளவர்களிடையே கொவிட்-19தடுப்பூசிகள் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் என்று ஒரு சில ஊடக செய்திகள் வெளியிட்டிருப்பதோடு,  இந்தத் தடுப்பூசிகளை பாலூட்டும் தாய்மார்கள் போட்டுக்கொள்வது பாதுகாப்பானதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.தற்போது பயன்பாட்டில் உள்ள எந்தத் தடுப்பூசிகளும் ஆண்கள் அல்லது பெண்களிடையே மலட்டுத்தன்மையை …

மலட்டுத் தன்மைக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை என ஆய்வில் தகவல் Read More

இந்தியாவுக்கு கொரோனா நிதியாக கூடுதலாக 41 மில்லியன் டாலர் வழங்குவதாக அமெரிக்கா அறிவிப்பு

கொரோனா நிதியாக மேலும் 41 மில்லியன் டாலர் வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்தியாவின் எதிர்கால சுகாதார அவசர நிலைகளின் போது நாட்டை தயார் நிலையில் வைத்திருக்க இந்தத் தொகை வழங்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதுவரை அமெரிக்காவிடமிருந்து 200 மில்லியன் டாலருக்கும் அதிகமான …

இந்தியாவுக்கு கொரோனா நிதியாக கூடுதலாக 41 மில்லியன் டாலர் வழங்குவதாக அமெரிக்கா அறிவிப்பு Read More

டாக்டர் சிதப்ரா சின்ஹாவுக்குபேராசிரியர் பி.சி. மஹாலனோபிஸ் தேசிய விருது

தினசரி வாழ்க்கையில் புள்ளியியலின் முக்கியத்துவத்தைஎடுத்துரைக்கவும், கொள்கைகளை வடிவமைப்பதில் புள்ளிவிவரங்கள் எவ்வாறு உதவிகரமாக இருக்கிறது என்பதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஒவ்வொரு ஆண்டும்மறைந்த புள்ளியியலாளர் பேராசிரியர் பி.சி. மஹாலனோபிஸ்–இன் பிறந்த நாளான ஜூன் 29-ஆம்தேதியை “புள்ளியியல் தினமாக” மத்திய அரசு கொண்டாடிவருகிறது. கொவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக புள்ளியியல்தினம் 2021-ஐ காணொலிக் காட்சி வாயிலாக மத்தியபுள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம் கொண்டாடியது. அமைச்சகத்தின் பல்வேறு சமூக ஊடகங்களிலும் நிகழ்ச்சிநேரலையாக ஒளிபரப்பப்பட்டது. நிலையான வளர்ச்சிஇலக்கு-2 (பட்டினியை போக்குதல், உணவு பாதுகாப்புமற்றும் மேம்பட்ட ஊட்டச்சத்தை எட்டுதல், நிலையானவேளாண்மையை ஊக்குவித்தல்) என்பது தேசிய புள்ளியல்தினம் 2021-இன் கருப்பொருளாகும். மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்கம் மற்றும் திட்டத்துறைஇணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு ராவ் இந்தர்ஜித்சிங்இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு காணொலி வாயிலாக  உரையாற்றினார். அமைச்சகத்தால் வழங்கப்படும் தேசிய விருதுக்குத தேர்வுபெற்றவர்கள் அறிவிக்கப்பட்டு, நிகழ்ச்சியின் போதுஅவர்கள் மெய்நிகர் வாயிலாக கௌரவிக்கப்பட்டார்கள். வாழ்நாள் சாதனைக்கான அதிகாரப்பூர்வபுள்ளிவிவரங்களுக்கான பேராசிரியர் பி.சி. மஹாலனோபிஸ்தேசிய விருது 2021, தேசிய புள்ளியியல் ஆணையத்தின்முன்னாள் தலைவர் டாக்டர் ஆர் பி பர்மனுக்கு அளிக்கப்பட்டது. 45 வயதிற்கு மேற்பட்ட பணியில் உள்ளஅதிகாரபூர்வ புள்ளியியல் நிபுணர் என்ற பிரிவில் பேராசிரியர்பி.சி. மஹாலனோபிஸ் தேசிய விருது 2021, சென்னைகணித அறிவியல் நிறுவனத்தின் பேராசிரியர் டாக்டர் சிதப்ராசின்ஹாவுக்கு வழங்கப்பட்டது. இளம் புள்ளியியல் நிபுணர்களுக்கான பேராசிரியர் சி ஆர்ராவ் தேசிய புள்ளியியல் விருது 2021, கொல்கத்தா இந்தியபுள்ளியியல் நிறுவனத்தின் இணை பேராசிரியர் டாக்டர்கிரண்மாய் தாஸுக்கு அளிக்கப்பட்டது.

டாக்டர் சிதப்ரா சின்ஹாவுக்குபேராசிரியர் பி.சி. மஹாலனோபிஸ் தேசிய விருது Read More

ரூ 6,28,993 கோடி மதிப்பிலான நிவாரண தொகுப்பை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்

கொவிட்-19 பெருந்தொற்றின் இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு தொழில் துறைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்தார். அவசரகால எதிர்வினைகளுக்கு சுகாதார அமைப்புகளை தயார்படுத்துவதும், வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புக்கு …

ரூ 6,28,993 கோடி மதிப்பிலான நிவாரண தொகுப்பை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார் Read More

நட்புநாடுகளின் கடற்படைகளோடு கூட்டு பயிற்சிகளில்ஈடுபடுவதற்காக இந்தியாவின் ஐஎன்எஸ் தபார் கப்பல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது

நட்பு நாடுகளுடன் ராணுவ ஒத்துழைப்பைமேம்படுத்தும் நோக்கில் தனது பயணத்தை ஜூன் 13 அன்றுதொடங்கியுள்ள இந்திய கடற்படை கப்பலான தபார், ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள பல்வேறுதுறைமுகங்களுக்கு செப்டம்பர் இறுதி வரை பயணம்மேற்கொள்ளும். இந்த பயணத்தின் போது, பணிரீதியான, சமூக மற்றும்விளையாட்டு  நிகழ்ச்சிகளை தபார் நடத்தும். நட்புநாடுகளின் கடற்படைகளோடு கூட்டு பயிற்சிகளிலும்ஐஎன்எஸ் தபார் ஈடுபடும்.  ஏடன் வளைகுடா, செங்கடல், சூயஸ் கால்வாய், மெடிட்டெரேனியன் கடல், வட கடல் மற்றும் பால்டிக் கடல்ஆகிய பகுதிகளை தனது பயணத்தின் போது ஐஎன்எஸ்தபார் கடந்து செல்லும். டிஜிபவுட்டி, எகிப்து, இத்தாலி, பிரான்சு, இங்கிலாந்து, ரஷ்யா, நெதர்லாந்து, மொராக்கோமற்றும் ஆர்க்டிக் கவுன்சில் நாடுகளான சுவீடன் மற்றும்நார்வே ஆகியவற்றின் துறைமுகங்களுக்கும் தபார்பயணம் மேற்கொள்ளும். தான் பயணம் மேற்கொள்ளும் நாடுகளின்கடற்படைகள் உடனான நிகழ்ச்சிகளை தவிர, ராயல்கடற்படை, பிரான்சு கடற்படை மற்றும் ரஷ்ய கூட்டமைப்புகடற்படை ஆகியவற்றுடன் கூட்டு பயிற்சிகளிலும்இக்கப்பல் ஈடுபடும். ஜூலை 22 முதல் 27 வரை ரஷ்யகடற்படை தின கொண்டாட்டங்களிலும் ஐஎன்ஸ் தபார்கலந்து கொள்ளும். ராணுவ உறவுகள், கூட்டு செயல்பாடு மற்றும் நீண்டகாலதிட்ட நீட்டிப்பு உள்ளிட்டவற்றை கட்டமைப்பதற்காக நட்புநாடுகளின் கடற்படைகளுடன் இணைந்து இக்கப்பல்செயல்படும்.

நட்புநாடுகளின் கடற்படைகளோடு கூட்டு பயிற்சிகளில்ஈடுபடுவதற்காக இந்தியாவின் ஐஎன்எஸ் தபார் கப்பல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது Read More

தமிழகத்தில் டெல்டா பிளஸ் கொவிட்-19 வகையின்பரவலைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகளைமேற்கொள்ளுமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது

தமிழகத்தில் டெல்டா பிளஸ் கொவிட்-19 தொற்று வகைகண்டறியப்பட்டுள்ள மதுரை, சென்னை மற்றும் காஞ்சிபுரம்மாவட்டங்களில் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசுஉடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசுஅறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக மாநில தலைமைச் செயலாளர் டாக்டர் வெஇறையன்புவிற்கு மத்திய சுகாதார செயலாளர் திரு ராஜேஷ் பூஷன்எழுதியுள்ள கடிதத்தில், டெல்டா பிளஸ், கவலை அளிக்கக்கூடியதொற்று வகை என்று  மரபியலுக்கான இந்திய கொரோனாகூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளதை அடுத்து, அதனைக்கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாகமேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.இந்த வகைத் தொற்று, அதிகமாகப் பரவுவதுடன், நுரையீரலைபாதித்து, மோனோக்ளோனல் என்ற நோய் எதிர்ப்பொருளின் ஆற்றலைக் குறைக்கும்  தன்மை கொண்டது என்று திரு பூஷன்கூறியுள்ளார். இது சம்பந்தமாக பொது சுகாதார நடவடிக்கைகள் மேலும்தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த மாவட்டங்கள் மற்றும் தொகுப்புகளில் கூட்ட நெரிசலைக்கட்டுப்படுத்துவது; தடமறிதல், தடுப்பூசி செலுத்துதல், பரிசோதனையின் எண்ணிக்கையை அதிகரித்தல் போன்றநடவடிக்கைகள் முன்னுரிமையின் அடிப்படையில்மேற்கொள்ளப்பட வேண்டும் என்று திரு பூஷன் குறிப்பிட்டுள்ளார். மருத்துவத் தொற்று நோயின் தொடர்பை கண்டறிவதற்கு ஏதுவாகதொற்றுக்கு ஆளாகும் நபர்களின் போதிய மாதிரிகள்மரபியலுக்கான இந்திய கொரோனா கூட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்படவேண்டும் என்றும் சுகாதார செயலாளர், மாநில அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் டெல்டா பிளஸ் கொவிட்-19 வகையின்பரவலைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகளைமேற்கொள்ளுமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது Read More

இந்தியாவில் அதிர்வுகளிலிருந்து மின்சாரத்தை உற்பத்திசெய்யும் புதிய நேனோ மின்னியற்றிகள்உருவாக்கம்

எளிதான, குறைந்த செலவில், உயிரி– இணக்கமுடைய, ஒளிஊடுருவும் நேனோ மின்னியற்றியை விஞ்ஞானிகள்உருவாக்கியுள்ளார்கள். ஒளி மின்னணுவியல், சுயமாகஇயங்கும் உபகரணங்கள் மற்றும் இதர உயிரி மருத்துவசெயல்முறைகளில் பயன்படுத்தும் வகையில் சுற்றியுள்ளஅதிர்வுகளில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும்வகையில் இந்த நேனோ மின்னியற்றி தயாரிக்கப்பட்டுள்ளது. புவி வெப்பமடைதல், எரிசக்தி பற்றாக்குறை முதலியஅச்சுறுத்தல்களால், கரியமில வெளியீடுகள் குறைவாகஇருக்கும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களின் தேவைஅதிகரித்துள்ளது. தொடு திரைகள், மின்னணு காட்சிமுறைகள் முதலிய கருவிகளில் மரபுசாரா முறையில்மின்சாரம் உருவாக்கப்படுகிறது. இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் கீழ் தன்னாட்சி நிறுவனமாக இயங்கும்பெங்களூருவில் உள்ள நானோ மற்றும் மென்மையானபொருள் அறிவியல் மையத்தைச் சேர்ந்த டாக்டர் சங்கர் ராவ்மற்றும் அவரது குழுவினர், டாக்டர்ஸ் பிளேட் என்றதொழில்நுட்பத்தில் தெர்மோபிளாஸ்டிக் பாலியூரிதீன், பாலிஎதிலீன் டெரிஃப்தலேட்டைப் பயன்படுத்தி இந்தடிரைபோ மின்னணு நேனோ மின்னியற்றியைவடிவமைத்துள்ளனர்.மென்மையாக கைகளைத் தட்டுவதன் மூலம் 11 எல்இடிவிளக்குகளுக்கு இந்த உபகாரணத்தால் ஒளியூட்ட முடியும்.

இந்தியாவில் அதிர்வுகளிலிருந்து மின்சாரத்தை உற்பத்திசெய்யும் புதிய நேனோ மின்னியற்றிகள்உருவாக்கம் Read More

இந்தியாவை முன்னணி கடல்சார் நாடாக ஆக்ககுடியரசு துணைத் தலைவர் அழைப்பு; சோழமன்னர்கள் குறித்து பெருமிதம்

நாட்டின் லட்சியமிக்க இலக்குகளை எட்டுவதில்துறைமுகங்களுக்கு உள்ள முக்கிய பங்கு குறித்து விளக்கியகுடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு, இந்தியாவை முன்னணி கடல்சார் நாடாக ஆக்க  அழைப்புவிடுத்தார். விசாகப்பட்டினத்தில் குடியரசு துணைத் தலைவர் உடனானஉரையாடலின் போது, விசாகப்பட்டினம் துறைமுகபொறுப்பு கழகத்தின் தலைவர் திரு கே ராம மோகன ராவ்மற்றும் இதர மூத்த அதிகாரிகள் விளக்கக்காட்சி ஒன்றைவழங்கினர். விரிவாக்கத் திட்டங்கள் உள்பட துறைமுகத்தின்பல்வேறு நடவடிக்கைகள் குறித்து குடியரசு துணைத்தலைவரிடம் அவர்கள் விளக்கினர். அப்போது பேசிய திரு நாயுடு, சுமார் 7,517 கிலோ மீட்டர் நீளகடற்கரை மற்றும் 200-க்கும் மேற்பட்ட முக்கிய மற்றும் சிறுதுறைமுகங்களுடன், உலகின் முக்கிய கப்பல்வழித்தடங்களில் இந்தியா இடம் பெற்றிருப்பதாககூறியதோடு, இந்திய பொருளாதாரத்தில் இந்ததுறைமுகங்கள் முக்கிய பங்காற்றுவதாகவும் தெரிவித்தார். பண்டைய இந்தியா மிகப்பெரிய கடல்சார் சக்தியாகதிகழ்ந்ததாக நினைவுக்கூர்ந்த குடியரசு துணைத் தலைவர், சோழ மற்றும் கலிங்க மன்னர்கள் பெருங்கடல்களைஆண்டார்கள் என்றும் அத்தகைய நிலையை நாம் மறுபடியும்எட்ட வேண்டும் என்றும் கூறினார். நாட்டின் துறைமுக உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்துபேசிய அவர், லட்சியம் மிகுந்த சாகர்மாலா திட்டத்தின் ஒருபகுதியாக 504-க்கும் அதிகமான திட்டங்கள் துறைமுகம்சார்ந்த மேம்பாட்டு வாய்ப்புகளுக்காக அடையாளம்காணப்பட்டுள்ளதாகவும்,3.57 லட்சம் கோடி ரூபாய்க்கும்அதிகமான உள்கட்டமைப்பு முதலீட்டை இந்த திட்டங்கள்பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார். இந்திய கடல்சார் லட்சியம் 2030 குறித்து பேசிய குடியரசுதுணைத் தலைவர், செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சியில்சர்வதேச சிறந்த நடைமுறைகளை பின்பற்றுமாறுகேட்டுக்கொண்டார். இந்திய கடல்சார் லட்சியம் 2030 எட்டமுடியாத ஒன்று அல்ல என்று தெரிவித்த அவர், இந்தியாவிடம் அறிவின் சக்தி இருப்பதாகவும் ஒன்றுபட்டநோக்கத்துடன் அனைவரும் பணிபுரிய வேண்டும் என்றும்கூறினார்.

இந்தியாவை முன்னணி கடல்சார் நாடாக ஆக்ககுடியரசு துணைத் தலைவர் அழைப்பு; சோழமன்னர்கள் குறித்து பெருமிதம் Read More