நாள்பட்ட இடுப்பு வலி, யோகா மூலம் குறைவது, எய்ம்ஸ்டாக்டர்கள் நடத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. யோகா அடிப்படையிலான ஆய்வுகள் பெரும்பாலும், நோயாளியின் அனுபவம், வலி மற்றும் இயலாமை மதிப்பீடு, குணமடைதல் ஆகியவற்றை சார்ந்தே இதுவரை உள்ளன. வலி, வலி சகிப்புத்தன்மை மற்றும் உடலின்நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றை அளவிடும்ஆராய்ச்சியாளர்கள், நோயாளிகளின் நாள்பட்ட இடுப்புவலியை போக்குவதில் யோகா சிறந்த வலி நிவாரணியாகவும், வலியின் சகிப்புத்தன்மை, மற்றும் உடல்நெகிழ்வுதன்மையை அதிகரிக்கக்கூடியதாகவும் உள்ளதாக கண்டுபிடித்துள்ளனர். நாள்பட்ட இடுப்பு வலியில், யோகாவின் தாக்கத்தைமதிப்பிட புது தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் உடலியல்துறை கூடுதல் பேராசிரியர்கள் டாக்டர் ரேணு பாட்டியா, டாக்டர் ராஜ் குமார் யாதவ், மருந்து மற்றும் மறுவாழ்வுத்துறைஉதவி பேராசிரியர் டாக்டர் ஸ்ரீ குமார் ஆகியோர் ஆய்வுமேற்கொண்டனர். 3 ஆண்டுகளாக இடுப்பு வலியால் அவதிப்படும் 50 வயதுநோயாளிகள் 100 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 4 வாரங்கள் மேற்கொண்ட முறையான யோகாபயிற்சிக்குப்பின், அவர்களிடம் உணர்வு அளவீட்டுபரிசோதனை (QST) மேற்கொள்ளப்பட்டது. இதில்குளிர்காலத்தில் ரத்தம் ஓட்டம் குறைவால் ஏற்படும் இடுப்புவலி குறைந்துள்ளது. வலியை தாங்கும் சகிப்பு த் தன்மை அதிகரித்துள்ளது. நோயாளிகளிடம் பெருமூளையின்செயல்பாடுகள் உற்சாகம் அடைந்து, நெகிழ்வுதன்மைகுறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டுள்ளது. நாள்பட்ட இடுப்பு வலியுள்ள நோயாளிகள், 4 வாரங்கள்யோகா பயிற்சி மேற்கொண்டபின், வழக்கமானசிகிச்சையை விட வலி குறைந்துள்ளது, முதுகுத்தண்டின்நெகிழ்வு அதிகரித்துள்ளது. வீட்டில் நீண்ட காலம் யோகா செய்தால், செலவில்லாமல் அதிக பலன்களை பெற முடியும் என இந்த ஆய்வு கூறுகிறது. இது வலியை மட்டும் போக்காமல், ஒட்டுமொத்த வாழ்க்கைதரத்தை மேம்படுத்தி, சுகாதார பலன்களை அளிக்கிறது.
நாள்பட்ட இடுப்பு வலி யோகா மூலம் குறைகிறது – ஆய்வில் தகவல் Read More