கர்நாடகாவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் 8 மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிப்பு

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் எட்டு மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்புகள் குறைந்த போதும், பெலகாவி, சிக்மகளூரு, தட்சிணா …

கர்நாடகாவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் 8 மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிப்பு Read More

மும்பையில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து- 9 பேர் உயிரிழப்பு

மராட்டிய மாநிலம் மும்பையின் மேற்கு பகுதியில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இரண்டு மாடிகள் கொண்ட கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 9- பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயம் அடைந்தனர். கட்டிட இடிபாடுகளுக்கும் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. …

மும்பையில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து- 9 பேர் உயிரிழப்பு Read More

பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமென்கிறார் டாக்டர் குழந்தைசாமி

கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை. தற்சமயம் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 18 வயதுக்கு குறைவானவர்கள் மட்டுமே இந்த தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள முடியாது.  மற்றவர்கள் போட்டுக் கொள்ளலாம். அதிலும் பாலூட்டும் தாய்மார்கள்கூட இந்த தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம்.  கொரோனா பெருந்தொற்றின் மூன்றாம் அலை வருவதற்கான …

பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமென்கிறார் டாக்டர் குழந்தைசாமி Read More

காற்றுச் சுழல் மூலம் புயலைகண்டுபிடிப்பதற்கான புதிய தொழில்நுட்பம்: இந்திய விஞ்ஞானிகள்கண்டுபிடிப்பு

செயற்கைக்கோள் கண்டுபிடிப்பதற்கு முன்பே, காற்றுச் சுழல் மூலம் புயலைகண்டுபிடிப்பதற்கான புதிய தொழில்நுட்பத்தை இந்திய விஞ்ஞானிகள்கண்டுபிடித்துள்ளனர். புயலை முன்கூட்டியே கண்டறிந்து, முன்னெச்சரிக்கைநடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம்  உயிர்சேதம் மற்றும் பொருள் சேதத்தைதவிர்க்க முடியும். இதுவரை, தொலை உணர்வுசெயற்கை கோள்கள் மூலம் புயுல் உருவாவது முன்கூட்டியேகண்டறியப்பட்டு வந்தது. வெப்பமான கடலின் மேல் பரப்பில், காற்றழுத்த தாழ்வு பகுதிஉருவான பின்பே, செயற்கைகோள் படங்கள் மூலம் இவற்றை அறிய முடியும். இந்தகண்டுபிடிப்புக்கும், புயல் தாக்குவதற்கும் அதிக இடைவெளி இருப்பது, முன்னெச்சரிக்கைநடவடிக்கைகளை மேற்கொள்ள உதவியாக இருக்கும். வடக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்தம் உருவாவதை செயற்கைகோள்படம்பிடிப்பதற்கு முன்பே, காற்றுச் சுழல் உருவாகிறது. இந்த புயல் சுழல்தான், காற்றழுத்ததாழ்வு பகுதியை உருவாக்கும் முக்கிய அம்சம். இந்த காற்றுச்சுழலை கண்டறியும் புதிய தொழில்நுட்பத்தை காரக்பூர் ஐஐடி விஞ்ஞானிகள்ஜியா ஆல்பர்ட், விஷ்ணுப்பிரியா சாகு மற்றும் பிரசாத் கே.பாஸ்கரன் ஆகியோர் கண்டறிந்துள்ளனர். இவர்களின் ஆய்வு திட்டத்துக்கு மத்திய அரசின் அறிவியல் மற்றும்தொழில்நுட்பதுறையின் கீழ் உள்ள பருவநிலை மாற்ற திட்டம் (CCP) உதவியது. இந்த காற்றுச் சுழலை ஆய்வு செய்யும் தொழில்நுட்பம் மூலம் வடஇந்திய பெருங்கடல்பகுதியில் உருவாகும் புயல்களை செயற்கைகோள் கண்டறிவதற்கு முன்பே கண்டறியமுடியும். இந்த ஆய்வு கட்டுரை ‘அட்மாஸ்பெரிக் ரிசர்ச்’ என்ற இதழில் சமீபத்தில்வெளியாகியுள்ளது

காற்றுச் சுழல் மூலம் புயலைகண்டுபிடிப்பதற்கான புதிய தொழில்நுட்பம்: இந்திய விஞ்ஞானிகள்கண்டுபிடிப்பு Read More

நாளை வளைய சூரிய கிரகணம். வானில் தோன்றும் அரிய நிகழ்வான வளைய சூரிய கிரகணம் இன்று ஜூன் 10 ஏற்படுகிறது.

பூமி தன் சுற்றுப்பாதையில் சூரியனையும் நிலவு தன் சுற்றுப்பாதையில் பூமியையும் சுற்றி வருகின்றன. ஒரே நேர்க்கோட்டில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு வரும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அப்போது சூரிய ஒளியை நிலவு மறைக்கும். அதன் நிழல் பூமியில் தெரியும். …

நாளை வளைய சூரிய கிரகணம். வானில் தோன்றும் அரிய நிகழ்வான வளைய சூரிய கிரகணம் இன்று ஜூன் 10 ஏற்படுகிறது. Read More

கொரோனா பல அலைகளுக்குப் பிறகு பருவகால தொற்றாக மாறலாம் – எய்ம்ஸ் இயக்குநர்

கொவிட்-19 பெருந்தொற்றின் அடுத்தடுத்த அலைகளால் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பது தவறான தகவலாகும். இதை நிரூபிப்பதற்கான எந்தவொரு தரவும் இந்திய அளவிலோ அல்லது சர்வதேச அளவிலோ இல்லை,” என்று தில்லி எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரண்தீப் குலேரியா இன்று கூறினார். புதுதில்லி பத்திரிகை தகவல் அலுவலகத்தில் …

கொரோனா பல அலைகளுக்குப் பிறகு பருவகால தொற்றாக மாறலாம் – எய்ம்ஸ் இயக்குநர் Read More

கொவிட்-19 பராமரிப்பிற்கான 20 மருத்துவ தாவரங்கள் குறித்த மின்-புத்தகத்தை கிரண் ரிஜிஜூ வெளியிட்டார்

கொவிட்-19 பராமரிப்பிற்கான 20 மருத்துவ தாவரங்கள் குறித்த மின்-புத்தகத்தை ஆயுஷ் இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு கிரண் ரிஜிஜூ இன்று வெளியிட்டார். முக்கிய மருத்துவ தாவரங்கள் மற்றும் அவற்றின் குணங்கள் குறித்து எடுத்துரைப்பதற்காக “20201-ம் ஆண்டில் கொவிட்-19 பராமரிப்பிற்கான 20 மருத்துவ தாவரங்கள்” எனும் தலைப்பிலான இந்த மின்-புத்தகத்தை தேசிய மருத்துவ தாவரங்கள் …

கொவிட்-19 பராமரிப்பிற்கான 20 மருத்துவ தாவரங்கள் குறித்த மின்-புத்தகத்தை கிரண் ரிஜிஜூ வெளியிட்டார் Read More

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடுத்தர தொழில்துறைக்கு ரூ. 3600 கோடி கடனுதவி

இந்தியாவில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையை புனரமைக் ரூ.3,600 கோடி கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல்! இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையை …

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடுத்தர தொழில்துறைக்கு ரூ. 3600 கோடி கடனுதவி Read More

தில்லி-தேசிய தலைநகர் பகுதியில் காற்றின்தரம் மேலும் சிறிதளவு பாதிக்கப்படுமென்கிறது இந்தியா

இந்திய வானியல் துறையின் தேசிய வானிலைமுன்னறிவிப்பு மையத்தின் படி: காற்றின் போக்கு மற்றும் காற்றோட்ட குறியீட்டுமுன்னறிவிப்பு. தில்லிக்கான காற்றின் தரம், காற்றோட்டம் மற்றும்வானிலை குறித்த முன்னறிவிப்பு வருமாறு: தில்லி தேசிய தலைநகர் பகுதிக்கான காற்றின் தரம்நடுத்தரமான அளவில் 2021 ஜூன் 7 அன்று இருக்கும். மிதமானதில் இருந்து மோசமான பிரிவுக்கு காற்றின் தரம்2021 ஜூன் 8 மற்றும் 2021 ஜூன் 9 அன்று மாறும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. பலத்த காற்றின் காரணமாகஉள்ளூரில் தூசிப்படலம் எழும்புவதோடு, அருகில்இருக்கும் பகுதிகளிலும் இருந்தும் தூசுப்படலம்வந்தடையலாம். பலத்த காற்றின் காரணமாக உள்ளூரில் தூசுஎழும்புவதோடு, அருகில் இருக்கும் பகுதியில் இருந்தும்தூசு வந்தடையலாம் என்பதால், பிஎம்10 எனும் அளவில்காற்றின் தரம் இருக்கும்.

தில்லி-தேசிய தலைநகர் பகுதியில் காற்றின்தரம் மேலும் சிறிதளவு பாதிக்கப்படுமென்கிறது இந்தியா Read More

நடுக்கடலில் உடல்நிலை பாதித்த கப்பல்கேப்டனை துரிதமாக மீட்டது இந்திய கடலோரகாவல்படை

கோவா அருகே மருத்துவ உதவி தேவைப்பட்ட வணிககப்பல் கேப்டனை, இந்திய கடலோர காவல்படைஹெலிகாப்டர் துரிதமாக மீட்டு மருத்துவமனையில்சேர்த்தது. மும்பை கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்புமையத்திலிருந்து, இந்திய கடலோர காவல் படைக்குஇன்று காலை 4.30 மணியளவில் ஒரு அவசர அழைப்புவந்தது. கோவாவுக்கு தென்மேற்கே 109 நாட்டிக்கல்மைல் தொலைவில் உள்ள எம்.டி எலிம் என்ற சரக்குகப்பலில்,  50 வயதான தென்கொரிய கேப்டனுக்குஅவசர மருத்துவ உதவி தேவைப்படுவதாக தகவல்தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கோவாவிலிருந்து இந்திய கடலோர காவல்படை கப்பல் சி-158, மீட்பு பணிக்கு இன்று காலை 5.30 மணிக்கு புறப்பட்டது. மீட்பு பணியை துரிதமாகமேற்கொள்ள கடலோர காவல் படையின் சேத்தக் ரகஹெலிகாப்டரும் அனுப்பப்பட்டது. மோசமானவானிலையிலும், அந்த ஹெலிகாப்டர் மார்ஷல் தீவைச்சேர்ந்த எம்.டி.சலீம் என்ற அந்த கப்பலை நெருங்கியது. ஹெலிகாப்டரில் சென்ற டைவர் கப்பலில் இறங்கிநோயாளியை பத்திரமாக ஹெலிகாப்டரில் ஏற்றினார். கோவாவின் வாஸ்கோ நகரில் எஸ்எம்ஆர்சிமருத்துவமனையில், சரக்கு கப்பல் கேப்டன்சேர்க்கப்பட்டார். அவரது உடல் நிலை தற்போது நன்றாகஉள்ளது.

நடுக்கடலில் உடல்நிலை பாதித்த கப்பல்கேப்டனை துரிதமாக மீட்டது இந்திய கடலோரகாவல்படை Read More