இந்தியாவில் கொவிட் பாதிப்பு தொடர்ந்து சரிவு

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இந்தியாவில் கொரோனாதொற்றினால் கடந்த 24 மணி நேரத்தில்பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,14,460 ஆகக்குறைந்துள்ளது. இதையடுத்து, தொடர்ந்து 10-வது நாளாகஅன்றாட புதிய பாதிப்புகள் இரண்டு லட்சத்திற்கும் கீழ்பதிவாகியுள்ளது. நம் நாட்டில் கொவிட் தொற்றுக்குத் தற்போது சிகிச்சைபெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து கணிசமாக சரிந்து, தற்போது 14,77,799 ஆக உள்ளது. இது, நாட்டில் ஏற்பட்டமொத்த பாதிப்பில் வெறும் 5.13 சதவீதமாகும். இந்தஎண்ணிக்கை 6-வது நாளாக 20 லட்சத்திற்கும் குறைவாகஏற்பட்டுள்ளது.சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையில் கடந்த 24 மணிநேரத்தில் 77,449 சரிந்துள்ளது. தொடர்ந்து 24-வது நாளாக புதிய பாதிப்புகளை விட தினசரிகுணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,89,232 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளார்கள்.கடந்த 24 மணி நேரத்தில் புதிதாகத் தொற்றுக்குஆளானவர்களை விட கூடுதலாக 74,772 பேர்குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 2,69,84,781 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதன்படிகுணமடைந்தவர்களின் விழுக்காடு 93.67 சதவீதமாகஅதிகரித்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 20,36,311 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 36,47,46,522 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 6.54 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி வீதம் 5.62 சதவீதமாகவும்பதிவாகியுள்ளது. தொடர்ந்து 13 நாட்களாக இந்தஎண்ணிக்கை 10 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 23.13 கோடி தடுப்பூசிகளும், கடந்த 24 மணி 

இந்தியாவில் கொவிட் பாதிப்பு தொடர்ந்து சரிவு Read More

டிஜிட்டல் இறையாண்மையில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்கிறது இந்திய அரசு

இந்தியா ஒருபோதும் டிஜிட்டல் இறையாண்மை கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாது என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.  டிவிட்டர் நிறுவனத்திற்கும் மத்திய அரசுக்கும் புதிய டிஜிட்டல் கொள்கை தொடர்பாக சட்டரீதியான யுத்தம் தொடங்கியுள்ள நிலையில் அரசின் புதிய சட்டங்களை …

டிஜிட்டல் இறையாண்மையில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்கிறது இந்திய அரசு Read More

தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் மற்றும் சொத்துக்களினால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள வலுவான சர்வதேச ஒத்துழைப்பு தேவை என்கிறது இந்தியா

சர்வதேச அதிகார வரம்புகளை கடக்கும் தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் மற்றும் சொத்துக்களினால் ஏற்படும் மற்றுமொரு தீவிர வளர்ந்து வரும் சவாலை உலகம் தற்போது எதிர்கொண்டு வருகிறது என்று இந்தியா கூறியுள்ளது. ஊழலை எதிர்த்து போராடுவதில் உள்ள சவால்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்த ஐக்கிய …

தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் மற்றும் சொத்துக்களினால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள வலுவான சர்வதேச ஒத்துழைப்பு தேவை என்கிறது இந்தியா Read More

“குழந்தைகளிடையே கொவிட்-19 தொற்று: அச்சுறுத்தல்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும்” 

குழந்தைகளிடையே கொவிட்-19 தொற்று குறித்து ஜூன் 4அன்று காணொலி வாயிலான நிகழ்ச்சிக்கு அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றமான சிஎஸ்ஐஆரின் புதிய அமைப்பு சிஎஸ்ஐஆர்- அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சியின் தேசியக் கழகம் (என்ஐஎஸ்சிபிஆர்) ஏற்பாடு செய்திருந்தது. பெருந்தொற்றின் இரண்டாவது அலை பற்றியும், குழந்தைகளிடையே கொவிட்-19 தொற்றின் …

“குழந்தைகளிடையே கொவிட்-19 தொற்று: அச்சுறுத்தல்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும்”  Read More

இந்தியாவில் 2021 மே மாத மொத்த ஜிஎஸ்டி வருவாய்  ரூ 1,02,709 கோடி 

2021 மே மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) மொத்த வசூல் ₹ 1,02,709 கோடியாக உள்ளது. இதில் சிஜிஎஸ்டி ₹ 17,592 கோடியாகவும், எஸ்ஜிஎஸ்டி ₹ 22,653கோடியாகவும், ஐஜிஎஸ்டி ₹ 53,199 கோடியாகவும் (சரக்கு இறக்குமதிகளின் மூலம் வசூலான ₹ 26,002 கோடியாகவும் சேர்த்து) மற்றும் செஸ் ₹ 9,265 கோடியாகவும் (சரக்கு இறக்குமதிகளின் மூலம் வசூலான ₹ 868 கோடியாகவும் சேர்த்து) உள்ளது.  கொவிட் பெருந்தொற்றின் இரண்டாம் அலையின் காரணமாக 2021 மே …

இந்தியாவில் 2021 மே மாத மொத்த ஜிஎஸ்டி வருவாய்  ரூ 1,02,709 கோடி  Read More

உலகத்தின் மிகப்பெரிய பசுமை ரயில்வேயாக இந்திய ரயில்வே உருவெடுத்துக் கொண்டிருக்கிறது

உலகத்தின் மிகப்பெரிய பசுமை ரயில்வேயாக திகழ்வதற்கான  முயற்சிகளை மும்முரமாக எடுத்து வரும் இந்திய ரயில்வே, கரியமில வாயுவை முற்றிலும்வெளியிடாத அமைப்பாக 2030-ம் ஆண்டுக்குள் உருவெடுக்க  இருக்கிறது. மிகப்பெரிய மின்மயமாக்கல், தண்ணீர் மற்றும் காகிதசேமிப்பு, ரயில் பாதைகளில் அடிபடாமல் விலங்குகளைபாதுகாத்தல் போன்ற நடவடிக்கைகளை இந்தியரயில்வே எடுத்து வருகிறது. சுற்றுப்புறச் சூழலுக்குஉகந்த மற்றும் மாசை குறைக்கும் ரயில்வேமின்மயமாக்கல், 2014-ம் ஆண்டில் இருந்து பத்து மடங்குஅதிகரித்துள்ளது. சாலை போக்குவரத்துடன் ஒப்பிடும் போது சுற்றுப்புறச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும் ரயில் போக்குவரத்தின்மூலம் பெருந்தொற்றின் போது உணவு தானியங்கள்மற்றும் ஆக்சிஜன் நாடு முழுவதும் எடுத்துசெல்லப்பட்டது. இந்திய ரயில்வேயின் பசுமை நடவடிக்கைகளுக்காகஜூலை 2016-ல் இந்திய ரயில்வே மற்றும் இந்தியதொழில் கூட்டமைப்புக்கு (சிஐஐ) இடையேபுரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 39 பணிமனைகள், 7 உற்பத்தி மையங்கள், 8 லோகோஷெட்கள் மற்றும் ஒரு சேமிப்பு கிடங்கு ஆகியவற்றுக்கு‘கிரீன்கோ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 2 பிளாட்டினம், 9 தங்கம் மற்றும் 2 வெள்ளி மதிப்பீடுகள்இவற்றில் அடங்கும். 19 ரயில் நிலையங்களுக்கும் பசுமை சான்றிதழ்கிடைத்துள்ளது. 3 பிளாட்டினம், 6 தங்கம் மற்றும் 6 வெள்ளி மதிப்பீடுகள் இவற்றில் அடங்கும். 27 ரயில்வேகட்டிடங்கள், அலுவலகங்கள், வளாகங்கள் மற்றும் இதரஇடங்களுக்கும் பசுமை சான்றிதழ் கிடைத்துள்ளது. 15 பிளாட்டினம், 9 தங்கம் மற்றும் 2 வெள்ளி மதிப்பீடுகள்இவற்றில் அடங்கும்.இதைத் தவிர, சுற்றுச்சூழல் மேலாண்மைக்கான ஐஎஸ்ஓ: 14001 சான்றிதழை கடந்த 2 வருடங்களில் 600 ரயில்நிலையங்கள் பெற்றுள்ளன. மொத்தம் 718 ரயில்நிலையங்கள் ஐஎஸ்ஓ: 14001 சான்றிதழை பெற்றுள்ளன.

உலகத்தின் மிகப்பெரிய பசுமை ரயில்வேயாக இந்திய ரயில்வே உருவெடுத்துக் கொண்டிருக்கிறது Read More

கருப்பு பூஞ்சை பாதிப்பு யாருக்கு, எதனால் ஏற்படுகிறதென இணைய கருத்தரங்கில் நிபுணர்கள் விளக்கமளித்தார்கள்

.கொவிட்-19 பாதிப்புகளோடு ஒப்பிடும்போது மிகக் குறைவான அளவில் மட்டுமே கருப்பு பூஞ்சை எனப்படும் மியுகோர்மைகோஸிஸ் தொற்று பரவல் உள்ளதாக இரைப்பை மற்றும் குடலியல் நிபுணர் டாக்டர் ராஜீவ் ஜெயதேவன் கூறினார். ‘கொவிட்-19 தொடர்புடைய மியுகோர்மைகோஸிஸ் மற்றும் வாய் சுகாதாரம்‘ எனும் தலைப்பில் பத்திரிகை தகவல் …

கருப்பு பூஞ்சை பாதிப்பு யாருக்கு, எதனால் ஏற்படுகிறதென இணைய கருத்தரங்கில் நிபுணர்கள் விளக்கமளித்தார்கள் Read More

8 பில்லியன் வருடங்களுக்கு முன்பு நட்சத்திர உருவாக்கம் குறைந்ததற்கான காரணத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

பிரபஞ்சத்தில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நட்சத்திரங்கள் உருவானது குறித்து ஆய்வு செய்த வானியல் ஆராய்ச்சியாளர்கள், சுமார் 8 முதல் 10 பில்லியன் வருடங்களுக்கு முன்பு அதிக அளவில் பால்வெளிகள் உருவானதையும் அதன் பிறகு அது படிப்படியாக குறைந்ததையும் கண்டறிந்து துணுக்குற்றனர். இதற்கான காரணம் குறித்து ஆராய்ச்சியை மேற்கொண்ட அவர்கள், எரிபொருள் பற்றாக்குறையே …

8 பில்லியன் வருடங்களுக்கு முன்பு நட்சத்திர உருவாக்கம் குறைந்ததற்கான காரணத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு Read More

இந்தியாவில் வெளிநாட்டினர் தங்கும் காலம் ஆக்ஸ்ட 31ம் தேதி வரை செல்லுபடியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது

  கொவிட் தொற்று காரணமாக விமானம் கிடைக்காமல், இந்தியாவில் தங்கியுள்ள வெளிநாட்டினரின் விசாஅல்லது தங்கும் காலம் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வரைசெல்லுபடியாகும் என மத்திய உள்துறை அமைச்சகம்உத்தரவிட்டுள்ளது.  கடந்தாண்டு மார்ச் மாதத்துக்கு முன்பாகசெல்லுபடியாகும் விசா மூலம் இந்தியா வந்தவெளிநாட்டினர் பலர், கொவிட் தொற்று காரணமாகவிமானம் கிடைக்காததால் இங்கேயே தங்கியுள்ளனர். ஊரடங்கு காரணமாக, இவர்கள் தங்கள் விசா காலத்தைநீட்டிப்பதிலும் சிரமத்தை சந்தித்தனர். இதையடுத்துமத்திய உள்துறை அமைச்சகம் கடந்தாண்டு ஜூன் 29ம்தேதி பிறப்பித்த உத்தரவில், 2020 ஜூன் 30ம் தேதியுடன்விசா காலம் முடிவடைந்த வெளிநாட்டினருக்கு, சர்வதேசவிமான போக்குவரத்து தொடங்கும் தேதியிலிருந்து 30 நாட்கள் வரை விசா செல்லுபடியாகும் எனகூறியிருந்தது.  அப்போது முதல் ஒவ்வொரு மாதமும், வெளிநாட்டினர்தங்கள் விசா மற்றும் தங்கும் காலத்தை மாதந்தோறும்நீட்டித்து வந்தனர்.  இயல்பான விமான போக்குவரத்து இன்னும்தொடங்காததால், இந்த விவகாரம் குறித்து மத்தியஉள்துறை அமைச்சகம் மறு பரிசீலனை செய்து, வெளிநாட்டினருக்கான விசா அல்லது தங்கும் காலத்தைஅபராதம் இன்றி வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வரைநீட்டித்துள்ளது.  இது போன்ற வெளிநாட்டினர், தங்கள்விசா நீட்டிப்புக்கான விண்ணப்பத்தை, வெளிநாட்டினர்பதிவு அலுவலகத்தில் (FRRO / FRO) விண்ணப்பிக்கதேவையில்லை. அவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் முன், அதற்கானஅனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும். அவர்களுக்குவிசா காலத்தைவிட கூடுதலாக தங்கிய காலத்திற்கு  அபராதம் விதிக்கப்பட மாட்டாது.

இந்தியாவில் வெளிநாட்டினர் தங்கும் காலம் ஆக்ஸ்ட 31ம் தேதி வரை செல்லுபடியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது Read More

கொரோனா மூன்றாம் அலையின் தாக்கத்தைக் குறைக்க நாம்இப்போதே தயாராக வேண்டுமென்கிறார் பொதுசுகாதார முன்னாள் இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி

ஊரடங்கினால் இப்போது கொரோனா தொற்று குறைந்துவருகின்றது. இதன் அர்த்தம் என்னவென்றால் ஊரடங்குதளர்த்தப்பட்டால் தொற்று அதிகரிக்கும் என்பதுதான். அதாவதுபொதுமக்கள் அனைத்து நிலைகளிலும் முன்னெச்சரிக்கைநடவடிக்கைகளைக் கடைபிடிப்பதும் அனைவரும் தடுப்பூசிபோட்டுக்கொள்வதும் மட்டுமே உண்மையில் தொற்றைக்குறைக்கும். மூன்றாம் அலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள்உள்ளன.  மூன்றாம் அலையின் தாக்கத்தையும் பாதிப்பையும்குறைக்க நாம் இப்போதே தயாராக வேண்டும் என்று தமிழ் நாடுஅரசின் முன்னாள் பொதுசுகாதார இயக்குனர் டாக்டர்க.குழந்தைசாமி கேட்டுக்கொண்டார். மத்திய அரசின் புதுச்சேரி மக்கள் தொடர்பு களஅலுவலகமும் விழுப்புரம் மாவட்டம் ஒருங்கிணைந்தகுழந்தைகள் வளர்ச்சித் திட்டமும் இணைந்து இன்று(1.6.2021) முற்பகல் நடத்திய கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம்அலையை எதிர்கொள்ளுதல் மற்றும் தடுப்பூசியின் அவசியம்என்ற காணொலி கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றியபோதுடாக்டர் குழந்தைசாமி இவ்வாறு தெரிவித்தார்.  கர்ப்பிணிகளை கொரோனா தொற்று ஏற்படாமல்பாதுகாக்க வேண்டும். வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகளைவீட்டார் மட்டுமே நடத்திக் கொள்ள வேண்டும். உறவினர்கள், அண்டை அயலார் கூட வரக்கூடாது. பிரசவத்துக்குப் பிறகுகுழந்தையைப் பார்க்கக்  கூட யாரும் வரவேண்டாம். பாலூட்டும்தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். கிராமத்தில் குடும்ப விசேஷ நிகழ்ச்சிகள் மூலம்தான் குடும்பம்குடும்பமாகத் தொற்று ஏற்படுகிறது. கோவிட்-19 இரண்டாம்அலையின் தாக்கம் இருக்கும் வரை தனித்து இருப்பதும்விசேஷங்களைத் தள்ளிப் போடுவதும் அவசியம் என்று டாக்டர்குழந்தைசாமி மேலும் தெரிவித்தார். சென்னை பத்திரிகைத் தகவல் அலுவலகம் மற்றும்மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் ஆகியவற்றின் கூடுதல்தலைமை இயக்குனர் திரு. மா.அண்ணாதுரை தலைமை உரைஆற்றினார்.  இன்றைய நெருக்கடியான சூழலில்தான் அறிவியல்மனப்பான்மையின் தேவை உணரப்படுகின்றது. பகுத்தறிவுக்குஒவ்வாத கருத்துகளை மக்கள் புறந்தள்ள வேண்டும். அறிவியல்பூர்வமான உண்மையான தகவல்களை அடிக்கடிபகிர்ந்து கொள்ள வேண்டும். வதந்திகளுக்கு முற்றுப்புள்ளிவைக்க வேண்டும். கிராமத்தில் இருக்கும் செவிலியர் மற்றும்அங்கன்வாடிப் பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுமுன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என்று அண்ணாதுரைகேட்டுக் கொண்டார். விழுப்புரம் நகர நல அலுவலர் டாக்டர்ந.பாலசுப்பிரமணியம் விழுப்புரம் நகரத்தில் இரண்டு நகர நலமையங்கள் மற்றும் இரண்டு பள்ளிக் கூடங்களில் தினசரிகொரோனா தடுப்பூசி போடப்படுகின்றது என்று தெரிவித்தார்.  மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் இரா.மாலாமுதல் அலையின் போது பெரும்பாக்கத்தில் செயல்பட்டகோவிட் சித்தா மையத்தில் சுமார் 1000 தொற்றாளர்கள் முழுகுணமடைந்தனர். இப்போது இரண்டாம் அலையிலும் இதுவரை525 பேர் குணமடைந்துள்ளனர் என்று தெரிவித்தார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின்மாவட்ட அலுவலர் திருமிகு எஸ்.கே.லலிதா அங்கன்வாடிப்பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதோடுதம் குடும்பத்தில் உள்ள அனைவரையும் தடுப்பூசி போட வைக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலகஇயக்குனர் திரு. ஜெ.காமராஜ் நிறைவுரை ஆற்றினார். மக்கள்தங்கள் பொறுப்புணர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைஎப்போதும் கடைபிடிக்க வேண்டும் என்றும் தடுப்பூசிபோட்டுக்கொள்ள தயக்கம் காட்டவே கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.புதுச்சேரி மக்கள் தொடர்பு கள அலுவலக துணைஇயக்குனர் திரு. தி.சிவக்குமார் கடந்த 10 நாட்களில் மட்டும்விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 6100 பேருக்கு புதியதாககொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்றும் சுமார் 50 மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்றும் தெரிவித்தார்.  களவிளம்பர உதவியாளர் திரு.மு.தியாகராஜன் நன்றி கூறினார்.  காணொலி கருத்தரங்கில் அங்கன்வாடிப் பணியாளர்கள், வளர் இளம் பெண்கள் மற்றும் கிராம மகளிர் என சுமார் 650 பேர்கலந்து கொண்டனர்.

கொரோனா மூன்றாம் அலையின் தாக்கத்தைக் குறைக்க நாம்இப்போதே தயாராக வேண்டுமென்கிறார் பொதுசுகாதார முன்னாள் இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி Read More