18 ஜூன், 2021:லீனா மணிமேகலை இயக்கிய மாடத்தி திரைப்படத்தின் முன்னோட்டம்/Trailer சினிமா, இலக்கியம், கலை, அரசியல் எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்தஆளுமைகளால் பிரம்மாண்டமாக வெளியிடப் படுகிறது. ஷைலஜா டீச்சர், மஞ்சு வாரியர், பிரித்விராஜ் சுகுமாரன், ஐஸ்வர்யா ராஜேஷ், அஞ்சலி மேனன், கீது மோகன் தாஸ், சேரன், ஆஷிக் அபு, பா ரஞ்சித், வசந்தபாலன், சி எஸ் அமுதன், ரீமா கல்லிங்கள், நீரஜ் கய்வான், தமிழச்சி தங்கபாண்டியன், என். எஸ். மாதவன், ரோஹிணி, எஸ்.ஆர். பிரபு, டி.எம். கிருஷ்ணா, ஷோபா சக்தி உட்பட பல கலைஞர்களும், அரசியல் தலைவர்களும்செயல்பாட்டாளர்களும் படை திரண்டு மாடத்தியின் முன்னோட்டத்தை தத்தமது சமூகவலைத் தளங்களில் வெளியிட்டனர். லீனா மணிமேகலை எழுதி, இயக்கி, தன் நிறுவனமானகருவாச்சி ஃபிலிம்ஸின் தயாரிப்பில் உருவாக்கியிருக்கும் மாடத்தி ஜீன் 24 முதல் நீஸ்ட்ரீம்ஓடிடி தளத்தில் திரையிடப்பட உள்ளது “ஏதிலிகளுக்குத் தெய்வமில்லை. அவரே தெய்வம்” என்ற மேற்கோளுடன் வரும் இப்படம்தமிழ்நாட்டின் தென்கோடியில், ‘காணத்தகாதோர்‘ என்று அடையாளப்படுத்தப்படும் புதிரைவண்ணார் சமூகத்தைச் சார்ந்த ஒரு பதின்வயது பெண்ணின் பருவ வாழ்க்கையைப்பேசுகிறது. தலித் மக்கள் மற்றும் இறந்தவர்களின் துணிகளையும் மாதவிடாய்துணிகளையும் துவைப்பவர்களான இம்மக்கள் எதிர்கொள்ளும் கொடூரமானஅடக்குமுறைகளை இப்படம் தோலுரிக்கிறது. இவர்களைப் பார்த்தாலே தீட்டு என்றுகருதப்படுவதால் மற்ற சமூகத்தினர் கண்ணில் படாமல் ஒளிந்து செல்லும் அவலநிலைக்குள்ளாகிய இம்மக்களின் துயர வாழ்வின் பின்னணியில் பாலின, சாதிஅடையாளங்கள், மத நம்பிக்கைகள் மற்றும் வன்முறை ஆகியவற்றை ஆழ்ந்துஅவதானிக்கும் ஒரு உக்கிர தேவதையின் கதை மாடத்தி. இன்று வெளியாகியிருக்கும்முன்னோட்டம் அடிமைப்பட்டிருக்கும் சமூகத்தில் பிறந்த பெண் எப்படிதனக்கிழைக்கப்பட்ட அநீதியால் உக்கிர தெய்வமாகிறாள் என்ற கதையின் மிகத்துல்லியமான காட்சி குறுக்குவெட்டாய் அமைந்திருக்கிறது. சாதி அடுக்குகளின் கடைசிமனுசியாய் வாழும் ஒரு பெண் சாதியையும் பாலின அடக்குமுறைகளையும் எதிர்கொள்வதை ஒரு பெண்ணின் பார்வை கொண்டு மாடத்தி திரைப்படம் காட்சிப் படுத்தியிருப்பதைமுன்னோட்டம் கட்டியம் கூறுகிறது. லீனா மணிமேகலை சமூக நீதி குறித்த கருத்துக்களை கவித்துவமான அழகியலுடன்பேசும் கலைப்படைப்புகளுக்காக பெயர் பெற்றவர். பலதரப்பட்ட பாணிகளிலான இவரின்படைப்புகள் உலகின் தலைசிறந்த திரைப்பட விழாக்களில் பல விருதுகளைப்பெற்றிருக்கின்றன. லீனா மணிமேகலையின் சிறந்த படைப்புகளான Goddesses (2009), செங்கடல் (Cinema Verite 2011), My Mirror is the Door (2012, Cine Poem), White Van Stories (2015, Feature Documentary) மற்றும் Is it too much to ask (2017, Mockumentary) ஆகியவை இவரை ஒரு தனித்துவமிக்க தனித்திரை ஆளுமையாக நிலைநாட்டி உள்ளன. …
கருவாச்சி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவான மாடத்தி திரைப்படம் ஜூன் 24 அன்று வெளியாகிறது. Read More