தாம்பரம் மாநகராட்சி, பெருங்களத்தூர் மண்டலம் மௌலானா நகர் பகுதியில் டெங்கு கொசு ஒழிப்புநடவடிக்கைகள் குறித்து ஆணையாளர் திருமதி ஆர்.அழகுமீனா,இ.ஆ.ப., அவர்கள் இன்று பார்வையிட்டுஆய்வு மேற்கொண்டு சுகாதார நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் தெரிவித்ததாவது. தாம்பரம் மாநகராட்சியில் டெங்குக் காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கையாக மாநகராட்சி பலவகைகளில்நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. மாநகராட்சிக்குட்பட்ட தெருக்களில் வாரந்தோறும் கொசுப்புழு வளரிடங்களான, மேல்நிலை / கீழ்நிலைத் தொட்டி, கிணறு, தேவையற்ற பொருள்கள் (டயர்கள், உடைந்தபிளாஸ்டிக் குடங்கள் மற்றுமுள்ளவைகள்) ஆகியவற்றை கண்டறிந்து கொசுப்புழுக்கள் இருப்பின் அதனைஅழித்திட நடவடிக்கை மேற்கொள்ளவும், மேலும், 14 மருந்து தெளிப்பான்கள், பேட்டரி மூலம் இயங்கும் 12 ஸ்ப்ரேயர்கள், 7 கையினால் இயங்கும் புகைப்பரப்பும் இயந்திரங்கள், 16 சிறிய புகைப்பரப்பும் இயந்திரங்கள்மற்றும் 14 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகைப்பரப்பும் இயந்திரங்கள் கொண்டு கொசுக்களை கட்டுப்படுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு மற்றும் மாநகராட்சி கட்டிடங்கள், புதிய கட்டுமான பணிகள்நடைபெறும் இடங்களிலும் கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட வேண்டும் எனவும், டெங்குகொசுஉற்பத்தியாக கூடிய நண்ணீர் தேங்கிய இடங்களிலும், டயர்கள் மற்றும் உபயோகமற்ற பொருட்களைஅப்புறப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், அனைத்து பள்ளிகள், பூங்காக்கள், அரசுகட்டிடங்களில் உள்ள தேவையற்ற மழைநீர் தேங்கும் பொருட்களை அப்புறப்படுத்தப்பட வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதியில் கட்டிடக் கட்டுமானங்கள் நடைபெறும்இடங்களிலும் கட்டிடக் கழிவுகள் கொட்டி வைக்கப்பட்டிருக்கின்ற இடங்களிலும், காலி மணைகளிலும்தண்ணீர் தேங்கியிருந்து அதன்மூலம் டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தி இருப்பதை கண்டறியப்பட்டால்தொடர்புடையவர்களுக்கு அபராதம் விதித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அதிக காய்ச்சல் கண்ட இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு இரத்த தடவல் எடுக்கப்பட்டு உரியசிகிச்சை இலவசமாக அளிக்கபட வேண்டும். நிலவேம்பு குடிநீர் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும்மற்றும் மருத்துவ முகாம்களிலும் இலவசமாக வழங்கப்பட வேண்டும்.
பொது மக்களுக்கு டெங்கு காய்ச்சல் பற்றியும், ஏடிஸ் கொசு உற்பத்தி பற்றியும், அது தடுக்கும் வழிமுறைகள்மற்றும் விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசுரங்கள் மற்றும் துண்டறிக்கைகள் மூலம் விநியோகிக்கப் படவேண்டும். எனவே, பொதுமக்கள் தங்களின் வீடு மற்றும் சுற்றுப்புறத்தில் உபயோகமற்ற டயர், தேங்காய்சிரட்டைகள், உடைந்த குடங்கள், உடைந்த சிமெண்ட் தொட்டிகள் முதலியவற்றில் தண்ணீர் தேங்கிகொசுப்புழு உருவாகும் வாய்ப்புள்ளதால், அதனை உடனடியாக அகற்ற வேண்டும், மேலும், கிணறு, மேல்நிலைத்தொட்டி, கீழ்நிலைத் தொட்டி, தண்ணீர் தொட்டிகள் முதலியவற்றை கொசுக்கள் மற்றும் கொசுப்புழு புகாவண்ணம் மூடிவைக்க வேண்டும். தண்ணீர் நிரப்பிய பூஜாடி மற்றும் கீழ்த்தட்டு, குளிர்பதன பெட்டியின் கீழ்த்தட்டுபோன்றவற்றில் தேங்கி நிற்கும் தண்ணீரை வாரமொருமுறை அகற்றி தங்களின் வீடு மற்றும் சுற்றுப்புறத்தைதூய்மையாக பராமரிக்க வேண்டும் என அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆணையாளர் அவர்கள் தெரிவித்தார்..
இந்த ஆய்வின் போது நகர் நல அலுவலர், துப்புரவு அலுவலர், துப்புரவு ஆய்வாளர் மற்றும் அலுவலர்கள் உடன்இருந்தனர்.