சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலா வளாக கூட்டரங்கில், தமிழ்நாடு சுற்றுலாவளர்ச்சிக்கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள், அமுதகம் உணவகங்கள், படகு குழாம்கள் குறித்த தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாளர்கள் மற்றும் மண்டல மேலாளர்களுக்கானஆய்வுக் கூட்டம் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலாவளர்ச்சிக் கழக தலைவர் டாக்டர். க.மணிவாசன் இ.ஆ.ப., அவர்கள், முதன்மை செயலாளர் /சுற்றுலாஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தலைவர் /மேலாண்மை இயக்குநர் திருமதி.காகர்லாஉஷா.இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில் இன்று (18.10.2023) நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில், சிறப்பாக செயல்பட்ட ஓட்டல் மேலாளர்களுக்கு பரிசுத்தொகை காசோலைகளை மாண்புமிகுசுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் பேசுகையில் தெரிவித்ததாவது,
தமிழ்நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கை அளித்த முத்தமிழறிஞர் அவர்கள் தமிழ்நாடு சுற்றுலாவளர்ச்சிக் கழகத்தை 1971 ஆம் ஆண்டில் உருவாக்கினார்கள். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ஓட்டல்தமிழ்நாடு தங்கும் விடுதிகள், அமுதகம் உணவு விடுதிகள், சுற்றுலா பயணத்திட்டங்கள், சுற்றுலா பேருந்துசேவைகள், படகு சேவைகள், தொலைநோக்கி இல்லங்கள் என பல்வேறு சுற்றுலா சேவைகளை வழங்கிவருகின்றது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டை இந்தியாவிலேயே சுற்றுலா பயணிகளின்விருப்பமான முதன்மை மாநிலமாக உருவாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். சுற்றுலா கொள்கை 2023 வெளியிட்டு, சுற்றுலாத்துறை முதலீட்டாளர்களுக்கு பல்வேறு ஊக்கத்தொகைமற்றும் சலுகைகளை அறிவித்துள்ளார்கள்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சுற்றுலாப் பயணிகளுக்கு நினைவில் நீங்காத அனுபவத்தை தரும்வகையில், சாகச படகு சவாரி மற்றும் நீர் விளையாட்டுகளுடன் கூடிய படகு குழாம்களை முட்டுக்காடு, முதலியார் குப்பம், உதகமண்டலம், பைக்காரா, கொடைக்கானல், ஏற்காடு, பிச்சாவரம், குற்றாலம் மற்றும்வாலாங்குளம் ஏரி உள்ளிட்ட 9 இடங்களில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் படகு குழாம்களை இயக்கிவருகிறது. வாட்டர் ஸ்கூட்டர்கள், மோட்டர் படகுகள், விரைவு படகுகள், மிதிப்படகுகள், துடுப்பு படகுகள், வாட்டர் சைக்கிள்கள், குழந்தைகளுக்கான மிதிப்படகுகள் என மொத்தம் 588 படகுகள் சுற்றுலாபயணிகளுக்கு நீங்காத அனுபவங்களை அளித்து வருகின்றன.
2022 – 2023 ஆம் நிதியாண்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் படகு குழாம்கள் மூலமாகஇயக்கப்படும் படகுகளில் மொத்தம் 42,22,945 சுற்றுலா பயணிகள் படகு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
2023 – 2024 ஆம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை 6 மாதங்களில் மட்டும் மொத்தம்27,25,221 சுற்றுலா பயணிகள் படகு பயணம் மேற்கொண்டுள்ளனர். (செப்டம்பர் – 2023 மாதத்தில் மட்டும்3,07,785 சுற்றுலா பயணிகள் படகு பயணம் மேற்கொண்டுள்ளனர்.)
தமிழ்நாடு சுற்றுலாத்துறை மேலும் வளர்ச்சியடைய சுற்றுலா வளர்ச்சித்திட்டப் பணிகள் விரைந்து முடிவடையும் வகையில் அலுவலர்கள் தங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாண்புமிகுசுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பொதுமேலாளர் திருமதி.இ.கமலா உள்பட சுற்றுலாத்துறைஅலுவலர்கள், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மண்டல மேலாளர்கள், மேலாளர்கள், உதவிசெயற்பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.