சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறையின் கூட்டரங்கில் திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலினைப் பழமைமாறாமல் புதுப்பித்தல் தொடர்பான பெருந்திட்ட ஆய்வுக்கூட்டம் 17.07.2021 அன்று மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர் பாபு,மாண்புமிகு மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும்கால்நடைப் பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதாஆர்.இராதாகிருஷ்ணன், தூத்துக்குடி நாடாளுமன்றஉறுப்பினர் திருமதி.கனிமொழி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எச்.சி.எல் நிறுவனத்தினால் நியமனம்செய்யப்பட்ட கட்டிடக்கலை வல்லுனர்களால்திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமிதிருக்கோயிலினைப் பழமை மாறாமல் புதுப்பித்தல் மற்றும்பெருந்திட்டம் தொடர்பான ஆய்வுப் பணிகள்மேற்கொள்ளப்பட்டது. அப்பணிகள் தொடர்பான முதல்கட்டவிளக்கக் காட்சியில் திருக்கோயிலின் கட்டுமானம், பக்தர்களின் அடிப்படை வசதிகள், முக்கிய திருவிழாக்காலங்களில் அதிகப்படியான பக்தர்களைஈர்க்கும் வகையில் மேலாண்மை செய்தல், காற்றோட்டவசதிகள் உள்ளிட்ட பல்வேறு கருத்துரைகள் கலந்தாய்வுசெய்யப்பட்டன. இத்திருக்கோயில் சுமார் 63 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளதால் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள்பல்வேறு பகுதிகளாகப் பிரித்து செயல்பட வேண்டியுள்ளது.குறிப்பாகத் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களின்பயன்பாட்டிற்காக அடிப்படை வசதியான குடிநீர் வசதி, கழிவுநீர் மேலாண்மை, மின்னாளுமை, வாகனம் நிறுத்தும்இடங்கள், ஒளியமைப்பு இவைகளை அதிக செலவின்றிதரமானதாக அமைத்தல் மற்றும் மின் சிக்கனத்தையும்கருத்தில் கொள்ளுதல், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டபின்னர் பணியாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தல், பக்தர்கள் வரிசையில் ஓய்வெடுப்பதற்கான இடங்களில்கழிப்பறை, குடிநீர் மற்றும் பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்டஅனைத்து வசதிகள் இப்பெருந்திட்டத்தில் இடம்பெறவேண்டும் என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கோயில் வளாகத்தில் அதிகளவிலான திருமணங்கள்ஒரே நாளில் திருக்கோயிலில் நடைபெறும் போது அவற்றைமேலாண்மை செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படவேண்டும் எனவும், திருக்கோயில் சுற்றுப்புறத்தில்இயக்கப்படும் பொதுப் போக்குவரத்து மற்றும் தனியார்வாகனங்கள் ஓர் இடத்தில் முறைப்படுத்தப்பட்டு அங்குஇருந்து திருக்கோயிலுக்கு மினி வாகனம் இயக்கப்படவேண்டும் எனவும், திருக்கோயில் சுற்றுப்புறத்தில் வசிக்கும்மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு மேற்படிதிட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் எனவும் அறிவுரைகள்வழங்கப்பட்டது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள்துறை முதன்மைச் செயலாளர், முனைவர்பி.சந்திர மோகன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை, ஆணையர், ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., கூடுதல்ஆணையர், திரு.கண்ணன், இ.ஆ.ப., திருச்செந்தூர்,அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், தக்கார், திரு.கண்ணன், விளாத்திகுளம், சட்டமன்ற உறுப்பினர வி.மார்க்கண்டேயன், எச்.சி.எல் நிறுவன கட்டிடக்கலைவல்லுனர் திருமதி.ஸ்ரீமதி உட்பட பல அரசு உயர்அலுவலர்கள் கலந்து கொண்டனர்.