நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவிகித இட ஒதிக்கீடு கேட்டு கோரிக்கை

இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநில துணை செயலாளர் மருத்துவர் A.R சாந்தி, மத்திய சென்னை  மாவட்டச் செயலாளர் E. தனலட்சுமி, வில்லிவாக்கம் பகுதி துணைச் செயலாளர் G.கவிதா,வில்லிவாக்கம் பகுதி தலைவர் B.முருகேஸ்வரி ஆகியோர் 11.11.2024 அன்று மத்திய சென்னை மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறனை சந்தித்து, சட்டமன்றங்கள் மற்றும் நாடாளு மன்றத்தில்  மகளிருக்கான 33 %  இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ,  நாடாளுமன்றத்தில்  வலியுறுத்தக் கோரி கோரிக்கை மனு அளித்தனர்.