இந்திய நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள ஹாலிவுட் திரைப்படம் ‘தி கிரேட் எஸ்கேப்’! – தமிழ் மற்றும்மலையாளத்தில் வெளியாகிறது! சந்தீப் ஜே.எல் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாலிவுட் திரைப்படம் ‘தி கிரேட் எஸ்கேப்’! – மே 12 ஆம் தேதிஉலகம் முழுவதும் வெளியாகிறது. கதாநாயகனாக சந்தீப் ஜே.எல் நடிக்கிறார். இவருடன் தமிழ் நடிகர் சம்பத்ராம், மலையாள நடிகர் பாபு ஆன்டணி ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். சௌத் இண்டியன் யுஎஸ் பிலிம்ஸ் தயாரிக்கிறது. கைசாட் பட்டேல், பிரோஸ் பட்டேல் இருவரும் இசையமைக்கிறார்கள். ********
ஒளிப்பதிவு கென்டின், சண்டைப் பயிற்சி சந்தீப் ஜே.எல், எடிட்டிங் ஜெய கிருஷ்ணன், மக்கள் தொடர்பு கோவிந்தராஜ். ஹாலிவுட் படங்களில் ஸ்டண்ட் கலைஞர் மற்றும் இயக்குநராக பணியாற்றிய சந்தீப் ஜே.எல், ‘அவுட்ரேஜ்’ (Outrage) படம் மூலம் ஹாலிவுட்டில் இயக்குநராகவும், ஹீரோவாகவும் அறிமுகமானார். கடந்த 2020 ஆம்ஆண்டு உலகம் முழுவதும் வெளியான ‘அவுட்ரேஜ்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், சந்தீப் ஜே.எல், இயக்கி ஹீரோவாக நடித்திருக்கும் இரண்டாவது ஹாலிவுட் திரைப்படம் ‘திகிரேட் எஸ்கேப்’ அனைத்து பணிகளும் நிறைவடைந்து, வரும் மே 12 ஆம் தேதி உலகம் முழுவதும்வெளியாவதோடு, தமிழ் மற்றும் மலையாள மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது.
இப்படம் குறித்து இயக்குநரும், நடிகருமான சந்தீப் ஜே.எல் கூறுகையில், “அமெரிக்காவில் சட்ட விரோதமாககுடியேறி, உணவகம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருக்கும் நாயகன் சந்தீப் ஜே.எல், சந்தர்ப்ப சூழ்நிலையால்மாஃபியா கும்பலிடம் சிக்கிக்கொள்ள, அவரை அந்த கும்பல் துரத்துகிறது. அந்த கும்பலிடம் இருந்துநாயகனை மற்றொரு மாஃபியா குழுவின் தலைவன் பாபு ஆண்டனி காப்பாற்ற முயற்சிக்கிறார். இதனால், இரண்டு மாஃபியா குழுவுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடக்கிறது. இறுதியில் நாயகனை பாபுஆண்டனி எப்படி காப்பாற்றுகிறார், எதற்காக காப்பாற்றுகிறார், என்பதை விறுவிறுப்பான திரைக்கதையோடும், மெய் சிலிர்க்க வைக்கும் ஆக்ஷன் காட்சிகளுடனுடம் சொல்லியிருக்கிறோம்.” என்றார்.
உலகம் முழுவதும் படத்தை வரும் மே மாதம் 12 ஆம் தேதி, ஆங்கிலம் மற்றும் தமிழ், மலையாளத்தில்வெளியாகிறது!