அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படவேண்டிய அகவிலைப்படி பாக்கித் தொகை அனைத்தும் வழங்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி, கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1ஆம் தேதி மற்றும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி என மூன்று அகவிலைப்படி பாக்கித் தொகைகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இந்த மூன்று அகவிலைப்படி பாக்கி தொகைகளையும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் வழங்க முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு கடந்த 2001-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் பணம் பலன்களுடன், அகவிலைப்படி 7.28 சதவீதத்தில் இருந்து 17.29 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அதன் மூலமாக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 10.1 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. மேலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் GPF கணக்குகளில் அகவிலைப்படி நிலுவைத் தொகையை அரசு வரவு வைக்கும். கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அடிப்படை ஊதிய உயர்வு 30 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58-லிருந்து 61 ஆக அதிகரித்து தெலுங்கானா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நிலுவையில் உள்ள அகவிலைப்படி பாக்கி தொகையை வழங்கும் முதலமைச்சரின் முடிவு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.