ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில்திரு.தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, அவருக்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஈரோடுகிழக்கு தொகுதியில் முகாமிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக மாஜி அமைச்சர் தங்கியுள்ள இடங்களில் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அன்பளிப்புகளை குவித்து வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி வாக்காளர் பட்டியலில்இடம் பிடித்துள்ளவர்களில் 40 ஆயிரம் பேர் போலி வாக்காளர்கள் என மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம்பொய்யான தகவலை பரப்பி வருகிறார். அதிமுகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள் என தெரிந்து கொண்டு குறிப்பிட்ட 40 ஆயிரம் வாக்காளர்கள்போலியானவை என தவறான குற்றச்சாட்டை சி.வி.சண்முகம் கூறி வருகிறார். அதே போன்று ஈரோடுகிழக்கு தொகுதியில் வன்முறை, கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. இப்படிஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை எப்படியாவது நிறுத்திவிட வேண்டுமென குறுக்கு வழியில் அதிமுகமாஜி அமைச்சர்கள் செயல்பட தொடங்கியிருக்கிறார்கள். ஆகவே தேர்தல் ஆணையத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்த நினைக்கும் அதிமுக வேட்பாளர் தென்னரசு அவர்களை தகுதி நீக்கம் செய்து, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அமைதியாக நடைபெற தேர்தல்ஆணையம் ஆவண செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.