காதலை மையமாகக் கொண்ட துப்பறியும் படம் ‘ராஞ்சா’

சி.வி. குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட், ‘ராஞ்சாஎனும் புதிய திரைப்படத்திற்காக ஶ்ரீ க்ரிஷ்பிக்சர்ஸ் கி. சாம்பசிவம் உடன் இணைந்துள்ளது.  குறும்படம் இயக்கி கவனத்தை ஈர்த்த சந்தோஷ் ராவணன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் பிரஜன் மற்றும் இவானா வருண் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். அதிரன் சதீஷ், பத்மன் மற்றும் அனுபமா குமார் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களை ஏற்றுள்ளனர்.********

திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் சந்தோஷ் ராவணன், “ஒரு இளம் பெண்ணை மையமாகக் கொண்டஇந்த கதையில் அவளை சுற்றி தொடர் மரணங்கள் நடைபெறுகின்றன. எதனால் அவ்வாறு நடக்கிறது, இதன்பின்னணியில் உண்மையில் இருப்பது என்ன என்பதை விறுவிறுப்பாக சொல்லும் வகையில்ராஞ்சாஉருவாகிவருகிறது,” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “காதலின் சக்தி அசாத்தியமானது, அபிரிதமானது. ஆக்கும், காக்கும், அழிக்கும்ஆற்றலை கொண்டது அது. இத்தனை வல்லமை மிகுந்த காதலை புதுமையான கோணத்தில், அதே சமயம்அதன் இயல்பு மாறாமல் திரையில் காட்ட முயற்சித்துள்ளோம்,” என்று தெரிவித்தார்.

ராஞ்சாபடத்திற்குகாலங்களில் அவள் வசந்தம்புகழ் ஹரி இசையமைக்க, கிஷோர் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். ‘சூது கவ்வும் 2′ திரைப்படத்தின் எடிட்டர் அஷ்வின்ராஞ்சாபடத்தொகுப்பைகையாளுகிறார்.

திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சி.வி. குமார் மற்றும் ஶ்ரீ க்ரிஷ் பிக்சர்ஸ் கி. சாம்பசிவம் தயாரிப்பில்சந்தோஷ் ராவணன் இயக்கத்தில் உருவாகி வரும்ராஞ்சாதிரைப்படத்தின் இறுதி கட்டப் படப்பிடிப்புதற்போது நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வர படக்குழுவினர்திட்டமிட்டுள்ளனர்.