டாக்டர் கோ. விசுவநாதன் வேந்தர் வி.ஐ.டி.தலைவர் தமிழியக்கம் வழங்க டி,பி. ராஜேந்திரன் நிர்வாகத்துடன் இணைந்து ரமணாகம்யூனிகேஷன்ஸ் தற்போது உலகின் ஆகச்சிறந்த அறநூலான திருக்குறளைத் திரைப்படமாகத் தயாரிக்கிறது. தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. வள்ளுவராக– கலைச்சோழன் (கூத்துப்பட்டறை). வாசுகியாக – தனலட்சுமி நக்கீரனாக – சுப்ரமணிய சிவா பாண்டிய மன்னானாக – ஓ.ஏ. கே. சுந்தர். குமணனாக – அரவிந்த் ஆண்டவர் பெரும்சாத்தனாக – கொட்டாச்சி இளங்குமணனாக – சுரேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.*******
காமராஜ் திரைப்படத்திற்கு திரைக்கதை, வசனமெழுதிய செம்பூர்.கே.ஜெயராஜ் இத்திரைப்படத்திற்கான திரைக்கதையை எழுத A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.
தொழில்நுட்ப கலைஞர்கள் : ஒளிப்பதிவு : எட்வின் சகாய் கலை : சுரேஷ் கலேரி ஆடை வடிவமைப்பு : யாத்திசை புகழ் சுரேஷ் குமார். மக்கள் தொடர்பு : மணவை புவன்.