தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், மத்திய மாநில முன்னாள் அமைச்சருமான சு.திருநாவுக்கரசர் தலைவராக உள்ள முத்தமிழ்க் களஞ்சியம் கலை இலக்கியப் பேரவையின் கூட்டம் பாரதி விழாவாக (21.12.24) மாலை 5.00 மணியளவில் சென்னை – 14, இராயப்பேட்டை, 48 சி.பி. கோயில் தெருவில் உள்ள எம்.எஸ். மகாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சு.திருநாவுக்கரசர், Ex.MP தலைமை தாங்கினார். விழா துவக்கத்தில் ராணி மேரிக் கல்லூரி இசைத் துறை பேராசிரியர் முனைவர் ஞா. கற்பகம் இன்னிசை நடைபெற்றது. அதனை தொடர்ந்து பொதுச் செயலாளர் ஆ. சொ. முத்துக்கண்ணன் வரவேற்பு உரை நிகழ்த்தப்பட்டு, “வேலு நாச்சியார் காவியம்” குறித்து கம்பன் நெறிச்செம்மல் ஆழ்வார் மொழியார் பாலசீனிவாசன் திறனாய்வு உரை நிகழ்த்தப்பட்டது. இக்காவிய நூலாசிரியர் காவியப் புலவர் புதுகை வெற்றி வேலன் ஏற்புரை உரை நிகழ்த்தினார்.
அதனை தொடர்ந்து தமிழ்மாமணி இசை அறிஞர் முனைவர் அரிமளம் சு.பத்மநாபனுக்கு பாரதியார் விருது வழங்கப்பட்டது. விருது வழங்கப்பட்டதை தொடர்ந்து முத்தமிழ் களஞ்சியம் கலை இலக்கியப் பேரவையின் தலைவர் சு.திருநாவுக்கரசர், Ex.MP உரை நிகழ்த்தினார். இறுதியில் எஸ்.டி அன்பரசன் நன்றியுரையுடன் இக் கூட்டம் நிறைவடைந்தது