வெங்கட் மூவிஸ்’ நிறுவனம் சார்பில், ‘டைகர்’ வெங்கட் தயாரித்து இயக்க்கி கதையின் நாயகனாகவும் நடித்திருக்கும் படம், தண்டுபாளையம். சோனியா அகர்வால், வனிதா விஜயகுமார் இருவரும் கதையின் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். மேலும் முமைத்கான், சூப்பர் குட் சுப்பிரமணியம், பிர்லா போஸ், ஆலியா, நிஷா ரஃபிக் கோஷ், ரவிசங்கர், மக்ரதேஷ் பாண்டே , ரவிகாலே, ராயல் பிரபாகர் ஆகியோரும் நடித்துள்ளார்கள். சில வருடங்களுக்கு முன் வட மாநில கொள்ளைக்கும்பல் ஒன்று தென்மாநிலங்களில் இரவு நேரங்களில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருப்பவர்களை வெட்டி கொலை செய்து பொருட்களை கொள்ளயடித்து இளம் பெண்களை கற்பழித்துவிட்டு அப்பெண்களையும் கொலை செய்துவிட்டு தப்பிவிடுவார்கள். இந்த உண்மைச் சம்பவத்தை திரைப்படமாக்கி பொதுமக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தயாரித்துள்ளார் இயக்குநர் டைகர் வெங்கட். படம் ஆரம்பம் முதல் இறுதிவரை கொலை கொள்ளை கற்பழிப்பு காட்சிகள்தான். காவல் நிலையத்தில் பெண்கள் கற்பழிக்கப்படுவதைம் படத்தில் காட்டி இயக்குநர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை தந்திருக்கிறார். ********