“அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய தமிழக துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம், திரையுலகில் நடிகராக மக்கள் மனதில் இடம் பிடித்து பின்னர் அரசியலில் கட்சிப்பணி ஏற்று அதன் அடுத்த கட்டமாக தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர் ஆக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக அமைச்சரவையில் இடம் பிடித்து, இப்போது தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள தங்களுக்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் மனம் நிறைந்த மகிழ்ச்சியையும் மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். மேலும் எதிர்கால சமுதாயத்திற்கு ஒரு படிக்கல்லாக அவர்களை உயர்த்தி விடவும் மற்ற மாநிலைங்களை விட தமிழ்நாடு தனித் தன்மையுடன் உயரவும் அதன்மூலம் உலகம் நம்மை கவனித்து பின்பற்ற தங்களின் செயல்கள் சிறப்பாக அமைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றியும், மகிழ்ச்சியும்” என்று சங்கத்தின் சார்பாக தலைவி கவிதாவும் செயலாளர் கோடங்கி ஆபிராகாமும் தெரிவித்துள்ளார்கள்