Tribal Horse Entertainment சார்பில் நடிகர் கிருஷ்ணா வழங்கும், இயக்குநர் திரு இயக்கத்தில், நடிகை அஞ்சலி நடித்திருக்கும் “ஜான்சி” இணைய தொடர், Disney plus Hotstar தளத்தில் ப்ரத்யேகமாக வெளியாகிறது ! Disney plus Hotstar இந்திய நாட்டின் மிகச்சிறந்த OTT தளமாக அனைவரையும் ஈர்த்து வருகிறது. ரசிகர்கள் விரும்பும் சிறப்பான கதைகள், வித்தியாசாமான உள்ளடக்கம் நிறைந்த கதைகள், நாட்டின் முன்னணி OTT தளமான Disney plus Hotstar உடைய கட்டாய அளவுகோல்களில் ஒன்றாக மாறியுள்ளது, ஏனெனில் Disney plus Hotstar கவர்ச்சிமிக்க கதைகளை காட்டிலும், முற்றிலும் புதிய தளங்களில் சொல்லப்படும் கதைகளைத் தான் அதிகம் தேர்ந்தெடுக்கிறது. புகழ்பெற்ற OTT தளமாக இயங்கும் இத்தளம், அதன் சந்தாதாரர்களுக்கு பல்வேறு வகைகளின் அடிப்படையில், சிறப்பான உள்ளடக்கத்துடன், குறைபாடற்ற கதைகளை ரசிகர்களுக்கு தொடர்ந்து அளித்து வருகிறது, இதன் மூலம் ரசிகர்களுக்கு 100% முழுமையான பொழுதுபோக்கு அம்சத்தை அளித்து வருகிறது. அந்த வகையில் இயக்குநர் திரு இயக்கத்தில் அஞ்சலி முக்கிய கேரக்டரில் நடித்துள்ள “ஜான்சி” திரைப்படத்தை அடுத்ததாக ரசிகர்களுக்கு வழங்கவுள்ளது. Tribal Horse Entertainment சார்பில் நடிகர் கிருஷ்ணா இந்த இணைய தொடரை தயாரித்துள்ளார். Zee5 ஒரிஜினல் ‘High Priestess’ மூலம் OTT தளத்தில் தயாரிப்பாளராக அவர் தனது பயணத்தைத் தொடங்கினார், அதைத் தொடர்ந்து அல்லு அரவிந்தின் OTT தளமான AHA உடன் அடுத்த தொடரை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது, ’ஜான்சி’ மூலம் ஹாட்ரிக் வெற்றியை கொண்டாடவுள்ளார். இந்த இணைய தொடரில், நடிகை அஞ்சலி, முழு நீள அதிரடி வேடத்தில் தோன்றுவது இதுவே முதல் முறை. இந்த இணைய தொடர் ஒரு முழு நீள ஆக்சன் டிரமாவாக உருவாகியுள்ளது. இத்தொடர் பார்வையாளர்களை ஆரம்பம் முதல் இறுதி வரை இருக்கை நுனியில் வைத்திருக்கும், பரபர திரில் பயணமாக இருக்கும். இத்தொடரில் அஞ்சலி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, முமைத் கான், கல்யாண் மாஸ்டர், ராஜ் அர்ஜுன், சரண்யா R, சம்யுக்தா ஹோமத் ஆகியோருடன் மற்றும் பல முன்ணனி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். அரவிந்த் (பண்டிகை மற்றும் டிக்கிலோனா புகழ்) ஒளிப்பதிவு செய்துள்ளார், சண்டைக்காட்சிகளை யானிக் பென் அமைத்துள்ளார், அவர் தி ஃபேமிலி மேன் தொடரின் மூலம் உலகளவில் ரசிகர்களை, தனது அதிரடி சண்டை காட்சி அமைப்பின் மூலம் மிரள வைத்தவர் என்பது குறிப்பிடதக்கது.
மக்கள் தொடர்பு: டி.ஒன்.