தாய்நாடு திரும்பிய தமிழர்கள் சுய தொழில் தொடங்க கடனுதவி

கொரோனா பரவல் காலகட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து தங்களது வாழ்வாதாரத்தினை இழந்து தாய்நாடு திரும்பிய தமிழர்களை தொழில் முனைவோர்களாக்க தமிழ்நாடு அரசு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. வெளிநாடுகளில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து தாய்நாடு திரும்பிய வெளிநாடு வாழ் தமிழர்கள் சுயமாகத் தொழில் தொடங்கிட மானியத்துடன் கூடிய கடனுதவி பெற இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்பு படித்த முதல் தலைமுறை தொழில்; முனைவோருக்கு மானியத்துடன் கூடிய கடன் உதவியுடன் புதியதாகத் தொழில் தொடங்க புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டமானது தமிழக அரசின் மூலமாக நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது. இத்திட்டத்தின் மூலம் பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு அல்லது சான்றிதழ் படிப்பு படித்த, முதல் தலைமுறை தொழில் முனைவோர் சுயமாகத் தொழில் தொடங்கிட வசதி வாய்ப்புகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள விழைவோர் முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருத்தல் வேண்டும். குறைந்த பட்ச கல்வித் தகுதியாக ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு, பட்டயப்படிப்பு அல்லது சான்றிதழ் படிப்பு படித்திருத்தல் அவசியம். அயல்நாடுகளில் பணிபுரிந்து தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு 21 வயதுக்கு மேல் 55 வயது வரையும் இருக்கலாம்.

இத்திட்டத்தின் கீழ் ரூ.10 இலட்சம் முதல் ரூ.5 கோடி வரையிலான திட்ட மதிப்பீடுள்ள உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்களுக்கு வங்கிகள் மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் வழியாக தகுதியுடைய தொழில் முனைவோருக்கு கடன் வசதி ஏற்படுத்தி தரப்படும். திட்டமதிப்பீட்டின் நிலையான மூலதனத்தில் 25 சதவீதம் ரூ.50 இலட்சம் வரை மூலதன மானியமாகவும், வங்கிக்கடனை தவணை தவறாமல் முறையாக திருப்பிச் செலுத்துவோரை ஊக்குவிக்கும் பொருட்டு வங்கிக்கடனுக்கான வட்டியில் 3 சதவீதம் வட்டி மானியமாகவும் தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது. திட்ட மதிப்பீட்டில் பொதுப் பிரிவினர் 10 சதவீதமும் சிறப்புவகைப் பிரிவினர் 5 சதவீதமும் தங்களது பங்களிப்பாக செலுத்த வேண்டும். திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு நடப்பு நிதிஆண்டில் இச்சிறப்புத்திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் பணிபுரிந்து தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு குறைந்த பட்ச இலக்கீடாக 8 நபர்களுக்கு ரூ.64 இலட்சம் மானியம் வழங்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்விலிருந்தும், தொழில் முனைவோர் பயிற்சியிலிருந்தும் 30.09.2021 வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள தொழில் தொழில் முனைவோர் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி றறற.அளஅநழடெiநெ.வn.பழஎ.inஃநெநனள என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இத்திட்டம் தொடர்பான மேலும் விபரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை, திருச்சி-620001 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 0431-2460331, 2460823, 8925534027 என்ற தொலைபேசி எண்கள் வழியாகவோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.