2022 ஆம் ஆண்டில்  மொத்தம் 4,07,139 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்த நிலையில் 2023 ஆம் ஆண்டில் மார்ச் மாதம் முடிய 3 மாதங்களிலேயே 2,67,773 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளார்கள் – மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் தகவல்

சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலா வளாக கூட்டரங்கில் சுற்றுலாத்துறையின்மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த சுற்றுலா அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம்மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் இன்று(17.05.2023) நடைபெற்றது.

 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டை சுற்றுலாத்துறையில் இந்திய அளவில்முதன்மை மாநிலமாக உருவாக்கிடும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்திவருகின்றார்கள். தமிழ்நாடு முழுவதும் சுற்றுலாத்துறையின் கீழ் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில்மாவட்ட அளவில் சுற்றுலா அலுவலர்கள் பணியாற்றி வருகின்றார்கள். தமிழர்களின் பராம்பரியம் மிக்கபொங்கல் திருவிழா, கோடை விழா உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் மாவட்ட அளவில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதுபோன்ற பல்வேறு சுற்றுலா வளர்ச்சி நடவடிக்கைகள் மற்றும் சுற்றுலா வளர்ச்சித்திட்டபணிகள் குறித்து மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள்  சுற்றுலா அலுவலர்களிடம் ஆய்வுமேற்கொண்டார்.

இக்கூட்டத்தில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் பேசுகையில் தெரிவித்ததாவது,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நடவடிக்கைகளால் இந்தியாவிலேயே தமிழ்நாடு அதிகஅளவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முதன்மை சுற்றுலாத் தலமாக முன்னேறி உள்ளது. கொரோனாவிற்கு பிறகு 2021 ஆம் ஆண்டில் 57,622 ஆக இருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின்எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டில் 4,07,139 ஆக உயர்ந்து இந்த ஆண்டு 2023 ல் மார்ச் மாதம் வரை  3 மாத காலத்தில் மட்டும் 2,67,773 ஆக உயர்ந்துள்ளது.

இதே போன்று உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2021 ல் 11,53,36,719 ஆக இருந்து2022 ல் 21,85,84,846 ஆக உயர்ந்து, இந்த ஆண்டு 2023 ல் மார்ச் மாதம் வரை 3 மாத காலத்தில்6,64,90,154 என உயர்ந்துள்ளது. விடுமுறை மாதமான மே மாதத்தில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள்வருகை தருவார்கள்.

           ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு ஆகிய மலைப்பகுதி சுற்றுலா தலங்களுக்கு உள்நாட்டு மற்றும்வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை மிக அதிகமாக உள்ளது.

          தமிழ்நாட்டிற்கு ஆண்டு முழுவதும் அதிக சுற்றுலா பயணிகள் வருகை தரும் வண்ணம் மாண்புமிகுமுதலமைச்சர் அவர்கள் பல்வேறு சுற்றுலா வளர்ச்சித்திட்டப் பணிகளை அறிவித்து செயல்படுத்திவருகின்றார்கள். இந்த பணிகள் குறித்த காலத்திற்குள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும்வகையில் சுற்றுலா அலுவலர்கள் பணியாற்றிட வேண்டும். இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ள சுற்றுலாதிட்டப்பணிகள் அனைத்தும் டிசம்பர் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும் வகையில் விரைந்து பணிகளைமேற்கொள்ள வேண்டும். சுற்றுலா மேம்பட்டு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதால்சம்மந்தப்பட்ட சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பதுடன் அரசிற்குஅன்னிய செலாவணி வருவாயும், சுற்றுலா பயணிகளை நம்பி வாழும் உள்ளூர் மக்களுக்கு நிரந்தரவருவாயும் கிடைக்கும். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மருத்துவ சுற்றுலா மாநாட்டை துவக்கிவைத்தார்கள். இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு வருகை தரும் மருத்துவ சுற்றுலா பயணிகளின்எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

சுற்றுலாத்துறையின் மூலம் தமிழ்நாட்டின் சுற்றுலாத் தலங்கள் குறித்த மிகச் சிறந்த குறும்படங்கள்தயாரிக்கப்பட்டு சமூக ஊடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு, சுற்றுலாவைநெறிப்படுத்தி சேவையின் தரத்தை உயர்த்தவும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும்சாகச சுற்றுலா, கேரவன் சுற்றுலா, சுற்றுலா முகாம்கள் நடத்துபவர்கள், சுற்றுலா பயணிகளுக்கு தங்கள்வீடுகளிலேயே தங்கும் வசதி மற்றும் உணவு வழங்குதல் ஆகிய சேவைகளை வழங்கி வரும் சுற்றுலாசெயல்பாட்டாளர்களை சுற்றுலாத்துறையில் பதிவு செய்ய அறிவுறுத்தி பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளின் படி தங்கள் மாவட்டங்களில் சுற்றுலாசெயல்பாட்டாளர்கள் பதிவு செய்துள்ளார்களா என்பதை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பொதுமேலாளர் திருமதி.லி.பாரதிதேவி, திட்டபொறியாளர் திரு.பால் ஜெப ஞானதாஸ், சுற்றுலாத்துறை உதவி இயக்குநர்கள் திரு.ஜெ.ஜெயக்குமார், திரு.சு.சின்னசாமி, திரு..இராமன், கணக்கு அலுவலர் திரு.மு.ஜாகிர் உசேன் உள்பட உள்பட உதவிசெயற்பொறியாளர்கள் சுற்றுலாத்துறை உயர் அலுவலர்கள், சுற்றுலா அலுவலர்கள் கலந்து கொண்டனர்.