சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலா வளாக கூட்டரங்கில், தமிழ்நாடு சுற்றுலாவளர்ச்சிக்கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள், அமுதகம்உணவகங்கள், படகு குழாம்கள் குறித்த மேலாளர்கள் மற்றும் மண்டல மேலாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலாவளர்ச்சிக் கழக தலைவர் டாக்டர். க.மணிவாசன் இ.ஆ.ப., அவர்கள், சுற்றுலா இயக்குநர் மற்றும்தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப., அவர்கள்ஆகியோர் முன்னிலையில் (15.06.2023) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் பேசுகையில் தெரிவித்ததாவது,
தமிழ்நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கை அளித்த முத்தமிழறிஞர் அவர்கள் தமிழ்நாடு சுற்றுலாவளர்ச்சிக் கழகத்தை 1971 ஆம் ஆண்டில் உருவாக்கினார்கள். நாட்டின் அன்னிய செலாவணிவளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் சுற்றுலாத்துறையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ஓட்டல்தமிழ்நாடு என்ற பெயரிலான தங்கும் விடுதிகள், அமுதகம் என்ற பெயரிலான உணவு விடுதிகள், சுற்றுலாத்பயணத்திட்டங்கள், சுற்றுலா பேருந்து சேவைகள், படகு சேவைகள், தொலைநோக்கி இல்லங்கள் எனசுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த சுற்றுலாத்துறை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின்சீரிய முயற்சிகளால் உணவங்கள், தங்கும் விடுதிகள் புதுப்பிக்கப்பட்டு, புதுப்பொலிவு பெற்றதன்காரணமாக விரைவான வளர்ச்சியை பெற்று இந்தியாவிலேயே சுற்றுலாத்துறையில் முதன்மை மாநிலமாகவிளங்கி வருகின்றது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தமிழ்நாடு முழுவதும் 28 ஓட்டல்களை நேரடியாக நிருவகித்துவருகின்றது. இவற்றில் 473 குளிரூட்டப்பட்ட அறைகளும், 199 சாதாரண அறைகளும், மலைப்பகுதிசுற்றுலாத்தளங்களில் 172 அறைகளும் என மொத்தம் 845 அறைகள் உள்ளன. ஓட்டல் தமிழ்நாடு தங்கும்விடுதிகள் மற்றும் உணவகங்கள் பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் நகரின் மையப்பகுதிகளில்செயல்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக தங்கும் விடுதிகளில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள்ஆகியோருக்கு கட்டண சலுகைகள் அளிக்கப்படுகின்றது. மேலும் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்குமொத்தமாக அனைத்து அறைகளையும் பதிவு செய்பவர்களுக்கும், தொடர்ந்து 3 நாட்களுக்கு மேல்தங்குபவர்கள், வெவ்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகளில்தொடர்ந்து 3 நாட்களாக தங்குபவர்களுக்கு என, பல வகையான கட்டண சலுகைகள் வழங்கப்பட்டுவருகின்றன. மேலும் சுற்றுலாப் பயணிகளுக்கு நினைவில் நீங்காத அனுபவத்தை தரும் வகையில், சாகச படகுசவாரி மற்றும் நீர் விளையாட்டுகளுடன் கூடிய படகு குழாம்களை முட்டுக்காடு, முதலியார் குப்பம், உதகமண்டலம், பைக்காரா, கொடைக்கானல், ஏற்காடு, பிச்சாவரம், குற்றாலம் மற்றும் வாலாங்குளம் ஏரிஉள்ளிட்ட 9 இடங்களில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் படகு குழாம்களை இயக்கி வருகிறது. வாட்டர் ஸ்கூட்டர்கள், மோட்டர் படகுகள், விரைவு படகுகள், மிதிப்படகுகள், துடுப்பு படகுகள், வாட்டர்சைக்கிள்கள், குழந்தைகளுக்கான மிதிப்படகுகள் என மொத்தம் 588 படகுகள் சுற்றுலா பயணிகளுக்குநீங்காத அனுபவங்களை அளித்து வருகின்றன. 2023 ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் படகு குழாம்கள்மூலமாக இயக்கப்படும் படகுகளில் மொத்தம் 13,11,157 சுற்றுலா பயணிகள் படகு பயணம் மேற்கொண்டுநீங்காத அனுபவங்களை பெற்றனர். இவற்றில் மலைப்பகுதி சுற்றுலா தலங்களான ஊட்டியில் 6,81,140 சுற்றுலா பயணிகளும், கொடைக்கானலில் 2,29,840 சுற்றுலா பயணிகளும், ஏற்காட்டில் 1,57,753 சுற்றுலா பயணிகளும் படகு பயணம் மேற்கொண்டனர். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் மிகவும் சிறப்பான முன்னேற்றத்தை அடைய மேலாளர்கள், மண்டல மேலாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள், அமுதகம்உணவு விடுதிகள், படகு குழாம்கள் மூலமாக அதிக லாபம் ஈட்டும் வகையில், பொதுமக்கள் அதிகஅளவில் வருகை தருவதற்கான முயற்சிகளை ஆர்வத்தோடு மேற்கொள்ள வேண்டும். மேலும் தங்கும்விடுதி அறைகளை சிறப்பாக பராமரித்தல், பொதுமக்களை ஈர்க்கும் வகையான உணவு வகைகளைதயாரித்து வழங்குதல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும் என்று மாண்புமிகு சுற்றுலாத்துறைஅமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பொதுமேலாளர் திருமதி.லி.பாரதிதேவி, முதன்மைகணக்கு அலுவலர் திரு.எஸ்.கணேஷ் கார்த்திகேயன், உதவி தலைமை மேலாளர் (ஓட்டல்கள்) திரு.சௌ.வெங்கடேசன், திட்ட பொறியாளர் திரு.பால் ஜெப ஞானதாஸ் உள்பட மண்டல மேலாளர்கள், மேலாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.