செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக படகு குழாம் வளாகத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் பிரம்மாண்டமான இரண்டு அடுக்கு மிதக்கும்உணவக கப்பலின் கட்டுமான பணியினை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன்அவர்கள் இன்று (29.06.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிகழகத்தின் மூலம் படகு இல்லம் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த படகு இல்லத்தில் பொதுமக்கள் சாகசபயணம் மேற்கொள்ளும் வகையில் மிதவை படகுகள், இயந்திர படகுகள், வேகமான இயந்திர படகுகள்இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தர வைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த படகுஇல்லத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் பிரம்மாண்டமான இரண்டுஅடுக்கு மிதக்கும் உணவக கப்பல் பயணம் தொடங்கப்பட உள்ளது. இத்திட்டம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் கொச்சியைச் சேர்ந்த கிராண்ட்யூனர் மரைன்இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலமாக தனியார் மற்றும் பொதுபங்களிப்பு திட்டத்தின் மூலம்செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூபாய் 5.00 கோடியாகும். தமிழ்நாட்டில்முதல் முறையாக மிதவை உணவக கப்பல் (Floating Restaurant) அமைக்கப்படுகிறது. இந்த மிதக்கும் உணவகத்தின் தரைத்தளம் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் அமைக்கப்படஉள்ளது. முதல் தளம் திறந்தவெளி தளமாகவும், சுற்றுலா பயணிகள் மேல் தளத்தில் அமர்ந்து உணவுஉண்டு பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கப்பலில் சமயலறை, சேமிப்பு அறை, கழிவறை மற்றும் இயந்திர அறை (மோட்டார் இன்ஜின்) அமைக்கப்பட உள்ளது. இந்த மிதவை கப்பல் 60 குதிரை சக்தி திறனுடைய இயந்திரம் மூலம்இயக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இரண்டு அடுக்கு மிதவை உணவக கப்பலின் நீளம்125 அடியும், அகலம் 25 அடியும் கொண்டதாக உருவாக்கப்பட்டு வருகின்றது. மிதவை உணவகக் கப்பல் அமைக்கும் பணி 24.03.2023 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது உணவகக் கப்பல் அமைக்கும் பணியின் கட்டுமானத்தின் முக்கியமானதான அடிப்பகுதி, மற்றும்படகு உருவத்தை வழங்கும் அடிப்படை கட்டுமான பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இதனைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் தரைத்தளம் மற்றும் முதல்தளம் அமைக்கும் பணிகள்நடைபெற உள்ளன. ஆய்வு செய்த பின்னர் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம்தெரிவித்ததாவது,
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டினை அனைத்து துறைகளிலும் இந்தியாவிலேயேமுதன்மை மாநிலமாக உருவாக்கி வருகின்றார்கள். மாண்புமிகு பிரதமர் அவர்கள் இந்தியாவின்முன்னேற்றத்தில் தமிழ்நாடு இன்ஜினாக உள்ளது என்று பாராட்டியுள்ளார். தமிழ்நாடு சுற்றுலாத்துறையில்முதன்மை மாநிலாமாக விளங்குகின்றது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டில்9 இடங்களில் படகு குழாம்கள் செயல்பட்டு வருகின்றன. செங்கல்பட்டு மாவட்டத்திற்கு 2022 ஆம் ஆண்டில் 74,19,516 சுற்றுலா பயணிகள் வருகை தந்த நிலையில் இந்த ஆண்டு 2023 மே மாதம் வரையிலான 5 மாதத்தில்மட்டும் 58,74,010 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளார்கள். செங்கல்பட்டு மாவட்டத்தில் முக்கியசுற்றுலா தலமாக முட்டுக்காடு படகு குழாம் விளங்குகின்றது. மிதவை உணவக கப்பல் பணிகள்முடிவடைந்தவுடன் அதிக சுற்றுலா பயணிகள் வரும் வாய்ப்பு உருவாகியுள்ளது. சென்னை மக்களின்முக்கிய சுற்றுலா தலங்களாக முட்டுக்காடு மற்றும் முதலியார்குப்பம் படகுகுழாம்கள் விளங்குகின்றன. தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக இத்தகைய மிதவை உணவக கப்பல் இங்கு அமைக்கப்படுகின்றது. இதேபோன்று கோவை வாலங்குளம், ஊட்டி உள்பட 4 இடங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் ஓட்டல் தமிழ்நாடு அமுதகம்உணவகங்களின் மூலமாக சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த சுவையான உணவுவகைகளைவழங்குவதற்காக, சமையல் கலை வல்லுநர் திரு.தாமு அவர்கள் தலைமையில் அமுதகம் உணவகங்களின்உணவு தயாரிப்பு பணியாளர்கள் மற்றும் மேலாளர்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இவ்வாறு மாண்புமிகு சுற்றுாலாத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் திரு.இதயவர்மன் அவர்கள், முட்டுக்காடு ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.சங்கீதாமயில்வாகனன் அவர்கள், மாவட்ட வருவாய்அலுவலர் மற்றும் பொது மேலாளர் திருமதி.லி.பாரதி தேவி அவர்கள், கிராண்ட்யூனர் மரைன்இன்டர்நேஷ்னல் நிறுவனத்தினர் உள்பட அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.