சுற்றுலா தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆலோசனை

இவ்வாண்டு இந்தியாவில் முதல் முறையாக நடைபெறும்  44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜீலை 28 முதல் ஆகஸ்ட் 10, 2022 வரை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இவ்வமயம் உலகெங்கிலும் உள்ளபல்வேறு நாடுகளிலிருந்து செஸ் விளையாட்டு வீரர்கள்மற்றும் சுற்றுலா பயணிகள் சென்னைக்கு வருகைபுரிகின்றனர். இவர்களுக்கு சிறப்பான சேவையைஅளிக்கும் நோக்கில் சென்னை மற்றும் மாமல்லபுரத்தில்உள்ள 50 சுற்றுலா வழிகாட்டிகளுக்கு மூன்று நாட்கள் 27 ஜீன் முதல் 29 ஜீன் 2022 வரை திறன் வளர்ப்பு மற்றும்கள ஆய்வு பயிற்சி வழங்கப்பட்டது.  

இதனை தொடர்ந்து 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு தமிழகத்திற்கு வருகைபுரியும் 187 நாடுகளை சேர்ந்த செஸ் வீரர்கள் மற்றும் சுற்றுலாபயணிகளுக்கென பிரத்யேகமாக சுற்றுலா நட்பு வாகனதிட்டம் (Tourist Friendly Auto) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச்சுற்றுலா நட்புவாகனங்கள் வெளிநாடுகளிலிருந்து வரும் செஸ்விளையாட்டு வீரர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளைகவரும் வகையில் வண்ணமயமாக ஸ்டிக்கரிங்ட்டப்பட்டு பிராண்டிங் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முதற்கட்டமாக 44வது செஸ்ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறும் மாமல்லபுரத்தைசுற்றிலும் 25 ஆட்டோக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அடுத்தகட்டமாக சுற்றுலா நட்பு வாகனம் என்னும் திட்டம் 2008-ல் மிகசிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்தினை மேம்படுத்தும் விதமாக      மாமல்லபுரத்தில் உள்ள 25 ஆட்டோ ஓட்டுநர்களின் விவரங்கள் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மூலமாக சரிபார்க்கப்பட்டு அவர்களுக்கு சுற்றுலாதலங்கள் குறித்த விவரங்களை வழங்குவதற்கும், கனிவாகவும் மரியாதையுடனும் சுற்றுலாபயணிகளுடன் பழகுவதற்கும் ஒரு புத்தாக்கபயிற்சி மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று (26.07.2022) அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரிவளாகத்தில் துவக்கிவைக்கப்பட்டது.  இதில் தமிழகஅரசின் தலைமைச் செயலாளர் அவர்கள் கலந்துகொண்டு சுற்றுலா நட்புவாகன ஓட்டுநர்களுக்கு சுற்றுலாவின் முக்கியத்துவத்தையும், சுற்றுலாபயணிகளை கைகூப்பி இன்முகத்துடன் வரவேற்கவும், கனிவாகவும் மரியாதையுடனும் நடத்தவேண்டும் எனவும் கூறினார்கள்.  

மேற்கூறிய பழக்கவழக்கங்களை பின்பற்றும் போது சுற்றுலா பயணிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக உள்ளதாக அமையும் எனவும், மேலும. சுற்றுலாப்பயணிகள் அதிக காலம் சுற்றுலா தலங்களில்தங்கி பிற இடங்களை பார்வையிட ஏதுவாக அமையும்எனவும், இதனால் சுற்றுலா தொழில் வளர்ச்சிஅடைவதுடன், அதைசார்ந்த பல்வேறு தொழில்களும்வளர்ச்சியடையவும், மாநிலத்தின் பொருளாதாரம்மேம்பட வழிவகுக்கிறது. சுற்றுலா நட்பு வாகன ஓட்டுநர்களை சுற்றுலா தூதுவர்கள் என அழைக்கலாம்எனவும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

  1. இந்நிகழ்வின்போது சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை, அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர்.சந்தரமோகன், B. இ.ஆ.ப., சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மைஇயக்குநர் சுற்றுலா தொடர்பாக ஆட்டோ ஓட்டுனர்களின் ஆலோசனைசந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., மற்றும்அண்ணா மேலாண்மை பணியாளர் கல்லூரிஅலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.