சென்னை தரமணியில் செயல்பட்டு வரும் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில்தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஓட்டல் தமிழ்நாடு அமுதகம் உணவகங்களில் பணிபுரியும்சமையலர்களுக்கு தலைசிறந்த உணவுக் கலை வல்லுநர்கள் கொண்டு பயிற்சியளிக்கும் முகாமினைமாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் இன்று (7.8.2023) தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகமேலாண்மை இயக்குநர் திரு.சந்தீப் நந்தூரி.இ.ஆ.ப., அவர்கள் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் பேசுகையில்தெரிவித்ததாவது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நடவடிக்கைகளால் தமிழ்நாடு இந்தியாவிலேயேசுற்றுலாத்துறையில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தமிழ்நாடுமுழுவதும் 28 ஓட்டல்களை நேரடியாக நிருவகித்து வருகின்றது. இவற்றில் 473 குளிரூட்டப்பட்ட அறைகளும், 199 சாதாரண அறைகளும், மலைப்பகுதி சுற்றுலாத்தளங்களில் 172 அறைகளும் என மொத்தம் 845 அறைகள்உள்ளன.
சுற்றுலாப் பயணிகளுக்கு நினைவில் நீங்காத அனுபவத்தை தரும் வகையில், முட்டுக்காடு, முதலியார் குப்பம், உதகமண்டலம், பைக்காரா, கொடைக்கானல், ஏற்காடு, பிச்சாவரம், குற்றாலம் மற்றும் வாலாங்குளம் ஏரிஉள்ளிட்ட 9 இடங்களில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் படகு குழாம்களை இயக்கி வருகிறது. வாட்டர்ஸ்கூட்டர்கள், மோட்டர் படகுகள், விரைவு படகுகள், மிதிப்படகுகள், துடுப்பு படகுகள், வாட்டர் சைக்கிள்கள், குழந்தைகளுக்கான மிதிப்படகுகள் என மொத்தம் 588 படகுகள் சுற்றுலா பயணிகளுக்கு நீங்காதஅனுபவங்களை அளித்து வருகின்றன. மேலும் தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் சமூக வலைதளங்கள் மூலமாகதமிழ்நாட்டின் சுற்றுலாத்தளங்களின் சிறப்புகள் குறித்த காணொலி காட்சிகள் உலகம் முழுவதும் உள்ளசுற்றுலாப்பயணிகளின் கவனத்தை பெற்று வருகின்றன. இதன் காரணமாக வெளிமாநிலங்கள் மற்றும்வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தந்து கொண்டு இருக்கிறார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஹோட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகளில் செயல்பட்டுவரும் உணவகங்களை மக்கள் எளிதில் அடையாளம் காணும் வண்ணம் தமிழ்நாடு முழுவதும் ஒரே பெயராகஅமுதகம் உணவகம் என்று பெயர் சூட்டியுள்ளார். இதன் காரணமாக பொதுமக்கள் மத்தியில் அமுததம் என்றபெயர் புகழ்பெற்று வருகின்றது.
சுற்றுலா பயணிகளுக்கு சுவையான மற்றும் தற்போதைய புதுமையான உணவு வகைகள் வழங்கும்வகையில், அமுதகம் உணவகங்களில் பணி புரியும் சமையலர்களுக்கு சிறந்த சமையல் கலை வல்லுனர்களைகொண்டு இன்று முதல் 12.8.2023 வரை பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
இங்கு பயிற்சி பெறும் சமையலர்கள் தங்கள் திறமைகளை மெருகூட்டி கொண்டு தாங்கள் பணி புரியும்அமுதகம் உணவகத்தில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில், சுவையான விதவிதமான உணவு வகைகளைசுற்றுலா பயணிகளின் விருப்பத்திற்கு ஏற்ப தயார் செய்து வழங்க வேண்டும். இவ்வாறு மாண்புமிகுசுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் புகழ்பெற்ற சமையல் கலை வல்லுநர் செப்.தாமு, இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல்மேனேஜ்மென்ட் கல்லூரியின் முதல்வர் திருமதி.ஆர்.பரிமளா, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் உதவிதலைமை மேலாளர் திரு.எஸ்.வெங்கடேசன், மண்டல மேலாளர் திரு.ஆர்.வெங்கடேசன், உதவி பொதுமேலாளர் (உணவு மற்றும் பானங்கள்) திரு.ஜெயராமன் உள்பட தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகஅலுவலர்கள், சமையலர்கள் கலந்து கொண்டனர்.