சுற்றுலா விருதுகளை பெற அதிக அளவில் சுற்றுலா செயல்பாட்டாளர்கள் பங்கேற்க செய்யும் வகையில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 27.08.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது – சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்

சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலா வளாக கூட்டரங்கில் சுற்றுலாத்துறையின் மூலம்மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த சுற்றுலா அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் (17.08.2023) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு சுற்றுலா வளர்ச்சி நடவடிக்கைகள் மற்றும் சுற்றுலா வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலாவளர்ச்சிக் கழக தலைவர் டாக்டர். .மணிவாசன் ..., அவர்கள், சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடுசுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் திரு.சந்தீப் நந்தூரி ..., அவர்கள் ஆகியோர்முன்னிலையில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் சுற்றுலா அலுவலர்களிடம் ஆய்வுமேற்கொண்டார்.

இக்கூட்டத்தில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் பேசுகையில் தெரிவித்ததாவது,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நடவடிக்கைகளால் இந்தியாவிலேயே தமிழ்நாடு அதிகஅளவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முதன்மை சுற்றுலாத் தலமாக முன்னேறி உள்ளது.

 மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி சுற்றுலாவை மேம்படுத்த சுற்றுலா வளர்ச்சிக்கு காரணமாக உள்ள நபர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை 2022 ஆம் ஆண்டு முதல்உலக சுற்றுலா  தின நிகழ்ச்சியில் சுற்றுலா விருதுகளை அறிமுகப்படுத்தி வழங்கி வருகிறது.

 தமிழ்நாட்டிற்கான சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்தபயண பங்குதாரர், சிறந்த  விமான பங்குதாரர், சிறந்த தங்குமிடம், சிறந்த உணவகம், தமிழ்நாடு சுற்றுலாவளர்ச்சிக் கழகத்தின் சிறந்த உணவகம், தங்குமிடம் மற்றும் படகு இல்லம், சுற்றுலா ஊக்குவிப்பிற்கான சிறந்தமாவட்டம், சுத்தமான சுற்றுலாத்தலம், பல்வேறு சுற்றுலாப் பிரிவுகளின் சிறந்த ஏற்பாட்டாளர், சிறந்த சாகசமற்றும் தங்கும் முகாம்கள் சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த MICE சுற்றுலா அமைப்பாளர், சமூக ஊடகங்களில்அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்துபவர், சிறந்த சுற்றுலா வழிகாட்டி, தமிழ்நாட்டிற்கான சிறந்த சுற்றுலா விளம்பரம், சுற்றுலாவினை பிரபலபடுத்தும் வகையில் சிறப்பாக விளம்பரபடுத்துதல், சுற்றுலா மற்றும் விருந்தோம்பலில் சிறந்த கல்வி நிறுவனம் என 17 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் www.tntourismawards.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம்செய்து, பூர்த்தி செய்து 15.08.2023-க்குள் சமர்ப்பிக்க அறிவிக்கப்பட்டது. சுற்றுலா விருதுகளை பெற மேலும்அதிக அளவில் சுற்றுலா செயல்பாட்டாளர்கள் பங்கேற்க செய்யும் வகையில் விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் 27.08.2023 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது அனைத்து மாவட்டங்களிலும் அதிக அளவில் சுற்றுலா செயல்பாட்டாளர்கள் இந்த விருதுகளுக்கு விண்ணப்பிக்க சுற்றுலா அலுவலர்கள் தங்கள் மாவட்டங்களில்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பொதுமேலாளர் திருமதி..கமலா உள்பட சுற்றுலாத்துறை உதவி இயக்குநர்கள், சுற்றுலா அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.