சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலா வளாக கூட்டரங்கில் சுற்றுலாத்துறையின் மூலம்மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகஅலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள்தலைமையில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் மற்றும் தமிழ்நாடுசுற்றுலா வளர்ச்சிக் கழக தலைவர் டாக்டர். க.மணிவாசன் இ.ஆ.ப., அவர்கள், சுற்றுலா இயக்குநர் மற்றும்தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குநர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர்முன்னிலையில் இன்று (05.09.2023) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் பேசுகையில் தெரிவித்ததாவது,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நடவடிக்கைகளால் இந்தியாவிலேயே தமிழ்நாடு அதிகஅளவில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முதன்மை சுற்றுலாத் மையமாகமுன்னேறி உள்ளது. தமிழ்நாட்டிற்கு ஆண்டு முழுவதும் அதிக சுற்றுலா பயணிகள் வருகை தரும் வகையில்மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு சுற்றுலா வளர்ச்சித்திட்டப் பணிகளை அறிவித்து செயல்படுத்திவருகின்றார்கள். சுற்றுலா பயணிகள் மற்றும் இளைஞர்களுக்கு சாகச அனுபவங்களை தரும் வகையில் ஊட்டி, தருமபுரி மாவட்டம் வத்தல்மலை, ஏலகிரி மலை உள்ளிட்ட பகுதிகளில் இளைய தலைமுறையினரை உற்சாகபடுத்தும் வகையில் சாகச சுற்றுலா மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பழம்பெருமைவாய்ந்த துறைமுக நகரான பூம்புகார் (காவிரிபூம்பட்டினம் பழைய பெயர்) நகரத்தில் பூம்புகார்கலைக்கூடத்தில் புனரமைப்பு பணிகள் மற்றும் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஓகேனக்கல், பிச்சாவரம் ஆகிய சுற்றுலாத்தலங்களில் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு வசதிகளைஏற்படுத்தும் வகையில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருவாரூர் மாவட்டம்மன்னார்குடி அரித்ரா நதி தெப்பக்குளம், ஈரோடு மாவட்டம் அந்தியூர் பெரிய ஏரி ஆகிய இடங்களில் படகுகுழாம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முட்டுக்காடு படகு குழாமில் 200 நபர்கள் அமரும்வகையிலான இரண்டு அடுக்குகள் கொண்ட மிதவை உணவக கப்பல் அமைக்கும் பணியில் அடிப்படைகட்டமைப்பு பணி முடிவடைந்து, உணவகம் அமைக்கும் பணி விரைந்து நடைபெற்று வருகின்றது. தமிழ்நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில் படகுகுழாம்கள் அமைத்தல் உள்ளிட்ட சுற்றுலா மேம்பாட்டுத் திட்டப்பணிகள்அறிவிக்கப்பட்டு அதனை செயல்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
சுற்றுலா தலங்களில் வளர்ச்சித்திட்டப்பணிகளை மேற்கொள்ளும்போது வாகன நிறுத்தும் இடம், சுகாதார வளாகம் அமைத்தல் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பணிகள் குறித்த காலத்திற்குள்முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் வகையில் சுற்றுலா அலுவலர்கள் பணியாற்றிட வேண்டும். அறிவிக்கப்பட்டுள்ள சுற்றுலா திட்டப்பணிகள் அனைத்தும் டிசம்பர் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும்வகையில் விரைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். சுற்றுலா மேம்பாட்டுத் திட்டப்பணிகள் அனைத்தும்முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும்போது, தமிழ்நாட்டிற்கு வருகின்ற சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கைபலமடங்கு அதிகரித்து, உள்ளூர் மக்களின் பொருளாதாரம் மேம்பாடு அடையும் என்று மாண்புமிகுசுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பொதுமேலாளர் திருமதி.இ.கமலா, தமிழ்நாடு சுற்றுலாவளர்ச்சிக்கழக திட்ட பொறியாளர், உதவி செயற்பொறியாளர்கள் சுற்றுலாத்துறை உயர் அலுவலர்கள் மற்றும்தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக அலுவலர்கள் கலந்து கொண்டனர்