கலைஞர் நூற்றாண்டு விழாவினையொட்டி சென்னை தீவுத்திடலில் உணவு பாதுகாப்புத்துறை மற்றும் தமிழ்நாடுசுற்றுலா வளர்ச்சிக் கழகம் இணைந்து நடத்தும் சிங்காரச் சென்னையில் உணவுத்திருவிழா – 2023 கண்காட்சியை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாண்புமிகு இந்துசமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி.கே.சேகர்பாபு அவர்கள் ஆகியோர் இன்று (16.09.2023) திறந்து வைத்து பார்வையிட்டார்கள். இந்நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி மாண்புமிகு மேயர்திருமதி. ஆர். பிரியா அவர்கள், சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மைஇயக்குநர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். தொடர்ந்து கலைஞர்நூற்றாண்டு விழா உணவுத்திருவிழா – 2023 ஐ, யொட்டி மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர்திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் ஆகியோர் குத்துவிளக்கேற்றி கலைநிகழ்ச்சிகளை துவக்கி வைத்து, உணவுஅரங்கங்களை பார்வையிட்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில்தெரிவித்ததாவது,
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக திகழும் வகையில்பணிகளை மேற்கொண்டு வருகின்றார். தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் உடல் ஆரோக்கியமாகஇருப்பதை உறுதி செய்வதற்காக இந்தியாவிலேயே முதன் முறையாக காலை உணவுத் திட்டத்தைசெயல்படுத்தி வருகின்றார்கள். தமிழர்களின் கலாச்சாரம் உணவே மருந்து, மருந்தே உணவு என்பதாகும். கிராமப்புறங்களில் கடைபிடிக்கப்பட்டு வந்த பழைய உணவுப்பழக்கங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்ததுஎன்பதனால், நகர்புறங்களிலும் அவை தற்போது பொதுமக்களால் விரும்பி கடைபிடிக்கப்படுகின்றன. அதனடிப்படையில் தமிழ்நாடு அரசு விவசாயிகள் சிறுதானிய உற்பத்தி செய்ய ஊக்கம் அளித்து வருகின்றது. சிறுதானியங்கள் கொண்டு செய்யும் உணவு வகைகள் குறித்து கண்காட்சிகள் நடத்தப்பட்டு, அவற்றின் பலன்குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கலைஞர் நூற்றாண்டினையொட்டி நடத்தப்படும் இந்த உணவுத்திருவிழாவில் சிறுதானியங்களை கொண்டுவிதவிதமான உணவுப்பொருட்களும், குழந்தைகளுக்கு பிடித்தமான திண்பண்டங்களும்காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த உணவுத்திருவிழா இன்று 16.09.2023 தொடங்கி 18.09.2023 வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த உணவுத்திருவிழாவிற்கு வருகை தந்து பயன்பெற வேண்டும்என்று மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்,
இந்நிகழ்ச்சியில் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர்.பெ.சதீஸ்குமார், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பொதுமேலாளர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இ.கமலாஉள்பட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலர்கள், பல்வேறுஅரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
குறிப்பு ஆரோக்கியமான, பாதுகாப்பான, செறிவூட்டப்பட்ட, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவினை நாம் எடுத்துக்கொள்வதன் மூலமும், முறையான உடற்பயிற்சி மூலமும் நலமான வாழ்வினை மேற்கொள்ள விழிப்புணர்வுஏற்படுத்தும் வகையில், உணவு பாதுகாப்புத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பாகநடத்தப்படும் சிங்கார சென்னையில் உணவுத் திருவிழா-2023 கண்காட்சியில் 147- க்கும் மேற்பட்டகண்காட்சி அரங்குகளை அமைத்து உணவு தொடர்பான அறிவியல் சார்ந்த பல விவரங்கள் நேரடியாகபொதுமக்களுக்கு கொண்டு செல்லப்பட உள்ளன.
நுண்ணூட்டச் சத்துக்கள் நிறைந்த சிறு தானியங்களான தினை, கேழ்வரகு, சாமை, குதிரைவாலி, வரகு, கம்பு, சோளம் ஆகியவற்றை உட்கொள்ளும் பழக்க வழக்கத்தை குழந்தைகளிடத்தில் ஊக்குவிப்பதற்காகவும், தரமான பாதுகாப்பான, செறிவூட்டப்பட்ட உணவினை உட்கொள்வது குறித்து உணவு வணிகர்கள் மற்றும்பொது மக்களுக்கு உணவு பாதுகாப்பு துறையின் சார்பாக விழிப்புணர்வு வழங்க ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையத்தால் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட Eat Right Challenge – போட்டியில் இந்திய அளவில் தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோயம்புத்தூர், திண்டுக்கல், மதுரை, பெரம்பலூர், காஞ்சிபுரம், சேலம், திருவள்ளூர், திருப்பூர், சிவகங்கை, நாமக்கல், திருச்சிராப்பள்ளி, வேலூர் ஆகிய 13 மாவட்டங்கள் சிறந்த செயல்பாட்டிற்கான விருதினை பெற்றுள்ளன. இப்போட்டியில், கோயம்புத்தூர் மாவட்டம் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களிடம் துரித உணவுகளை அதிகமாக விரும்பி உண்ணும் பழக்கம் அதிகரித்து வருகிறது. மேலும், பாதுகாப்பற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவுகளாலும், தரமற்ற உணவை உண்பது மட்டுமல்லாமல்உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வு குறைந்து விட்டதாலும், சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு, வயிற்றுபுண், வயிற்றுவலி உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்புள்ளது.
கண்காட்சியில் நடமாடும் உணவு பகுப்பாய்வு கூடம் மூலம் உணவுப் பொருள்களின் தரம் குறித்து பொதுமக்கள்அறிந்து கொள்ளும் வகையில், உணவுப்பொருட்கள் உடனடியாக ஆய்வு செய்து அறிக்கை வழங்கப்பட்டுவிழிப்புணர்வு வழங்கப்படுகின்றது.