தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் படகு குழாம்களில் 2023 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 5 மாதங்களில் மொத்தம் 24,17,436 சுற்றுலா பயணிகள் படகு சவாரி மேற்கொண்டு நெஞ்சம் நிறைந்த, நீங்காத அனுபவங்களை பெற்றனர் –அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல்.

சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலா வளாக கூட்டரங்கில், சுற்றுலாத்துறையின் மூலம்மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் மூலம் நடத்தப்பட்டுவரும் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள், அமுதகம் உணவகங்கள், படகு குழாம்கள் குறித்த சுற்றுலாத்துறைஅலுவலர்கள், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாளர்கள் மற்றும் மண்டல மேலாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக தலைவர் டாக்டர். .மணிவாசன் ..., அவர்கள், சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலாவளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் திரு.சந்தீப் நந்தூரி ..., அவர்கள் ஆகியோர் முன்னிலையில்இன்று (21.09.2023) நடைபெற்றது.

 கடந்த 16.9.2023 அன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற தென்னிந்திய சமையல்காரர்கள் சங்கத்தினர் (SICA) நடத்திய சமையல் போட்டியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் ஓட்டல் தமிழ்நாடு சமையலர்கள் 1 தங்கப்பதக்கம் மற்றும் 3 வெள்ளி பதக்கங்களை வென்றனர்.இதையொட்டி, தங்களுக்கு வழங்கப்பட்ட பதக்கங்களை மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர்திரு.கா.ராமச்சந்திரன் அவர்களிடம் இன்று (21.09.2023) காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.

இக்கூட்டத்தில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் பேசுகையில் தெரிவித்ததாவது, தமிழ்நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கை அளித்த முத்தமிழறிஞர் அவர்கள் தமிழ்நாடு சுற்றுலாவளர்ச்சிக் கழகத்தை 1971 ஆம் ஆண்டில் உருவாக்கினார்கள். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ஓட்டல்தமிழ்நாடு தங்கும் விடுதிகள், அமுதகம் உணவு விடுதிகள், சுற்றுலா பயணத்திட்டங்கள், சுற்றுலா பேருந்துசேவைகள், படகு சேவைகள், தொலைநோக்கி இல்லங்கள் என பல்வேறு சுற்றுலா சேவைகளை வழங்கிவருகின்றது.
  மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி சுற்றுலாவை மேம்படுத்த சுற்றுலா வளர்ச்சிக்குகாரணமாக உள்ள நபர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை 2022 ஆம் ஆண்டு முதல்உலக சுற்றுலா  தின நிகழ்ச்சியில் சுற்றுலா விருதுகளை அறிமுகப்படுத்தி வழங்கி வருகிறது. இந்த ஆண்டுதமிழ்நாட்டிற்கான சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த சுற்றுலா வழிகாட்டி, சுற்றுலா மற்றும்விருந்தோம்பலில் சிறந்த கல்வி நிறுவனம் என மொத்தம் 17 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன.  தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தமிழ்நாடு முழுவதும் 28 ஓட்டல்களை நேரடியாக நிருவகித்துவருகின்றது. இவற்றில் 473 குளிரூட்டப்பட்ட அறைகளும், 199 சாதாரண அறைகளும், மலைப்பகுதி சுற்றுலாத்தளங்களில் 172 அறைகளும் என மொத்தம் 845 அறைகள் உள்ளன.

  மேலும் சுற்றுலாப் பயணிகளுக்கு நினைவில் நீங்காத அனுபவத்தை தரும் வகையில், சாகச படகுசவாரி மற்றும் நீர் விளையாட்டுகளுடன் கூடிய படகு குழாம்களை முட்டுக்காடு, முதலியார் குப்பம், உதகமண்டலம், பைக்காரா, கொடைக்கானல், ஏற்காடு, பிச்சாவரம், குற்றாலம் மற்றும் வாலாங்குளம் ஏரிஉள்ளிட்ட 9 இடங்களில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் படகு குழாம்களை இயக்கி வருகிறது. வாட்டர்ஸ்கூட்டர்கள், மோட்டர் படகுகள், விரைவு படகுகள், மிதிப்படகுகள், துடுப்பு படகுகள், வாட்டர் சைக்கிள்கள், குழந்தைகளுக்கான மிதிப்படகுகள் என மொத்தம் 588 படகுகள் சுற்றுலா பயணிகளுக்கு நீங்காதஅனுபவங்களை அளித்து வருகின்றன.

2022 – 2023 ஆம் நிதியாண்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் படகு குழாம்கள் மூலமாகஇயக்கப்படும் படகுகளில் மொத்தம் 42,22,945 சுற்றுலா பயணிகள் படகு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

2023 – 2024 ஆம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 5 மாதங்களில் மட்டும் மொத்தம் 24,17,436 சுற்றுலா பயணிகள் படகு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

   தமிழ்நாடு சுற்றுலாத்துறை மேலும் வளர்ச்சியடைய சுற்றுலா வளர்ச்சித்திட்டப் பணிகள் விரைந்துமுடிவடையும் வகையில் அலுவலர்கள் தங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாண்புமிகுசுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில்  மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பொதுமேலாளர் திருமதி..கமலா உள்பட சுற்றுலாத்துறைஅலுவலர்கள், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மண்டல மேலாளர்கள், மேலாளர்கள், உதவிசெயற்பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.